ஆகஸ்ட் 05, 2009

மலர்கள்... மீண்டும் மலரும்

யானைக் கூட்டம் புகுந்தழித்தப்பின்
வடிவிழந்துக் கிடக்கும்
வாழைத் தோட்டமாய் ...
எங்கள் வாழ்க்கை .
*
ஒவ்வொரு விடியலிலும்
எங்களை... நாங்களே
எண்ணிப் பார்த்துக்கொள்வோம்
இருந்தவர்களில் யாரேனும்
இறந்துவிட்டார்களா என அறிய .
*
பாடச்சாலைகளில் கூட
பதுங்கு குழிகளை நம்பும்
நாங்கள் எப்படி
பகடியோடுக் கதைத்து
பகட்டுடன் வாழ ஏலும் .
*
நிரந்தர அமைதி ...அல்லது
நித்தம் சில பாடைகள்
இதுதான் எங்களின்
இன்றையத் தேவைகள் .
*
நாற்புறமும் ...
செல்லடிக்கும் சத்தம்
பிய்ந்து தொங்கும் உறுப்பு
இரத்தம் வழியும் கண்கள் ...
இருந்தும்
வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
*
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
*
*
(இந்தக் கவிதை மூன்று ஆண்டுகளுக்கு முன் , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக "கவிச்சோலை" யில் பரிசுப் பெற்று... கவிஞர் திரு மேத்தா அவர்களால் பாராட்டப் பட்ட கவிதை . பின் "நாம் " என்னும் காலாண்டிதழிலும் (அக் _ டிச 2008 ) அச்சேறியது)

6 கருத்துகள்:

Kala சொன்னது…

நம்பிக்கை ஊட்டும் கவிதை
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மலரட்டும்”அனைத்தும்”அங்கு.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நிரந்தர அமைதி ...அல்லது
நித்தம் சில பாடைகள்
இதுதான் எங்களின்
இன்றையத் தேவைகள் /
நறுக்கென்னும் கவிதை வரிகள்...
ஆழமான அழுத்தமான வரிகள்...

சி.கருணாகரசு சொன்னது…

நிச்சயமாக அங்கே அனைத்தும் மலரும்... காலம்தான் மாறுப்படும், கருத்துரைக்கு நன்றிங்க கலா.

சி.கருணாகரசு சொன்னது…

உங்களின் கருத்துரைக்கு நன்றிங்க முனைவரே.

ஹேமா சொன்னது…

கார்த்திகைப் பூ கண்ணில் நீரை வரச் செய்துவிட்டது.
கவிதை வலி.நிரந்தர வலி.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு நன்றிங்க ஹேமா. ஒவ்வொருத்துளி கண்ணீருக்கும் காலம் நல்ல கனிவைத்தரும், கத்திருப்போம்.

Related Posts with Thumbnails