மே 31, 2010

கதவு

யதார்த்தச் சுழலின்
புரிதலற்ற கோட்பாடுகளும் ,

நிகழும் இந்த நிமிடத்தின்
நிறைகாணா பார்வைகளும் ,

உறவுக்கெதிராய்...
கதவடைத்து விடுகிறது .

வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!
அதுதான் ,
பிசைகிறது மனதை .

(மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் மகன் தி.தமிழ் உண்மை சிந்து ... அரசு பொது தேர்வில் 448 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றுள்ளான் )

மகன் தமிழுக்கு...
உன்னிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொள்ள இயலாத உறவுநிலையில் என் (எங்கள் ) பரிதவிப்பின் வெளிபாடு இது.

உன்னிடம் சொல்ல முடியவில்லை !
உலகறிய சொல்கிறேன் வாழ்த்துக்கள் மகனே !!
(இதை யார் தடுக்க முடியும் )

உலக நண்பர்களே நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் செல்வத்தை !!

61 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

தமிழுக்கு எங்கள் வாழ்த்துக்களும்.

//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!//

எங்கெங்கும் நடக்கிறது:(! நேரில் உங்கள் வாழ்த்துக்களை பெறும் சூழல் விரைவில் வரட்டும்.

vasu balaji சொன்னது…

தமிழுக்கு வாழ்த்துகள். உங்கள் தவிப்பு மாறும் கருணாகரசு. கசப்புகள் நிரந்தரமில்லை.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
தமிழுக்கு எங்கள் வாழ்த்துக்களும்.

//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!//

எங்கெங்கும் நடக்கிறது:(! நேரில் உங்கள் வாழ்த்துக்களை பெறும் சூழல் விரைவில் வரட்டும்.//

வாழ்த்துக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
தமிழுக்கு வாழ்த்துகள். உங்கள் தவிப்பு மாறும் கருணாகரசு. கசப்புகள் நிரந்தரமில்லை.//

மிக்க நன்றிங்கைய்யா.

Unknown சொன்னது…

எல்லா இடங்களிலும் இப்படி மாட்டிக் கொள்ளும் பிஞ்சு விரல்கள்தாம்
அதிகம் வலி சுமக்கின்றன ..

வாழ்த்துக்கள் தமிழ் ..

தமிழ் அமுதன் சொன்னது…

தமிழுக்கு எங்கள் வாழ்த்துக்களும்.!

தேவன் மாயம் சொன்னது…

வாழ்த்துக்கள் கருணா! வரும்போது உங்களைக்காண எண்ணினேன்!!

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
எல்லா இடங்களிலும் இப்படி மாட்டிக் கொள்ளும் பிஞ்சு விரல்கள்தாம்
அதிகம் வலி சுமக்கின்றன ..

வாழ்த்துக்கள் தமிழ் ..//

மிக்க நன்றிங்க செந்தில்.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் அமுதன் (ஜீவன்) கூறியது...
தமிழுக்கு எங்கள் வாழ்த்துக்களும்.!//

மிக்க நன்றிங்க தமிழ் அமுதன்.

அன்புடன் நான் சொன்னது…

தேவன் மாயம் கூறியது...
வாழ்த்துக்கள் கருணா! வரும்போது உங்களைக்காண எண்ணினேன்!!//

என் மனமும் அதையே எண்ணியது.... மனதில் நிற்கும் மருத்துவருக்கு என் நன்றி.

க.பாலாசி சொன்னது…

நமது செல்வத்தை மனதார வாழ்த்துகிறேன்... மேன்மேலும் சிறந்தோங்கவும் வாழ்த்துக்கள்....

ஜோதிஜி சொன்னது…

அவர் பெயருக்காக முதல் வாழ்த்து.
அவர் வாங்கிய மதிப்பெண்ணுக்காக இரண்டாவது வாழ்த்து.
சூழ்நிலையை அழகாக மறைபொருள் போல் உணர்த்திய உங்களுக்கு இறுதி வாழ்த்துகள்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
நமது செல்வத்தை மனதார வாழ்த்துகிறேன்... மேன்மேலும் சிறந்தோங்கவும் வாழ்த்துக்கள்....//

உங்க வாழ்த்துக்கு... மிக்க நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...
அவர் பெயருக்காக முதல் வாழ்த்து.
அவர் வாங்கிய மதிப்பெண்ணுக்காக இரண்டாவது வாழ்த்து.
சூழ்நிலையை அழகாக மறைபொருள் போல் உணர்த்திய உங்களுக்கு இறுதி வாழ்த்துகள்.//

உங்க வாழ்த்துக்களுக்கு...
நன்றி... நன்றி... நன்றிகள்.

rvelkannan சொன்னது…

வாழ்த்துகள்

ஹேமா சொன்னது…

அன்புக் கண்ணனின் பெயரே தமிழ் சொல்கிறது.இன்னும் இன்னும் தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள்.

