டிசம்பர் 08, 2009

கண்ணாடி

மிக அழகிய
கண்ணாடிச் சுவர்கள் ...
முள்வேலியை விடவும்
மூர்க்கமாய் !!!

தரையிறங்கிய விமானத்திலிருந்து
வெளியாகும் உறவுக்காக
காத்திருக்கும் ... தருணங்களில் .

(அண்மையில் விமான நிலையத்தில் இல்லத்தரசிக்காக காத்திருந்தபோது )

44 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அந்த இடத்தில்கூட அந்த நிமிடத்திகூட முள்வேலி உங்கள் மனக்கண்ணில்.அரசு தலை தாழ்த்தி வனங்கிக்கொள்கிறேன் உங்கள் தமிழ் உணர்வுக்கு.

புலவன் புலிகேசி சொன்னது…

பார்ப்பதில் எல்லாம் கவிதை..

இன்றைய கவிதை சொன்னது…

அருமை வரிகள், கருணா!
இன்னும் எழுதுங்கள்!!

-கேயார்

துபாய் ராஜா சொன்னது…

அரசுவும்,அரசியும் இணைந்தது குறித்து மகிழ்ச்சி.இனிமை வாழ்வில் இளவலும் வந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

அருமை... காத்திருத்தலின் வலியை அருமையாச் சொல்லியிருக்கீங்க

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//(அண்மையில் விமான நிலையத்தில் இல்லத்தரசிக்காக காத்திருந்தபோது )//

ம்ம்ம் வந்துட்டாங்க வாழ்த்துகள்..

காத்திருத்தலின் வலிகள் புரிகின்றது நண்பா,....

அரங்கப்பெருமாள் சொன்னது…

காத்திருத்தல் கொஞ்சம் சுகம்தான்.அதுக்குள்ளே அவசரப்படுறீங்களே?


//முள்வேலியை விடவும்//

உணர்வுகள் வற்றுவதில்லை,குருதியில் கலந்திருத்தலால்.

க.பாலாசி சொன்னது…

கவிதையும் சிந்தனையும் அருமையாக உள்ளது அன்பரே....

Kala சொன்னது…

ஆமாமா!! சில கிசு..கிசு
கிராமத்தில இருந்து நகரத்துக்கு
மயில் பறந்து வந்ததாம்...
“தோகை”யின் அழகில்...மயங்கி
“சந்தித்த வேளியில் சிந்திக்கவேயில்லை
தந்து விட்டேன் என்னை” என்று
விமானநிலையதிலிருந்து......
பலமாக ஒரு பாட்டு வந்ததாம்....!

ஒவ்வொரு இடமாக....
கொக்கு பற..பற கோழி பற,..பற
மைனா பற,..பற மயிலே......பறறற
தெரியாததை சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியருமாம்!!

நீ போகும் பாதையில் மனசு போகுதே
மானே.....என்று காதலுமாம்!!

உன் சமையலறையில் நான்
உப்பா,...?சக்கரையா.... ?என்று கேட்டு
கேள்வியும் பதிலும் புதிரங்கமும்
நடக்குதாம்...!!

இது நம்பத் தகுந்த வட்டாரங்களின் கிசுகிசு...

வசந்தி சொன்னது…

காத்திருத்தலும் ஒரு சுகம்தான் கவிதை அருமை... துணைவியாரை கேட்டதாக சொல்லவும்.....

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அந்த இடத்தில்கூட அந்த நிமிடத்திகூட முள்வேலி உங்கள் மனக்கண்ணில்.அரசு தலை தாழ்த்தி வனங்கிக்கொள்கிறேன் உங்கள் தமிழ் உணர்வுக்கு.//
மிக்க நன்றிங்க ஹேமா

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
பார்ப்பதில் எல்லாம் கவிதை..//
வருகைக்கும்... பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க
புலவன்.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
அருமை வரிகள், கருணா!
இன்னும் எழுதுங்கள்!!

-கேயார்//

ஊக்கத்துக்கு மிக்க நன்றிங்க கேயார்.

அன்புடன் நான் சொன்னது…

கவிக்கிழவன் கூறியது...
நன்றாக உள்ளது//

மிக்க நன்றிங்க கவி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
அரசுவும்,அரசியும் இணைந்தது குறித்து மகிழ்ச்சி.இனிமை வாழ்வில் இளவலும் வந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.//

தங்களின் வார்த்தைக்கும்... வாழ்த்துக்கும்... மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
அருமை... காத்திருத்தலின் வலியை அருமையாச் சொல்லியிருக்கீங்க//

மிக்க நனறிங்க இராகவன்

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//(அண்மையில் விமான நிலையத்தில் இல்லத்தரசிக்காக காத்திருந்தபோது )//

ம்ம்ம் வந்துட்டாங்க வாழ்த்துகள்..

காத்திருத்தலின் வலிகள் புரிகின்றது நண்பா,....//

வந்தாச்சு...அதான் வலைப்பக்கம் வரமுடியல... பொறுத்தருள்க...... வருகைக்கு மிக்க நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
காத்திருத்தல் கொஞ்சம் சுகம்தான்.அதுக்குள்ளே அவசரப்படுறீங்களே?


//முள்வேலியை விடவும்//

உணர்வுகள் வற்றுவதில்லை,குருதியில் கலந்திருத்தலால்.//

வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் அன்பிற்கு தலைவணங்குகிறேன்

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
ஆமாமா!! சில கிசு..கிசு
கிராமத்தில இருந்து நகரத்துக்கு
மயில் பறந்து வந்ததாம்...
“தோகை”யின் அழகில்...மயங்கி
“சந்தித்த வேளியில் சிந்திக்கவேயில்லை
தந்து விட்டேன் என்னை” என்று
விமானநிலையதிலிருந்து......
பலமாக ஒரு பாட்டு வந்ததாம்....!

ஒவ்வொரு இடமாக....
கொக்கு பற..பற கோழி பற,..பற
மைனா பற,..பற மயிலே......பறறற
தெரியாததை சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியருமாம்!!

நீ போகும் பாதையில் மனசு போகுதே
மானே.....என்று காதலுமாம்!!

உன் சமையலறையில் நான்
உப்பா,...?சக்கரையா.... ?என்று கேட்டு
கேள்வியும் பதிலும் புதிரங்கமும்
நடக்குதாம்...!!

இது நம்பத் தகுந்த வட்டாரங்களின் கிசுகிசு...//

இது கிசுகிசு இல்ல... கிட்டவே இருந்து பார்த்திருக்கனும்.... இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
கவிதையும் சிந்தனையும் அருமையாக உள்ளது அன்பரே....//

வருகைக்கும் கருத்து தருகைக்கும்... மிக்க நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
காத்திருத்தலும் ஒரு சுகம்தான் கவிதை அருமை... துணைவியாரை கேட்டதாக சொல்லவும்.....//

கருத்துக்கு மிக்க நன்றி.... ரஞ்சனி மிக நலம்.

Admin சொன்னது…

நல்ல வரிகள். இரசித்தேன் நண்பா.

தமிழ் சொன்னது…

உண்மை தான்

/முள்வேலி விடவும்/


கண் முன்னே காட்சியாய்

இந்த‌க் க‌விதையைப் ப‌டிக்கையில்
தீப‌த்திரு நாளுக்காக‌ நீங்க‌ள் 98.6யில் வாசித்த‌ க‌விதை நினைவிற்கு வருகிற‌து.


அன்புட‌ன்

திக‌ழ்

அரங்கப்பெருமாள் சொன்னது…

//இது நம்பத் தகுந்த வட்டாரங்களின் கிசுகிசு..//

நான் ஆளக் காணாமேன்னு தேடினேன். நீங்க கிசுகிசு சொல்லுறீங்க. யாரு அந்த வட்டாரம்?

// இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//

இப்பத்தான் ஹேமா பதிவுல, நான் கருப்பு,நாம் கருப்பு அப்பிடின்னு நிறைய பேரு கூவுனாங்க. யாருங்க அது? யரோ ஆணாத்தான் இருக்கனும். கருப்பர் சொல்லுறீங்க. [ஜூனியர் விகடன் - ல ’உஷ்’ படிக்கிற மாதிரி இருக்கே?

Kala சொன்னது…

// இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//கருணாகரசு..பெருமாள் எனக்கு எந்தக்
கறுப்பினத்தவர்களும்{ஆபிரிக்கர்கள்}
நண்பர்கள் கிடையாது.

அப்படி இருந்தாலும்......இந்தப் பாட்டெல்லாம்..
அவர்களுக்குப் புரியுமா?

இதுதான்ஜயா கிசு...கிசு கிச்சுக்கிச்சு...

நான் “எதிலும்”கறுப்பு என்று சொல்லும்
சொல்லை வெறுப்பவள் !
அப்புறம் நான் “அவருக்காக” என் சாமியை
{சின்னக்கருப்புச்சாமி,பெரியகருப்புச்சாமி}
குறை கூறியதற்காக,.....மானநஷ்ர வழக்கு
தொடுத்திடவன் ..........

சத்ரியன் சொன்னது…

//இது கிசுகிசு இல்ல... கிட்டவே இருந்து பார்த்திருக்கனும்.... இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//

கருணாகரசு,

யாரு அந்த "கருப்பன்?" ...யாரு?...யாரு?...யாரு?...?????

எப்ப பாத்தாலும், எங்க பாத்தாலும்.. சந்தேகம். என்ன "கண்ணோ" உங்களுக்கு...!

விஜய் சொன்னது…

காத்திருத்தலில் கூட கவிதையா?

கலக்கிறீங்க அரசு

(கருணா என்ற வார்த்தை எனக்கு பிடிப்பதில்லை)

விஜய்

rvelkannan சொன்னது…

காத்திருத்தலும் அதன் சுழலையும் அதனின் வலியும் அருமையாக வெளிப்படுத்தும் கவிதை தோழரே.
தங்களுது துணைவியாருக்கு எங்களது அன்பு. (சரி...,சரி... , கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு நாலு இடம் சுத்தி காட்டுங்க. )

rvelkannan சொன்னது…

தோழரே
தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...
என் பக்கம் வருக

அன்புடன் நான் சொன்னது…

சந்ரு கூறியது...
நல்ல வரிகள். இரசித்தேன் நண்பா.//

மிக்க நன்றிங்க சந்ரு.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
உண்மை தான்

/முள்வேலி விடவும்/


கண் முன்னே காட்சியாய்

இந்த‌க் க‌விதையைப் ப‌டிக்கையில்
தீப‌த்திரு நாளுக்காக‌ நீங்க‌ள் 98.6யில் வாசித்த‌ க‌விதை நினைவிற்கு வருகிற‌து.


அன்புட‌ன்

திக‌ழ்//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க திகழ்... தங்களின் வருகை எனக்கு மிக பெருமை.
அன்புடன்... நான்
கருணாகரசு.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
//இது நம்பத் தகுந்த வட்டாரங்களின் கிசுகிசு..//

நான் ஆளக் காணாமேன்னு தேடினேன். நீங்க கிசுகிசு சொல்லுறீங்க. யாரு அந்த வட்டாரம்?

// இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//

இப்பத்தான் ஹேமா பதிவுல, நான் கருப்பு,நாம் கருப்பு அப்பிடின்னு நிறைய பேரு கூவுனாங்க. யாருங்க அது? யரோ ஆணாத்தான் இருக்கனும். கருப்பர் சொல்லுறீங்க. [ஜூனியர் விகடன் - ல ’உஷ்’ படிக்கிற மாதிரி இருக்கே?//

இந்த “வட்டாரம்” என்ற வார்த்தைத்தான்...அந்த கருப்பன சந்தேகிக்க வைத்தது.....
நீங்க தேடியதில் நேர்மைஇருக்கிறது....

மற்றபடி.... இந்த கிசு கிசு அப்படி இப்படி இதெல்லாம் ...என்னை வைச்சி கூடி கும்மியடிக்கிறமாதிரியே இருக்கு.

ஆமாம் என்னையே வைச்சி காமடி கீமடி பன்னலையே?

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
// இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//கருணாகரசு..பெருமாள் எனக்கு எந்தக்
கறுப்பினத்தவர்களும்{ஆபிரிக்கர்கள்}
நண்பர்கள் கிடையாது.

அப்படி இருந்தாலும்......இந்தப் பாட்டெல்லாம்..
அவர்களுக்குப் புரியுமா?

இதுதான்ஜயா கிசு...கிசு கிச்சுக்கிச்சு...

நான் “எதிலும்”கறுப்பு என்று சொல்லும்
சொல்லை வெறுப்பவள் !
அப்புறம் நான் “அவருக்காக” என் சாமியை
{சின்னக்கருப்புச்சாமி,பெரியகருப்புச்சாமி}
குறை கூறியதற்காக,.....மானநஷ்ர வழக்கு
தொடுத்திடவன் ..........//

அது என்னெவோ தெரியல... இதெல்லாம் பார்க்கும் போது கூட்டு சதிதிட்டம் போலவே இருக்குங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//இது கிசுகிசு இல்ல... கிட்டவே இருந்து பார்த்திருக்கனும்.... இல்ல அந்த கருப்பன் ஒலிபரப்பியிருக்கனும்.//

கருணாகரசு,

யாரு அந்த "கருப்பன்?" ...யாரு?...யாரு?...யாரு?...?????

எப்ப பாத்தாலும், எங்க பாத்தாலும்.. சந்தேகம். என்ன "கண்ணோ" உங்களுக்கு...!//

இததான் எங்க ஊர்ல தவள தான் வாயால கெடும் ம்னு சொல்லுவாங்க

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
காத்திருத்தலில் கூட கவிதையா?

கலக்கிறீங்க அரசு

(கருணா என்ற வார்த்தை எனக்கு பிடிப்பதில்லை)

விஜய்//

உங்களுக்கு இல்லாத உரிமையா... எப்படிவேனாலும் அழைக்கலாம்.... உங்க உனர்வுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க விஜய்

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
காத்திருத்தலும் அதன் சுழலையும் அதனின் வலியும் அருமையாக வெளிப்படுத்தும் கவிதை தோழரே.
தங்களுது துணைவியாருக்கு எங்களது அன்பு. (சரி...,சரி... , கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு நாலு இடம் சுத்தி காட்டுங்க. )//

தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க தோழரே.... அப்படியே ஆகட்டும்.... தொடருக்கு விரைவில் வருகிறேன்...தோழரே.

பூங்குன்றன்.வே சொன்னது…

உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்குங்க.

அன்புடன் நான் சொன்னது…

பூங்குன்றன்.வே கூறியது...
உணர்வை சொல்லும் கவிதை.நல்லா இருக்குங்க.//

வருகைக்கும் கருத்து தருகைக்கும் நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

வருகின்ற உறவினர்களைப் பார்க்கப் போகும் முகிழ்ச்சியில் புன்னகைப் பூக்கள் தென்படுவதால் முள்வேலி போலும்...

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
வருகின்ற உறவினர்களைப் பார்க்கப் போகும் முகிழ்ச்சியில் புன்னகைப் பூக்கள் தென்படுவதால் முள்வேலி போலும்...//

விமானத்திலிருந்து இறங்கி வரும் உறவினருக்காக .... கண்ணாடிக்கு இப்பால் காத்திருக்கும் அந்த மணித்துளிகள்... ரணமாக இருந்ததால்.... என் கண்ணுக்கு அந்த கண்ணாடி சுவர்கள் ... முள்வேலியை நினைவு படுத்தியது... வுகைக்கு மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

விஜய் சொன்னது…

என்ன நண்பா நம்ம பக்கம் காணோம் ?

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
என்ன நண்பா நம்ம பக்கம் காணோம் ?

விஜய்//

இதோ வருகிறேன் தோழரே.

ராமலக்ஷ்மி சொன்னது…

// மிக அழகிய
கண்ணாடிச் சுவர்கள் ...
முள்வேலியை விடவும்
மூர்க்கமாய் !!!//

அந்த நேரத்தில் அப்படித் தோன்றுவது உணர்வுகள் உடைத்துக் கொள்வதால். அருமைங்க.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
// மிக அழகிய
கண்ணாடிச் சுவர்கள் ...
முள்வேலியை விடவும்
மூர்க்கமாய் !!!//

அந்த நேரத்தில் அப்படித் தோன்றுவது உணர்வுகள் உடைத்துக் கொள்வதால். அருமைங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails