செப்டம்பர் 28, 2010

வானொலியில் நான். (ஆட்டோகிராப்) (சினேகன்)

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... “ஆட்டோகிராப்”  படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இது “கவிஞர் நேரம்” நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு.                                                ( பாடலுடன் )படம் :ஆட்டோகிராப்
பாடல் :கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி
பாடலாசிரியர்: திரு சினேகன்
படைப்பு :சி.கருணாகரசு.


செப்டம்பர் 15, 2010

எங்கள் உலகம்! (எந்த பெயர் சூட்டலாம்? )

வணக்கம்....

செப்டம்பர் 15 .... எங்கள் வாரிசின் வருகைக்கென... மருத்துவர் குறித்த தேதி.
செப்டம்பர் 12... நாங்கள் பெற்றோரான நாள்.
எங்கள்...
அன்பணுக்களின் கலகம்!
அதில் வந்த...
இவனே...
இனியெங்கள் உலகம்!!


உலகுக்கு இவன்
புது வரவு!_எங்கள்
உயிருக்கு இவனே
முதல் உறவு!!ஈர...
தொப்பூழ் கொடியுடன்
உன்னை ஏந்திய தருணம்
ஏனோ கண்ணீர் கசிந்தது!


எனக்குள் இருந்த
எல்லாத் துயரும்
அந்த நொடியில் நசிந்தது!!
பாலினம்... ஆண்

எடை .... 3.600 கிலோ
பிறப்பு வகை.... இயல்பு வகை... (அதாவது ஆயுதமின்றி)
                                   

என்ன பெயர் சூட்டலாம்?
இருபாலினத்திலும்... பெயர்களை தெரிவு செய்து வைத்திருந்தோம்.
குழந்தை பிறந்த இரண்டாம் நாளிலிருந்து பெயருக்கான ஓட்டெடுப்பு நடைபெறுகிறது
இந்த எழுத்தில் இப்படிதான் இருக்க வேண்டும் எந்த வரையறையும் வகுத்துக்கொள்ள விருப்பவில்லை
பெயர் நல்ல தமிழ் பெயராக சுருக்கமாக இருக்கனும். எளிமையா இருக்கனும்....
ஆகையால் கீழே உள்ள 4 பெயர்களில் உங்களுக்கு பிடித்த ஒரு பெயரை தேர்வுசெய்யுங்கள்... எந்த பெயர் அதிக ஓட்டு பெருகிறதோ... அந்த பெயரைதான் சூட்டுவோம்.1.இளங்கதிர்


2.நாவலன்


3.முகிலன்


4.செழியன்.

எங்கள் பகுதியில் குழந்தையை பார்க்க வரும் உறவினரும் நண்பர்களும் குழந்தையின் கையில் பணம் வைத்துதான் தூக்குவார்கள்....(இது சடங்காம்?) அதில் எனக்கு உடன்பாடில்லாததால்..... இப்படி எழுதி மருத்துவமனையிலும்.... தற்போது வீட்டிலும் வைத்திருக்கிறேன்....இது எனக்கு பல சங்கடங்களையும்.... எதிர் விவாதங்களையும்... வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் பணம் வாங்க மறுத்து விட்டோம்
அன்புடன்... நாங்கள்.


க. சிவரஞ்சினி.


சி. கருணாகரசு.  (தற்காலிக தொடர்புக்கு..... 7502827721)

செப்டம்பர் 02, 2010

நாளைய உலகம்! (தாயகம் வருகிறேன் (செல்கிறேன்).........)

நாம் வியந்துப் போற்றும் 
அதி நவீனங்கள் அத்தனையும் 
பழமையென 
பயனற்றுப் போகும் !

நம்,
கற்பனைக்கு சிக்காத
பிரமாண்டங்கள் எத்தனையோ 
மலிந்து கிடக்கலாம் _இந்த 
மனிதர்களுக்கு  மத்தியில்.

இருந்தென்ன... 

மனித உணவு 
மாத்திரையாய்  விற்கும்!
காற்றுக்கு   விலைகொடுக்க
கடைகளில் வரிசை நிற்கும்!!.


வலைத்தளத்தின், 
படைப்பாளிகளே... படிப்பாளிகளே 
உயிர் போகும் தருணத்திலும்  என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது வலைத்தளம்.
ஆகையால் உங்களிடம் சொல்லிக்கொண்டு  தாயகம் செல்கிறேன்  (வருகிறேன்)
 மீண்டும் வலைப்பக்கம் வருவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். இன்னும் 2 வாரங்களுக்கு பின் தானியங்கி முறையில் என் இடுகை வெளியாகும் ... அதை சேர்க்க வேண்டிய இடத்தில் யாராவது சேர்த்துவிடுங்கள்.
இதுவரை உங்க ஆதரவு இனியும் தொடர வேண்டுகிறேன்.


அனைவருக்கும் நன்றி ... சென்று வருகிறேன் .
Related Posts with Thumbnails