ஆகஸ்ட் 13, 2009

பாரினைக் காக்கும் பசுமை

இயற்கையை மீறிய
சாமி இல்லை
இயற்கையை மீறினால்
பூமி இல்லை .
*

நரப்புகள் சில உருவியபின்

நடமாடும் மனிதனைப் போல்

இயற்கையை இழந்த பூமி

இதயம் வெடிக்கிறது !

இரத்தம் வடிக்கிறது.!

*

இயற்கையைச் சிதைத்தால் ,

நம்மைப் புதைக்கும் பூமியவே

நாமே புதைக்க நேரிடும்!

*

இயற்கையை மதித்தால் _அந்த

பசுமை ஒன்றே _இந்த

பாரினை காக்க போரிடும் !

*


12 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

இன்றைய சுழலில் அவசியமான கவிதை கவிஞரே!

Kala சொன்னது…

எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டாத்தான்
முடியும் ஒருவர் நினைத்தால் முடியும் காரியமல்ல


நரம்புகள் சில உருவியபின்{உறுவிய} என்று வருமென
நினைக்கின்றேன் சரியா?தப்பா?

வெதும்பி வெளிவந்த வார்த்தைகள்.......
கவியில்...... நிஜத்தில்.

ஹேமா சொன்னது…

பசுமையைக் காத்தாலே போதும் எங்கள் பசுமைக்கு.இந்தப் பன்றிக்காய்ச்சல் எதுவுமே வராது.நிச்சயம் எல்லோருமாகச் சேர்ந்து சிந்திக்கவேண்டிய விடயம்.இயற்கையைக் காப்போம்.எங்கே..!

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கண்ணன்.

சி.கருணாகரசு சொன்னது…

கலாவிற்கு,
கவிதையின் தவறை திருத்தியமைக்கு மிக்க நன்றிங்க கலா.( திருத்தி விட்டேன்) கருத்துரைக்கு நன்றி நன்றி நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமாவிற்கு,
தவறாது தளம் வந்து கருத்துரை வழங்கும்...தங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி.

தமிழ் சொன்னது…

/ இயற்கையை மீறிய
சாமி இல்லை
இயற்கையை மீறினால்
பூமி இல்லை ./

அருமை

சி.கருணாகரசு சொன்னது…

வாங்க திகழ்...சிறு இடைவெளிக்குபின் வருகை புரிந்துள்ளீர்கள்...வருகைக்கும்
கருத்துரை.......தருகைக்கும்...மிக்க நன்றி.

துபாய் ராஜா சொன்னது…

காலத்திற்கேற்ற கட்டாய பதிவு.

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க துபாய் ராசா.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

உங்கள் பக்கம் இன்றுதான் கண்டேன்.......கவிதைகள் அனைத்தும் அருமை...இனி அடிக்கடி வருவேன்...

சி.கருணாகரசு சொன்னது…

உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க முனைவர் சே கல்பனா அவர்களே.

Related Posts with Thumbnails