ஜூலை 16, 2012

மரப்பாச்சி


தேம்பிழழும் குழந்தையை
ஆறுதல்படுத்தும்
மகிழ்ச்சிக் கேடயம்,
மரப்பாச்சி பொம்மைகள்.

அது... வீடுகளில்
திண்ணைகள் இருந்த காலம்.
காடுச்செல்லும் அம்மாக்கள்,
குழந்தையை மரப்பாச்சியிடமும்
மரப்பாச்சியைக் குழந்தையிடமும்
விட்டுச்செல்வதில்தான் நம்பிக்கை.

தாழ்வாரம்
பூவரச மரநிழல்
மாட்டுக் கொட்டகை
திண்ணை... இவைகள்தான்
மரப்பாச்சியோடு எங்கள்
மழலைகள் விளையாடும்
மகிழ்வரங்கம்.

மரப்பாச்சியை
பொய்யாய்க் குளிப்பாட்டி
தலைவாரிப் பூச்சூடி
உணவூட்டி உறங்கவைக்கும்
குழந்தைகளுக்கு,
அறவே வருவதில்லை
அம்மா நினைவும்
அந்த வேளை பசியும்.

இன்று தெருக்களில்
சீனபொம்மைகளை
கூவி விற்பதை கேட்கையில்,
கைகால் உடைந்த
மரப்பாச்சி பொம்மையாய்
மனம் வலிக்கிறது.

ஏனெனில்,
இவைகளே அன்றைய...
குழந்தைகளின் குழந்தை!.




.

14 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள்... இப்போதெல்லாம் எங்கே குழந்தைகளை விளையாட விடுகிறார்கள்... இந்த சந்தோசம் எல்லாம் காணாமல் போய் விட்டது..

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தாழ்வாரம்
பூவரச மரநிழல்
மாட்டுக் கொட்டகை
திண்ணை... இவைகள்தான்
மரப்பாச்சியோடு எங்கள்
மழலைகள் விளையாடும்
மகிழ்வரங்கம்.//

இன்று இந்த சந்தோசங்களை எல்லாம் எம் மழலைகள் இழந்து விட்டது கொடுமை...!

ராமலக்ஷ்மி சொன்னது…

/குழந்தையை மரப்பாச்சியிடமும்
மரப்பாச்சியைக் குழந்தையிடமும்
விட்டுச்செல்வதில்தான் நம்பிக்கை./

அருமை.

நல்ல கவிதை.

arasan சொன்னது…

சிறந்த தொரு படைப்பாக்கம் மாமா...
இன்றைய குழந்தைகளிடம் மரப்பாச்சி என்றால் என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை ..
அப்படி நாகரிக மோகம் .. என்ன செய்ய

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை...
மரப்பாச்சிகள் மறைந்து போய்விட்டன என்பதைவிட அந்த சந்தோஷங்களை குழந்தைகள் இழந்து வருகிறார்கள் என்பதே வருத்தமான விஷயம்.

Athisaya சொன்னது…

புதிய விடயம் இது......மிக்க மகிழ்ச்சி பாரம்பரிய வாசனை வீசும் இவ் இனிய தகவலை கவியாகததந்தமைக்கு..!பாராட்டுகள்...!

அம்பாளடியாள் சொன்னது…

உணர்ச்சி ததும்ப சிறு பிள்ளைபோல் மரப்பாச்சி பொம்மைகள்
மறைந்துபோன செய்தியை சொல்லும்போதே நம் நினைவுச்
சின்னங்கள் பலதை மெல்ல மெல்ல நாம் தொலைத்துவிட்டு
வந்த காலம் மனதை நெருடிச் செல்வதை உணர்ந்தேன்!..
மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சரியாகச் சொன்னீர்கள்... இப்போதெல்லாம் எங்கே குழந்தைகளை விளையாட விடுகிறார்கள்... இந்த சந்தோசம் எல்லாம் காணாமல் போய் விட்டது..

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...//

மிக்க மகிழ்ச்சிங்க தனபாலன்... வருகைக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
தாழ்வாரம்
பூவரச மரநிழல்
மாட்டுக் கொட்டகை
திண்ணை... இவைகள்தான்
மரப்பாச்சியோடு எங்கள்
மழலைகள் விளையாடும்
மகிழ்வரங்கம்.//

இன்று இந்த சந்தோசங்களை எல்லாம் எம் மழலைகள் இழந்து விட்டது கொடுமை...!//
என்னசெய்ய.... இதுதான் காலக்கொடுமை...., நன்றிங்க மனோ.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
/குழந்தையை மரப்பாச்சியிடமும்
மரப்பாச்சியைக் குழந்தையிடமும்
விட்டுச்செல்வதில்தான் நம்பிக்கை./

அருமை.

நல்ல கவிதை.//

மிக்க நன்றிங்க ராமலட்சுமி.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
சிறந்த தொரு படைப்பாக்கம் மாமா...
இன்றைய குழந்தைகளிடம் மரப்பாச்சி என்றால் என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை ..
அப்படி நாகரிக மோகம் .. என்ன செய்ய///

என்னசெய்ய......
வருகைக்கு நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
அருமை...
மரப்பாச்சிகள் மறைந்து போய்விட்டன என்பதைவிட அந்த சந்தோஷங்களை குழந்தைகள் இழந்து வருகிறார்கள் என்பதே வருத்தமான விஷயம்.//

மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

Athisaya கூறியது...
புதிய விடயம் இது......மிக்க மகிழ்ச்சி பாரம்பரிய வாசனை வீசும் இவ் இனிய தகவலை கவியாகததந்தமைக்கு..!பாராட்டுகள்...!//

மிக்க நன்றிங்க அதிசயா.

அன்புடன் நான் சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
உணர்ச்சி ததும்ப சிறு பிள்ளைபோல் மரப்பாச்சி பொம்மைகள்
மறைந்துபோன செய்தியை சொல்லும்போதே நம் நினைவுச்
சின்னங்கள் பலதை மெல்ல மெல்ல நாம் தொலைத்துவிட்டு
வந்த காலம் மனதை நெருடிச் செல்வதை உணர்ந்தேன்!..
மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு//

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்... அம்பாளடியாள்.

Related Posts with Thumbnails