ஆகஸ்ட் 27, 2009

தண்ணீர்


காலம் கசக்கி எறிந்த
கந்தல் துணியாய்
கட்டிலில் அவர் .
@
அசையா உடலில்
அசைவது விழிகள்மட்டும் .
அதுதான் ...
உயிர் இருப்பதற்கான
ஒரே அடையாளம் .
@
வெளியூர்ப் பயணம்
வேண்டாமாம் இன்றைக்கு
சில பெருசுகளின் வேண்டுகோள் .
@
பத்து நாளாய் இப்படிதான்
பொழப்பு கெடுது...
சிலரின் ஆதங்கம் .
@
இன்றைக்கு எப்படியும்
முடிந்து விடும் ...
நம்பிக்கையோடுச் சிலர் .
@
எதிர்பார்ப்பு ...
எப்படி இருப்பினும் ,
நொறுங்கிய மனதுடன்
நெருங்கிய உறவுகள்
ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன
உயிர்த் தண்ணீர் !

20 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் வேண்டுதல்.முதுமைக்கு முன்னமே நான் இறந்துவிட வேண்டும்.

Jerry Eshananda சொன்னது…

கண்ணீர் வரவைத்த தண்ணி.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இழுத்துக்கொண்டு இருக்கும் வயதானவர்களின் பாடு இருக்கே. அது சொல்ல முடியாத சோகம்.

வால்பையன் சொன்னது…

வாழ்வியல் எதார்த்தம்!

நட்புடன் ஜமால் சொன்னது…

நெருங்கிய உறவுகள்
ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன
உயிர்த் தண்ணீர் ! ]]

உண்மை தான்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

எதார்த்தமான ஒரு நடை... நல்லாயிருக்கு

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இதே போல் உள்ள என் இடுகை படித்து பார்க்கவும்

சி.கருணாகரசு சொன்னது…

//முதுமையை நினைத்தால் பயமாய்த்தான் இருக்கிறது.என் வேண்டுதல்.முதுமைக்கு முன்னமே நான் இறந்துவிட வேண்டும்//

ஹேமா பயம் வேண்டாம். நினைத்தால் முதுமையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றிங்க ஜெரி.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு நன்றிங்க பால்ராஜ். இந்த கவிதையில் முக்கால்வாசி நான் உணர்ந்தது.

சி.கருணாகரசு சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க வால்பையன்(பார்த்தால் அப்படி தெரியல) இது என்னால் உணரப்பட்ட ஒன்று அதற்கு கொஞ்சம் தமிழ் சேர்த்தேன்.

சி.கருணாகரசு சொன்னது…

ஜமால், முதல் வருகைக்கு ஒரு கைகுலுக்கு . கருத்துரைக்கு மிக்க நன்றி. இது உணரப்பட்ட உண்மைதான்.

சி.கருணாகரசு சொன்னது…

உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஞானசேகரன். இது உணரப்பட்ட உண்மைதான்.

சி.கருணாகரசு சொன்னது…

இதோ வருகிறேன் ஞானசேகரன்.

யாத்ரா சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க

சி.கருணாகரசு சொன்னது…

முதல் வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றிங்க யாத்ரா.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நெகிழ்வா இருக்கு கருணா..

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க பா.ராசாராம். முதல் வருகைக்கும்... கருத்துக்கும்.

திரு. பா.ராசாராம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... என்னை வெறும் "கருணா" என்றழைக்க வேண்டாம், சிரமம் பாராது என் முழு பெயரையும் எழுதவும். இல்லையேல் "நல்ல கருணா" என்றாவது எழுதவும். வெறுமனே கருணா எண்றால் குமட்டாலாக இருக்கிறது

(தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து என் தளம் வாருங்கோ)

துபாய் ராஜா சொன்னது…

பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம்... என்ற பழமொழிதான் உடனே நினைவிற்கு வந்தது.

சி.கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம்... என்ற பழமொழிதான் உடனே நினைவிற்கு வந்தது.//

தொட‌ர் வ‌ருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ துபாய் ராசா.

Related Posts with Thumbnails