உன்னை விரும்பி
உன்னை நினைத்து
உன்னையே வேண்டிய
உயிரின் இதயத்தை
வேரோடு பிடுங்கிச் செல்கிறாய் !
என் ,
காதலின் உறுதியையும் ...
கடைசித்துளி குருதியையும்
சிதைத்தப்படி !
*
ஒரே நொடியில்
இழந்து தவிக்கிறேன் ...
என்னையும் ,
உன்னையும்.
*
உன்னை நினைத்தவனின்
உயிரை உருவிச் செல்வது
மென்மையே உனக்கு அழகா ?
என்னை வதைத்து
எங்கோ நீ செல்வது
பெண்மையே உனக்கு சிறப்பா ?
*
அய்யய்யோ ... என்னை ...
"இதயமே இல்லாதவன் "
இறந்து கிடக்கிறான் என்பார்களே !
...
அடியே ,
நீயாவது சொல்வாயா ..
என்னால்தான் ...அவன்
"இற(ழ)ந்து கிடக்கிறான் " என்று?!.
( நீண்ட இடைவெளிக்கு பின் ஓர் காதல் கவிதை)
Tweet |
6 கருத்துகள்:
இதயம் இல்லாதவன் கவிதையெல்லாம் எழுதுதுறானே !அதுவும் இவ்வளவு மனசைத் தொடுறமாதிரி.
படம்...இதைமாதிரி ஒரு படம் சத்ரியனும் போட்டிருந்தார்.
கவிதைக்கு ஏற்றமாதிரி இருந்தாலும் என்னவோ ஒரு மாதிரி.
இதயம் இல்லாதவன் கவிதையெல்லாம் எழுதுதுறானே !அதுவும் இவ்வளவு மனசைத் தொடுறமாதிரி.
படம்...இதைமாதிரி ஒரு படம் சத்ரியனும் போட்டிருந்தார்.
கவிதைக்கு ஏற்றமாதிரி இருந்தாலும் என்னவோ ஒரு மாதிரி.
//நீண்ட இடைவெளிக்கு பின் ஓர் காதல் கவிதை//
அட.. நம்ப முடியவில்லை அருமையான கவிதை
கருத்துரைக்கு நன்றிங்க ஹேமா. கவிதைக்கு தகுந்தப்படம் தேடியதில் , இதுதான் பொருத்தமாக இருந்தது. அதுவும் வாடகை கணினியில் அதிக நேரம் தேடுவதும் சிரமம் தானே?.
கருத்துரைக்கு நன்றிங்க கண்ணன். நம்பித்தான் ஆகனும்... காரணம் ,இதுப்போன்றக் கவிதையில் தான் என் ஆரம்பகாலம் தொடங்கியது.
ஒவ்வொரு வரிகளும் காதலின் வலியை தூக்கி நிறுத்துகிறது...
மிக அருமை...
கருத்துரையிடுக