கர்ப்பிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்ப்பிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூலை 28, 2010

கர்ப்பிணி

உருவான நாள்முதல்
உருமாற்றம்
உனக்கும்...
உனக்குள்ளும் !

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

ஆட்கொள்ளும்
அவ்வபோது ...
உடல் களைப்பு !
அது உனக்கு
அணுவெல்லாம்
உயிர் களிப்பு !!

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும் !!

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!






என் இல்லத்தரசிக்கு......
Related Posts with Thumbnails