செப்டம்பர் 01, 2009

முத்தம் ?!

என்னைப் பார்த்துக்
கையசைத்து
கண் சிமிட்டுகிறது .

என் பார்வையும்
அந்த முகத்திலேயே
நிலைகுத்தி நின்றுவிட்டது .

என் மனம்
சிறகைப் பூட்டிக்கொண்டது .
கை கோர்த்து
கனவில் மிதக்கிறேன் ...
இல்லை பறக்கிறேன் .

மின்னலாய் ஓர் ஆசை
அந்த மெல்லிய கன்னத்தில்
ஒரு ...முத்தமாவது ...

முன்னனுபவம் இல்லை
பதற்றமாகவும் இருக்கிறது
பார்த்து விடுவார்களோ ...என்று

... ... ...
பார்த்துக் கொண்டே
பயணிக்கிறேன் .

பேருந்தின்
முன்னிருக்கையிலிருந்து
பின்னால் இருக்கும்
என்னைப் பார்த்து
கையசைத்து
கண்சிமிட்டும் ...
அந்தக் குழந்தையை !.

(எனது "தேடலைச் சுவாசி" நுலிலிருந்து )


11 கருத்துகள்:

வசந்தி சொன்னது…

கவிதை மிக மிக அருமை

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகான கவிதை

இயல்பான எண்ணத்தின் வெளிப்பாடு

(ஆனால் வேறு விதமாய்)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அழகான முத்தம்தான்

சி.கருணாகரசு சொன்னது…

வசந்தி கூறியது...
கவிதை மிக மிக அருமை//

க‌ருத்துரைக்கு ந‌ன்றி வ‌ச‌ந்தி.

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க ஜமால்.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
அழகான முத்தம்தான்

மிக்க நன்றி நண்பா.

பா.ராஜாராம் சொன்னது…

கவிதையும் புகை படமும் அருமை கருணா.

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க அய்யா. எனது பெயரை வெறும் கருணா என்றெழுதாமல்.தயவு செய்து முழுப் பெயரையும் எழுதுங்கள் அய்யா. இல்லையேல் "நல்ல கருணா" என்றாவது எழுதுங்கள்...தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அய்யா.

துபாய் ராஜா சொன்னது…

//பேருந்தின்
முன்னிருக்கையிலிருந்து
பின்னால் இருக்கும்
என்னைப் பார்த்து
கையசைத்து
கண்சிமிட்டும் ...
அந்தக் குழந்தையை !. //

பேருந்து பயணத்தின் அனுபவத்தை அழகாக வரிகளில் கொண்டு வந்துள்ளீர்கள்.

குழந்தைப்படமும் கொள்ளை அழகு.

அன்புடன் நான் சொன்னது…

மிக்க நன்றிங்க துபாய் ராசா.

ers சொன்னது…

விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்


புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Related Posts with Thumbnails