வடிவிழந்துக் கிடக்கும்
வாழைத் தோட்டமாய் ...
எங்கள் வாழ்க்கை .
*
ஒவ்வொரு விடியலிலும்
எங்களை... நாங்களே
எண்ணிப் பார்த்துக்கொள்வோம்
இருந்தவர்களில் யாரேனும்
இறந்துவிட்டார்களா என அறிய .
*
பாடச்சாலைகளில் கூட
பதுங்கு குழிகளை நம்பும்
நாங்கள் எப்படி
பகடியோடுக் கதைத்து
பகட்டுடன் வாழ ஏலும் .
*
நிரந்தர அமைதி ...அல்லது
நித்தம் சில பாடைகள்
இதுதான் எங்களின்
இன்றையத் தேவைகள் .
*
நாற்புறமும் ...
செல்லடிக்கும் சத்தம்
பிய்ந்து தொங்கும் உறுப்பு
இரத்தம் வழியும் கண்கள் ...
இருந்தும்
வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
*
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
*
* (இந்தக் கவிதை மூன்று ஆண்டுகளுக்கு முன் , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக "கவிச்சோலை" யில் பரிசுப் பெற்று... கவிஞர் திரு மேத்தா அவர்களால் பாராட்டப் பட்ட கவிதை . பின் "நாம் " என்னும் காலாண்டிதழிலும் (அக் _ டிச 2008 ) அச்சேறியது)
| Tweet |