அரசு ஆதங்கம் கலையும்.
மனங்களைத் திறந்துவிடுங்கள்.
காற்று வரட்டும்.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
வாழ்த்துகள்//

வாழ்த்துக்கு நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அன்புக் கண்ணனின் பெயரே தமிழ் சொல்கிறது.இன்னும் இன்னும் தமிழ் வளர்க்க வாழ்த்துக்கள்.

அரசு ஆதங்கம் கலையும்.
மனங்களைத் திறந்துவிடுங்கள்.
காற்று வரட்டும்.//

மிக்க நன்றிங்க ஹேமா.

தமிழ் உதயம் சொன்னது…

பார்ப்பதை, பேசுவதை தடுக்க இயலும். வாழ்த்துவதை யாரால் தடுக்க இயலும். தம்பி தமிழ் மென் மேலும் வெற்றியை நோக்க வாழ்த்துகள்.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
பார்ப்பதை, பேசுவதை தடுக்க இயலும். வாழ்த்துவதை யாரால் தடுக்க இயலும். தம்பி தமிழ் மென் மேலும் வெற்றியை நோக்க வாழ்த்துகள்.//

மிக்க நன்றிங்க தமிழ் உதயம்.

நறுமுகை சொன்னது…

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
www.narumugai.com

நறுமுகை சொன்னது…

//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ...//

வலியின் உச்சம்.. தமிழுக்கு வாழ்த்துக்கள்

www.narumugai.com
நமக்கான ஓரிடம்

கவி அழகன் சொன்னது…

நல்ல படைப்பு

சத்ரியன் சொன்னது…

உண்மைய நானும் அறிவேன்.

தமிழுக்கு வாழ்த்துகள்.

மாமா உங்களின் காயங்களுக்கு காலம் களிம்பு இடும். உறவு இனிதாகும்.

அன்புடன் நான் சொன்னது…

நறுமுகை கூறியது...
//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ...//

வலியின் உச்சம்.. தமிழுக்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கும்....
வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

யாதவன் கூறியது...
நல்ல படைப்பு//

வருகைக்கு வணக்கம்.... யாதவன்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
உண்மைய நானும் அறிவேன்.

தமிழுக்கு வாழ்த்துகள்.

மாமா உங்களின் காயங்களுக்கு காலம் களிம்பு இடும். உறவு இனிதாகும்.//

வாழ்த்துக்கும்....
நம்பிக்கை வார்த்தைக்கும் மிக்க நன்றி. மாப்பு.

சீமான்கனி சொன்னது…

//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!
அதுதான் ,
பிசைகிறது மனதை .//

இந்தவரிகளை படிக்கும் பொது எனக்கும் உங்கள் மனவலி ஒட்டிக்கொள்கிறது கருணா...அண்ணா..
தமிழுக்கு எங்களின் வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்....

கலா சொன்னது…

என் அன்பான இதயத்துடன்...
வாழ்த்தும் செய்தி
மகனைச் சேர..
தமிழுடன் தமிழ் சேர்ந்து
தரட்டும் இன்பம் நமக்கு.

தாமதம் மன்னிக்கவும்
நன்றி கருணாகரசு

அன்புடன் நான் சொன்னது…

seemangani கூறியது...
//வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!
அதுதான் ,
பிசைகிறது மனதை .//

இந்தவரிகளை படிக்கும் பொது எனக்கும் உங்கள் மனவலி ஒட்டிக்கொள்கிறது கருணா...அண்ணா..
தமிழுக்கு எங்களின் வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்....
//

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
என் அன்பான இதயத்துடன்...
வாழ்த்தும் செய்தி
மகனைச் சேர..
தமிழுடன் தமிழ் சேர்ந்து
தரட்டும் இன்பம் நமக்கு.

தாமதம் மன்னிக்கவும்
நன்றி கருணாகரசு//

உங்க அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க கலா.

thiyaa சொன்னது…

சூப்பர்.வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் சொன்னது…

சாதனைக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
சூப்பர்.வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றிங்க தியா.

