ஆகஸ்ட் 16, 2009

உழவர் (விவசாயி)

மண்ணைக் இறையாய் மதித்து; அதுகுளிர
விண்ணையே பார்ப்பர் வெறித்தபடி! -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .

16 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அற்புதமான வரிகள்

வெண்பா அருமை

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

முதல் வருகை உங்கள் பக்கத்துக்குள்.... கவி வரிகள் ரொம்பப் பிடித்திருக்கிறது. இனி அடிக்கடி வருவேன்....

வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.....

சி.கருணாகரசு சொன்னது…

திரு
சப்ராஸ் அபூ பக்கர்
முதல் வருகை உங்கள் பக்கத்துக்குள்
உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க கருத்துரைத் தாங்க.

பெயரில்லா சொன்னது…

அருமை

Kala சொன்னது…

உழவு உளவு இல்லாத் தொழில்
உழவு உயர்வு தரும் தொழில்
உழவு உண்ணத் தரும் தொழில்
உழவு {மன}உளச்சலில்லாத் தொழில்

நல்ல கவி கருணாகரசு

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரை வழங்கிய கயையம் ஆனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க.

சி.கருணாகரசு சொன்னது…

கலா அவர்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி. நல்லா கவிதையிலே மடலும் வரைகின்றீர்கள் நன்றி.

ஹேமா சொன்னது…

கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா,
உங்களின் இந்த‌ கருத்துரையை மட்டும் நான் இயல்பானதாக கருத ஏலாது. உங்க கருத்துரையில்... புதைந்துகிடக்கிறது ஒரு இனத்தின் வரலாறும் வலியும். இங்கே "கவிமாலை" என்று ஒரு கவிதைக் கூடல், திங்கள் தோறும் நிழழ்கிறது. அதில் ஒரு முறை இப்படி கவிதை வாசித்தேன். அந்த ஈழக்கவிதையை நினைவு படுத்துகிறது உங்களின் கருத்துரை.
அந்த வரி...
நாளைய‌
அகழ்வாராச்சி சொல்லும்,
இங்கோர் இனம்
வாழ்ததன் வரலாற்றை...
... ... ...
இப்படி உங்களின் கருத்துரை எனக்குள் எதையாவது நினைவுக்கு கொண்டு வருகிறது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

// ஹேமா கூறியது...

கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//

நடுங்க வைக்கும் கருத்து...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அழகு வெண்பா

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
அழகு வெண்பா//

நன்றி நண்பா.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
// ஹேமா கூறியது...

கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//


நடுங்க வைக்கும் கருத்து...//


முற்றிலும் உண்மை ந‌ண்பா.

துபாய் ராஜா சொன்னது…

// ஹேமா கூறியது...

கருணாகரசு,உங்கள் வரிகளைவிட படம்தான் என் கண்ணில் சிக்கியது.இப்படி எங்கள் வன்னியில் ஆழமாக உழுதால் மண்டை ஓடுகள்தானே நிறைய வரும் !//

கண்களில் நீர் வரவைத்த கருத்து.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமாவின் கருத்துரையில் கன வலி நானும் உணர்ந்தேன் துபாய் ராசா.

Related Posts with Thumbnails