கழனியிலே...
பொதுவான உழைப்பாளி,
கவிதையிலே...
பொதுவுடைமைப் படைப்பாளி.
*
தன்மனதை...
கருப்பாகக் கொண்டவர்,
தன்மானத்தை...
இரும்பாகி நின்றவர்.
*
கவிஞர்...
இளமையிலே...
இறந்து போனவர்.
ஆனால்,
இமயமாய்...
இருந்து போனவர்.
*
*
( சிங்கப்பூரில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கலை இலக்கிய விழா 2009 க்கான, கழனிக்கவி மலருக்கான என் கவிதை)
Tweet |
4 கருத்துகள்:
இறந்தும் வாழ்பவர்கள் இவர்கள்.
//இறந்தும் வாழ்பவர்கள் இவர்கள்.//
ஆம் ஹேமா,
இறந்தும் சிலர் வாழ்வார்கள்... படைப்பினால் சிலர்,
படையினால் சிலர்!.
‘இமயமாய் இன்றும் மனங்களில்
இருப்பவர்’அவர் மறைந்தாலும்
அவர் கவிகள் பண்ணுடன்
தமிழ் மண்ணின் பெருமையுடன்
கமழ்கிறதல்லவா நல்ல கவிதை
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கவிஞி கலா அவர்களே.
கருத்துரையிடுக