மே 28, 2012

விடியல்


விடியலுக்கு என்று 
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.

தகிக்கும் வெயிலில்
வேகும் மனதிற்கு
தென்றலாய் அமையும்,
நிம்மதிக்கு பெயர் விடியலே.

அடர்ந்த வாழ்வில்
காற்றோட்டமாய் அமையும்
பொழுதுகள் அத்தனையிலும்
விடியல்கள்,
திளைக்கும் கிளைக்கும்.

அந்திக்குப் பின்
இருள் கவ்வும் பொழுதுகூட
நட்சத்திரங்களுக்கான
விடியல்தான்.

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.


8 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

//அந்திக்குப் பின்
இருள் கவ்வும் பொழுதுகூட
நட்சத்திரங்களுக்கான
விடியல்தான்.//

அருமையான கவிதை.
வாழ்த்ததுக்கள்.

செய்தாலி சொன்னது…

//விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.//

ஆம் கவிஞரே

கோவி சொன்னது…

nice..

Athisaya சொன்னது…

ஒவ்வொருஅசைவுகளின் பின்னும் ஏதோ ஒரு விடியல் இருக்கிறது என்ற பிடிப்புத்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது..அருமையான பதிவு.

சசிகலா சொன்னது…

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,// நிறைய அர்த்தங்களை உள்ளடக்கிய பதிவு அருமை .

மாலதி சொன்னது…

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.//அருமையான கவிதை.

priyamudanprabu சொன்னது…

நல்லாயிருக்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.

விடியலாய் வெளிச்சமிட்ட கவிதை !பாராட்டுக்கள் !

Related Posts with Thumbnails