இரும்பு பித்தளை ஈயம் என
எதை தின்று வாழ்வாய் ?
குயில் கிளிகள் குருவிகளை
எங்கே தேடி அலைவாய் ?
உடையை கல்லில் நெய்தா
உடுத்திக் கொள்ள முனைவாய்?
தண்ணீர் பாய்ந்த இடமெல்லாம்
தார்ச்சாலை புகுவது தகுமோ ?
விளைச்சல் குவித்த நிலத்தின்மீது
விண்தொடும் கட்டடம் முறையா ?
அழிவிற்கு பாதைப் போடும்
ஆடம்பர மனிதா ... உனக்கு
அவசர மற்றும்
அவசிய வேண்டுகோள் ஒன்று !
"விளை"நிலங்களை ...
"வீட்டு மனை" ...
"விலை" நிலங்கலாக்கும் ...
அது மட்டும் வேண்டாம் !
சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை ... கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை .