நெஞ்சுக் கூட்டின்
நிழற்படம் போல்
இலைகளை இழந்து
கிளைகளோடு மட்டுமே
“மரமென” நிற்கிறது.
வெப்பச் சூட்டில்
பொசுங்கி கிடக்கின்றன
ஒருக் கிளையில்
ஒருக் கூட்டில்
இரண்டு குஞ்சுகள்.
இளைப்பாற எவருமின்றி
தனித்துக் கிடக்கின்றன
அந்த மரத்தின் கீழ்
அசையா இருக்கைகள்.
மரத்தை சூழ்ந்திருந்த புல்வெளி
மஞ்சள் கூழங்களாகி விட்டது.
ஏழெட்டு மாதங்களாய்
மழையையே பார்க்காத
மண்ணின் நாக்கு
வறண்டு சுருள்கிறது.
வெப்பக் கொப்புளங்கள்
நாற்றங்கலாகின்றன
மனித உடலில்.
தங்கமாகி விட்டன
தண்ணீர்த் துளிகள்.
(தமிழ் மொழி மாத நிகழ்வின், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் கவிதை போட்டியில் ஊக்க பரிசு பெற்ற எனது கவிதை)
விழா நாள் 05-04-14.
Tweet |
7 கருத்துகள்:
இன்றைக்கு வரிகள் உண்மைகள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்.
அடடா! மரம் இழந்து நிற்பது இலைகளையா? இதயங்கள் அல்லவா அவை. காற்று உறவாடும்வரை இதயம் துடிக்கிறது. இலைகளும் அப்படியே...
இலை என்பதன் பொருள் இப்பொழுதுதான் எனக்கு விளங்குகிறது.
நிரந்தரம் இ(ல்)லை என்பதை உணர்த்தத்தான் அப்படிப் பெயர் பெற்றதோ?
நிழல்தந்த மரத்திற்கு இன்று நிழல்வேண்டியிருக்கிறது. நிழல்தர ஒருவரும் இல்லை.
தங்கள் கவிதை என்னை இப்படியெல்லாம் எண்ணத் தூண்டுகிறது. சிறந்த கவிதை என்பது அதைப் படித்தவுடன் அதன் எண்ணத் தொடர்ச்சியாக வாசகனின் மனதில் அதிர்வுகளையும் கருத்துக்களையும் பிறப்பிக்க வேண்டும். இக்கவிதை அதைச் செய்கிறது.
இதுவே இக்கவிதை சிறந்தது என்பதற்குச் சான்று. வாழ்க
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம் கவிஞரே உங்கள் கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளது மேலும் பல பரிசுகள் பெறவும் நூல்கள் வெளியிடவும் வாழ்த்துகிறேன்.
எனது பெயர் அ.அருள்செல்வன் நானும் அதே கவிதைப்போட்டியில் முதல்பரிசு பெற்றேன் ஆனால் நான் புகைப்படம் எடுக்கவில்லை தங்களிடம் எனது புகைப்படம் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள் கவிஞரே...
எனது மின்னஞ்சல் arulvaira@gmail.com
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக