செப்டம்பர் 03, 2009

மனித நேயம்சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின்றன எலும்புகள்
வறுமைக் கோடுகளை .
அவர்கள் ...
பசியால் உயிர் கரைவதை
பார்த்தும் ...மனம் கரையா
பணக்கார நாடுகள் !

முள்வேலிக்குள் மூச்சுத் திணறும்
மூன்று நூராயிரம் தமிழ்ர்கள்
மரணத்தின் விளிம்பில்
மனம் வெதும்பி
காப்பாற்றுங்கள் என
கதறும் அந்த
ஈழத்தின் இன்னலை
காதில் ஏற்காது
கடமையாற்றும் நாடுகள் !.

ஒருவனுக்கு உணவில்லையேல்
உலகையே அழிக்கச் சொன்ன
பாரதி பிறந்த
பாரத நாட்டில்
சாகக்கிடக்கும் கிழவரைச்
சாக்கில் கட்டி ...
சுடுகாட்டில் வீசிய
சொந்தங்கள் !

இப்படியே ... நீளும்
இழிச் செயலால்
இன்று நான் தேடுவது ...
மனிதருக்குள்
"மனித நேயம் "
(கடற்கரைச் சாலை கவிமாலை போட்டிக்கு எழுதியது ... ஓகஸ்ட் - 2009 )

10 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்ணீர்தான் கை கோர்த்துக் கொள்கிறது.அதைவிடப் படம் வேதனையாய் இருக்கு.படம் சோமாலியாக இருந்தாலும் எங்கள் ஊரிலும் அங்கொன்று இங்கொன்றாக இப்படிப்பட்ட படங்கள் காணவே கிடைக்கிறது.

நட்புடன் ஜமால் சொன்னது…

வரிகளே தேவையில்லை

என்னை புரட்டி போட்டு விட்டது அந்தப்படம்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா ஹேமா கூறியது...
சொல்ல வார்த்தைகள் வருமுன் கண்ணீர்தான் கை கோர்த்துக் கொள்கிறது.அதைவிடப் படம் வேதனையாய் இருக்கு.படம் சோமாலியாக இருந்தாலும் எங்கள் ஊரிலும் அங்கொன்று இங்கொன்றாக இப்படிப்பட்ட படங்கள் காணவே கிடைக்கிறது.//

ஹேமா,
உண்ட‌து செறிக்க‌ ஒருகூட்ட‌ம் ஓடுது.
உண்ண‌ கிடைக்குமா ஒரு கூட்ட‌ம் ஓடுது ... இதுதான் உல‌க‌ம் .

சி.கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
வரிகளே தேவையில்லை

என்னை புரட்டி போட்டு விட்டது அந்தப்படம்.//

என்ன‌ செய்ய‌ ஜ‌மால்...இதுதான் ம‌னித‌ நேய‌மாக‌ உள்ள‌து.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின்றன எலும்புகள்
வறுமைக் கோடுகளை .
அவர்கள் ...
பசியால் உயிர் கரைவதை
பார்த்தும் ...மனம் கரையா
பணக்கார நாடுகள் !///

அருமையான வரிகள்,,, என்ன செய்வது நண்பா நம்மால் வரிகளில்தான் வெளிப்படுத்த முடிகின்றது பணம் படைத்தவர்கள்????????????????

துபாய் ராஜா சொன்னது…

//உண்ட‌து செறிக்க‌ ஒருகூட்ட‌ம் ஓடுது.
உண்ண‌ கிடைக்குமா ஒரு கூட்ட‌ம் ஓடுது ... இதுதான் உல‌க‌ம் . //

உண்மைதான் நண்பரே.

கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.

துபாய் ராஜா சொன்னது…

//உண்ட‌து செறிக்க‌ ஒருகூட்ட‌ம் ஓடுது.
உண்ண‌ கிடைக்குமா ஒரு கூட்ட‌ம் ஓடுது ... இதுதான் உல‌க‌ம் . //

உண்மைதான் நண்பரே.

கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
//உண்ட‌து செறிக்க‌ ஒருகூட்ட‌ம் ஓடுது.
உண்ண‌ கிடைக்குமா ஒரு கூட்ட‌ம் ஓடுது ... இதுதான் உல‌க‌ம் . //

உண்மைதான் நண்பரே.

கண்ணீரை வரவைத்துவிட்டன படமும், கவிதை வரிகளூம்.///


உண்மையான‌ உண‌ர்வு க‌ண்ணீரைத்தான் வெளியேற்றும் தோழ‌ரே.

அரங்கப்பெருமாள் சொன்னது…

வேதனையின் உச்சம். பணக்கார நாடுகளுக்கென்ன அதைப்பற்றி என்ன அவர்கள் கவலை தெரிவித்தால் போதாதா?
அமெரிக்கா போன்ற நாடுகளின் மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படுத்துகின்றன எனக் கேள்விப்பட்டிக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
வேதனையின் உச்சம். பணக்கார நாடுகளுக்கென்ன அதைப்பற்றி என்ன அவர்கள் கவலை தெரிவித்தால் போதாதா?
அமெரிக்கா போன்ற நாடுகளின் மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படுத்துகின்றன எனக் கேள்விப்பட்டிக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?//

த‌ங்க‌ளின் வ‌ருகைக்கு வ‌ண‌க்க‌ம்.

த‌ங்க‌ளின் த‌க‌வ‌ல் மிக‌வும் வ‌ருந்த‌த்த‌க்க‌தாக‌ உள்ள‌து.

இது ம‌னித‌ம் ம‌ற‌ந்த‌ ம‌னித‌த்தின் ம‌திப்பைத்தான் காட்டுகிற‌து... வேறு ஏன்ன‌த்த‌ சொல்ல‌.

Related Posts with Thumbnails