நகர்ந்துகொண்டே இருப்பது காலம் மட்டுமல்ல- அவர் கால்களும் தான்.
அந்த வட்டாரத்தில் எந்த திருவிழாவிலும் அவரை பார்க்கலாம்.
ஒரு மரக்கழியிலேயே தொங்குகின்றன- அவரின் மொத்த மூலதனமும். அவை... ஊசலாடியப்படியே இருக்கும் அவர் வருனாமத்தை போல. ஆனால்... அறுந்து விழுவதே இல்லை அவர் தன்மானத்தை போல.
ஒட்டிய கன்னம் உட்குழி கண்கள் வறண்ட உதடு வற்றிய வயிறு தேய்ந்த பாதம் காய்ந்த கைகள்- என வாழ்க்கை இவருக்குள் வாசிப்பதென்னவோ... சோகசுரம்தான். ஆனால், இவர் விற்பதென்னவோ புல்லாங்குழல்கள்.