மே 07, 2012

உலங்கூர்தி



மேலை நாட்டு
நாகரிகத்திற்கு
உட்படுத்திக்கொண்டோம்.

திணிக்கப்பட்ட பண்பாடுகள்
பழக்கமாகிவிட்டது இப்போது.

பத்தாண்டுகால இடைவெளியில்
வாழ்க்கை கோப்பை
வசதிகளால் நிரம்பி வழிகிறது.

இலண்டன் மாநகரின்
வணிக வீதியில்
திடீரென மிரண்டு
நடுங்கியப்படி
தரையில் படுத்துக்கொண்ட
என் மகளை,
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு
புரியவைப்பது எப்படி
உலங்கூர்தியின் சத்தத்தை.

விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.

16 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

//விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.//

மனதை சுட்ட வரிகள்
வலி

ரிஷபன் சொன்னது…

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.


நிதர்சனம் வலிக்கிறது.

arasan சொன்னது…

உண்மை உணர்த்தும் வீரியம் இக்கவிதையில் காண்கிறேன் மாமா...
என் நன்றிகள் மாமா...

முத்தரசு சொன்னது…

வலி, வேதனை.. எப்படி புரிய வைப்பது?

//எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.//

கண்கள் குளமாக்கிய வரிகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.


தழும்புகளுக்கு என்ன மருத்துவம் பார்ப்பது ..

மனதை நெருடும் பகிர்வுகள்..

Thava சொன்னது…

நெஞ்சை பிசைத்த வரிகள்..ஏதோ செய்கிறது..நன்றி சகோ.

பெயரில்லா சொன்னது…

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு

நல்லா எழுதி இருக்கீங்க ...

அன்புடன் நான் சொன்னது…

செய்தாலி கூறியது...
//விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.//

மனதை சுட்ட வரிகள்
வலி//

தங்களின் உணர்வுக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

ரிஷபன் கூறியது...
எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.


நிதர்சனம் வலிக்கிறது.

தங்களின் புரிதலுக்கு என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் சே கூறியது...
உண்மை உணர்த்தும் வீரியம் இக்கவிதையில் காண்கிறேன் மாமா...
என் நன்றிகள் மாமா...
//

மிக்க நன்றிகள் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

மனசாட்சி™ கூறியது...
வலி, வேதனை.. எப்படி புரிய வைப்பது?

//எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.//

கண்கள் குளமாக்கிய வரிகள்//

தங்களின் புரிதலுக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.


தழும்புகளுக்கு என்ன மருத்துவம் பார்ப்பது ..

மனதை நெருடும் பகிர்வுகள்..//

தங்களின் உணர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Kumaran கூறியது...
நெஞ்சை பிசைத்த வரிகள்..ஏதோ செய்கிறது..நன்றி சகோ.//

உணர்வுக்கு நன்றிங்க குமரன்.

அன்புடன் நான் சொன்னது…

கலை கூறியது...
எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு

நல்லா எழுதி இருக்கீங்க ...//

மிக்க நன்றிங்க கலை.

சின்னப்பயல் சொன்னது…

இலண்டன் மாநகரின்
வணிக வீதியில்
திடீரென மிரண்டு
நடுங்கியப்படி
தரையில் படுத்துக்கொண்ட
என் மகளை,
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு
புரியவைப்பது எப்படி
உலங்கூர்தியின் சத்தத்தை./// அருமை..

அன்புடன் நான் சொன்னது…

சின்னப்பயல் கூறியது...
இலண்டன் மாநகரின்
வணிக வீதியில்
திடீரென மிரண்டு
நடுங்கியப்படி
தரையில் படுத்துக்கொண்ட
என் மகளை,
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு
புரியவைப்பது எப்படி
உலங்கூர்தியின் சத்தத்தை./// அருமை..//

தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றிங்க

Related Posts with Thumbnails