ஆகஸ்ட் 31, 2009

விடியும் உன் கிழக்கு

காலம் கனியுமென்றோ
கதவு திறக்குமென்றோ
காத்து கிடக்காதே தோழா !-வாழ்வு
கணத்தில் ஆகிவிடும் பாழாய் !!
*
சோர்ந்து கிடக்காமல்
சுகமெனப் படுக்காமல்
கடமை ஆற்றிடு நீயும் !-அன்றோ
கஷ்டமெல்லாம் ஓயும் !!
*
சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!
*
தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!
*
கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!
*
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

16 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

அருமை தோழரே.
தற்கால தலைமுறைக்கு தினசரி நினைவில் கொள்ள வேண்டிய கவிதை .

நட்புடன் ஜமால் சொன்னது…

தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!]]


அழகு.

Admin சொன்னது…

//சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!//

அருமை

ஹேமா சொன்னது…

வாழ்வியல்.சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.தவற விட்டோமோ நினைத்தாலும் ஏங்கினாலும் பிடிக்கமுடியாத ஒன்று.

//கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.காசு இருந்தால் மட்டுமே உறவுக்குக்குச் சாமி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

[[சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!]]

அருமையான வரிகள்... ரசித்து ரசித்து பார்த்தேன் நண்பா,... பாராட்டுகல்

சி.கருணாகரசு சொன்னது…

கண்ணன் கூறியது...
அருமை தோழரே.
தற்கால தலைமுறைக்கு தினசரி நினைவில் கொள்ள வேண்டிய கவிதை //

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க தோழரே.

சி.கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!]]


அழகு.////////

நன்றிங்க ஜமால்.

சி.கருணாகரசு சொன்னது…

சந்ரு கூறியது...
//சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!//

அருமை//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ ச‌ந்ரு...
முத‌ல் வ‌ருகை தொட‌ர்ந்து வாங்கோ...க‌ருத்துக‌ளைத் தாங்கோ. ந‌ன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
வாழ்வியல்.சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.தவற விட்டோமோ நினைத்தாலும் ஏங்கினாலும் பிடிக்கமுடியாத ஒன்று.

//கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.காசு இருந்தால் மட்டுமே உறவுக்குக்குச் சாமி.

நன்றிங்க ஹேமா...உங்களின் தொடர் கருத்துரைக்கு.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
[[சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!]]

அருமையான வரிகள்... ரசித்து ரசித்து பார்த்தேன் நண்பா,... பாராட்டுகல்//


மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஞான‌சேக‌ர‌ன்...தொட‌ர்ந்து க‌ருத்துரை வ‌ழ‌ங்கும் உங்க‌ளுக்கு ம‌ன‌மார்த்த‌ ந‌ன்றி.

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

அன்புத் தோழர் சி.கருணாகரசு விடியும் உன் கிழக்கு கவிதை அருமை.
"உனக்காகவும் சேமி! செய்தால் உறவுக்கு நீயே சாமி!!" பாராட்டுக்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

இங்கே வாருங்கள்

கார்த்திக் சொன்னது…

அழகான கவிதை.. அற்புதமான தேடல்..

சி.கருணாகரசு சொன்னது…

கார்த்திக் கூறியது...
அழகான கவிதை.. அற்புதமான தேடல்..//கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கார்த்திக்..."தேடலைச் சுவாசி"க்கலாம்... அவ்வப்போது.

சி.கருணாகரசு சொன்னது…

முனைவர் நா.இளங்கோ கூறியது...
அன்புத் தோழர் சி.கருணாகரசு விடியும் உன் கிழக்கு கவிதை அருமை.
"உனக்காகவும் சேமி! செய்தால் உறவுக்கு நீயே சாமி!!" பாராட்டுக்கள்//


முனைவரே தங்களின் பாராட்டே என‌க்கு விருது.
வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ ந‌ன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
இங்கே வாருங்கள்

வந்தேன் ஜமால்.

Related Posts with Thumbnails