மார்ச் 23, 2014

கிணற்றுத் தவளை

அன்றொரு நாள் 
விற்பனைப் பொருளுடன்
வீட்டிற்கு வந்திருந்தனர்
வியாபாரிகள் .


விருந்து உபசரிப்புக்கு பின்
விற்பனை பொருளின்
தரம் பேசப்பட்டு
தரத்திற்கு ஏற்றார்போல்
விலை பேசப்பட்டது.

கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில்
தரகனின் பேரம்
இருதரப்பினராலும்
ஏற்கப்பட்டது.

பேசப்பட்ட அளவில்
வாங்கியவர்
கொடுத்தனுப்பினார்
பணம்
பாத்திரம்
வாகனம்
நகை
இருபத்தொரு வயது மகள்.

'கிணற்றுத் தவளை' யாகிப்போனது
இருபத்தொரு ஆண்டுகள்
சிறகடித்த உயிர் ஒன்று.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொன்னவிதம் அருமை... உண்மை... மாறும் காலமும் வரும்...

கோமதி அரசு சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது போல் காலம் மாறும் என்றுதான் நினைக்கிறேன்.
கவிதை அருமை.

Related Posts with Thumbnails