ஜூலை 28, 2009

பொன்னாடை!!

வெப்பத்தில் கருகும் நாம்
போர்த்துவதும் ,
போர்த்திக்கொள்வதும் ஏனென
புரியவில்லை எனக்கு .
*
அரங்கம் அதிரவே
அறிவிக்கின்றார்கள்
"பொன்னாடை" என்று .
*
அவை ,
பொன்னாடைகள் அல்ல
புகைப்படத்திற்கான
"பொய்"யாடைகள்.
*
ஈரம்கூட உறிஞ்சாத
இது ,
பாவிப்பதெதற்கும்...
பயனற்றது .
*
இருந்தும் ...
போர்த்தப்பட்டு
மடிப்பு கலையாமல்
மடித்து வைக்கப்படுகிறது .
இன்னொரு நிகழ்வில் ...
இன்னொருவருக்கு ,
போர்த்தவும்...
புகைப்படம் எடுக்கவும் .
*
இதை வாங்குவது ...
வீண் என்பேன்
இதற்கென ஏங்குவது ...
ஏன் என்பேன் ?.

6 கருத்துகள்:

சாந்தி நேசக்கரம் சொன்னது…

//அவை ,
பொன்னாடைகள் அல்ல
புகைப்படத்திற்கான
"பொய்"யாடைகள்.//

உண்மை உண்மை உண்மையைத்தவிர வேறெதுவும் இல்லை.

ஆளையாள் முதுகு சொறிய இந்தப் பொ)ப)ன்னாடையும் விழாக்களும்.

பாராட்டுக்கள்.

சாந்தி

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க சாந்தி.

Kala சொன்னது…

எனக்கும் இதில் உடன்பாடில்லை
ஆகவே இருவரும் ஒரே கட்சி
கொஞ்சம் காத்திருங்கள்
போர்க்க வேண்டாமா?
இதோ...கிளம்பிகிட்டே இருக்கன்
எங்க தெரியுமா?
கட்சி என்று வந்தால்
பென்னாடை வேண்டாமா?

சி.கருணாகரசு சொன்னது…

இது நல்லா இருக்கு ...கலா பொன்னாடை போர்த்தாத கட்சி ஒன்னு ஆரபிக்கலாம் தான்.

ஹேமா சொன்னது…

கருணாகரசு,மீண்டும் சமூகத்தோடு உங்களுக்கான எரிச்சலும் கோபமும்.பொன்னாடை போர்த்துவதும் வாங்கிக் கொள்வதும் தப்பில்லை.வாங்கிக்கொள்பவர்கள் அதற்குரியவரா என்பதில்தான் கவனமாக இருக்க வேண்டும்.

(பி.கு-எங்கள் வீடுகளிலும் (நாதஸ்வரக் குடும்பம்)சிலசமயங்கள் பொன்னாடை கிடைக்கும்.எங்களுக்கு முழுப்பாவாடைகள் விதம் விதமாய்க் கிடைக்குமே!)

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமாவிற்கு....

தகுதியானவர்களுக்கு பொன்னாடை என்பதையும்.... தகுதியானவர்களின் பொன்னாடை என்பதையும் ஏற்கிறேன்.

ஆனால் வெறும் காக்காய் பிடிக்கும் வேலைக்கென பயன் பாட்டைதான் மறுக்கிறேன்.

பொன்னாடையில் பாவாடை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாதே... கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails