மணநாள் இன்று .
முத்தம் பரிசளிக்க ஆசை !
அப்பா தனிவீட்டில் ...
புது அம்மாவுடன் !.
அம்மா வேறொரு ஊரில்
புதுக் கணவருடன் !.
மணவிலக்கு பெற்றவர்களின்
மகள் நான் ...
தாத்தா வீட்டில்
தனியாக ...
(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )
Tweet |
Tweet |
அ = அம்மா... என்னைச் சுமந்த
உயிர்க் கடவுள்.
ஆ = ஆசை ... குழந்தை குங்குமப்பூ
இ = இந்தியா ... பகையோடு கூட்டு சேர்ந்து ,
சொந்தகாரர்களை கொன்ற நாடு.
ஈ = ஈகத்தில் வியந்தது ... நாட்டுக்காக
உயிராயுதமாய் மாறிய ஈழத்தமிழன் .
உ = உண்மையானது ... என் மனைவியின்
அன்பும் நட்பும் காதலும் .
ஊ = ஊரறிந்த ரகசியம் ... கலைஞர் ...
தாத்தாவின் உண்ணாவிரதம் .
எ = எதிர்ப்பது ... விளைநிலங்களை
விலைநிலங்களாக மாறுவதை .
ஏ = ஏற்பது ... தன்மானத்திற்கு
இழுக்கில்லா எதையும் .
ஐ = ஐந்தினையில் பிடித்தது ...
"முல்லை ".
ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .
ஓ= ஓட்டு எனப்படுவது ... விரலிலும்
மக்கள் விடியலிலும் கறைப்படிந்த கருப்பு .
ஒள = ஒளவ்வபோது நினைவுக்குள் ...
கம்பிச் சிறைக்குள் கரையும் தமிழினம் .
ஃ =ஃ இன் வலிமை ... உயிர்மெய் உருவாக்கத்திற்கான
உயிர் "மெய் ".
அழைத்தவர்களுக்கு நட்புடன் ஜமால் , சத்ரியன்
நன்றி
நான் அழைப்பது : கண்ணன் , மற்றும் பா. ரா ,
மற்றவரெல்லாம் எழுதிவிட்டதால் ...
அடுத்தவர் தொடரலாம் .... நன்றி வணக்கம் ...
அன்புடன் நான் சி.கருணாகரசு .
Tweet |
சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின்றன எலும்புகள்
வறுமைக் கோடுகளை .
அவர்கள் ...
பசியால் உயிர் கரைவதை
பார்த்தும் ...மனம் கரையா
பணக்கார நாடுகள் !
முள்வேலிக்குள் மூச்சுத் திணறும்
மூன்று நூராயிரம் தமிழ்ர்கள்
மரணத்தின் விளிம்பில்
மனம் வெதும்பி
காப்பாற்றுங்கள் என
கதறும் அந்த
ஈழத்தின் இன்னலை
காதில் ஏற்காது
கடமையாற்றும் நாடுகள் !.
ஒருவனுக்கு உணவில்லையேல்
உலகையே அழிக்கச் சொன்ன
பாரதி பிறந்த
பாரத நாட்டில்
சாகக்கிடக்கும் கிழவரைச்
சாக்கில் கட்டி ...
சுடுகாட்டில் வீசிய
சொந்தங்கள் !
இப்படியே ... நீளும்
இழிச் செயலால்
இன்று நான் தேடுவது ...
மனிதருக்குள்
"மனித நேயம் "
(கடற்கரைச் சாலை கவிமாலை போட்டிக்கு எழுதியது ... ஓகஸ்ட் - 2009 )
Tweet |
Tweet |
Tweet |