Thenammai Lakshmanan சொன்னது…

சாதனைக்கு வாழ்த்துக்கள்

கண்ணகி சொன்னது…

வீடுக்கு வீடு வாசப்படி...தங்கள் அன்பு மக்னுக்கு வாழ்த்துக்கள்..

உங்களுக்கு பிறந்த வாழ்த்துக்கள்...

- இரவீ - சொன்னது…

யதார்த்ததின் பரிதவிப்பு...

நல்லது நாடி வரும் - வழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழுக்கும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாழ்த்துக்கள் தமிழ். மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தமிழுக்கு வாழ்த்துகள் மேலும் சிறப்பாக படித்து வாழ்வில் வெற்றி பெற பிரார்த்தனைகள்...

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...

சாதனைக்கு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

- இரவீ - கூறியது...

யதார்த்ததின் பரிதவிப்பு...

நல்லது நாடி வரும் - வழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழுக்கும்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க இரவீ.

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...

வாழ்த்துக்கள் தமிழ். மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க... தங்கமணி.

அன்புடன் நான் சொன்னது…

ப்ரியமுடன்...வசந்த் கூறியது...

தமிழுக்கு வாழ்த்துகள் மேலும் சிறப்பாக படித்து வாழ்வில் வெற்றி பெற பிரார்த்தனைகள்...//

உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்... பிராத்தனைக்கும் மிக்க நன்றிங்க வசந்த்.

அன்புடன் நான் சொன்னது…

கண்ணகி கூறியது...

வீடுக்கு வீடு வாசப்படி...தங்கள் அன்பு மக்னுக்கு வாழ்த்துக்கள்..

உங்களுக்கு பிறந்த வாழ்த்துக்கள்...//

இரண்டு வாழ்த்துக்கும்... இதயங்கனிந்த நன்றிகள்... கண்ணகி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நெகிழ்ச்சியான வாழ்த்துகள்

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

நெகிழ்ச்சியான வாழ்த்துகள்//
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா.

மசக்கவுண்டன் சொன்னது…

பாராட்டுகள்.

அன்புடன் நான் சொன்னது…

மசக்கவுண்டன் கூறியது...

பாராட்டுகள்.//

மிக்க நன்றிங்க.

thanjaidinesh சொன்னது…

சார் அந்த லெட்சுமி அம்மாவ வந்து இதை படிக்க சொல்லுங்க. அப்பவாவது புரியுதானு பாப்போம்.

தொலைபேசியில் வாழும் நம்மின் உணர்வுகளை கொச்சைபடுத்துவதாக உள்ளது அவர்களின் கட்டுரை. நீங்களும் அந்த பதிவு பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்

thanjaidinesh சொன்னது…

தமிழுக்கு

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் dinesh கூறியது...

சார் அந்த லெட்சுமி அம்மாவ வந்து இதை படிக்க சொல்லுங்க. அப்பவாவது புரியுதானு பாப்போம்.

தொலைபேசியில் வாழும் நம்மின் உணர்வுகளை கொச்சைபடுத்துவதாக உள்ளது அவர்களின் கட்டுரை. நீங்களும் அந்த பதிவு பற்றி ஒரு கவிதை எழுதுங்கள்//

அந்த அம்மாக்கிட்ட நேரிடையாகவே விவாதிக்கும் தருணத்தை எதிர்னோக்கி காத்துருக்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் dinesh கூறியது...

தமிழுக்கு

வாழ்த்துக்கள்//

மனமார்ந்த நன்றிங்க தினேஷ்.

நீங்க கீழே உள்ள முகவரிக்கு சென்று பாருங்கள்.... அங்கே எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்

http://baalu-manimaran.blogspot.com/2010/06/blog-post.html


http://bala-balamurugan.blogspot.com/


உணர்வுக்கு நன்றிங்க தினேஷ்.

Priya சொன்னது…

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

அன்புடன் நான் சொன்னது…

Priya கூறியது...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!//

மிக்க நன்றிங்க.

விஜய் சொன்னது…

தமிழ் வாழ்த்துக்கள்

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...

தமிழ் வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றிங்க.

goma சொன்னது…

தமிழை வாழ்த்துகிறோம்.
தொட்டதெல்லாம் துலங்க ,
சென்ற இடமெல்லாம் சிறக்க ,தமிழ் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்

அன்புடன் நான் சொன்னது…

goma கூறியது...

தமிழை வாழ்த்துகிறோம்.
தொட்டதெல்லாம் துலங்க ,
சென்ற இடமெல்லாம் சிறக்க ,தமிழ் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்//

மனமார்ர்ந்த நன்றிங்க.

Related Posts with Thumbnails