குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு?
தங்கமே தங்கமென்று
தாலாட்டி வளர்த்த ரெண்டு
பிள்ளைகள் உயிரைக்கொண்டு
போனதே பேயலை இன்று!
தாய் தகப்பன் தண்ணியோட
தம்பியவன் மன்ணுக்குள்ள
நான் மட்டும் கரையொதுங்கி
நாதியற்று போனேனே.
அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?
நீரும் நிலமும்
நிகழ்த்திய வன்முறை...
கல்லறையானதே - ஒரு
கடலோர தலைமுறை.
தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?
தாகம் தீர்ந்ததா தண்ணீரே!?
உன்னால்...
தரணி சிந்துதே கண்ணீரே!.
(ஆழிப்பேரலை அஞ்சலிக்காக வாசிக்கப்பட்ட கவிதையில் சிலதுளிகள்)
Tweet |
56 கருத்துகள்:
//தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?//
வரிகள் ஒவ்வொன்றிலும் வலிகளை உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே,
சுனாமியில் மடிந்த நம் மக்களுக்காக நினைவு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள்
கவிதை சுனாமியில்
கசிகிறது கண்ணீர்
விஜய்
சுனாமியில் மடிந்த நம் மக்களுக்காக நினைவு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள்.
நெஞ்சம் கனக்க வைக்கும் வரிகள்.
(“பலதிசையில் சலடமாச்சி”
இதில் சடலமாச்சி-ன்னு மாத்திடுங்க மாமா.)
மாணவன் கூறியது...
//தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?//
வரிகள் ஒவ்வொன்றிலும் வலிகளை உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே,
சுனாமியில் மடிந்த நம் மக்களுக்காக நினைவு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள்//
மாணவனின் வருகைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
விஜய் கூறியது...
கவிதை சுனாமியில்
கசிகிறது கண்ணீர்
விஜய்//
கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.
சே.குமார் கூறியது...
சுனாமியில் மடிந்த நம் மக்களுக்காக நினைவு அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துவிட்டீர்கள்.//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி குமார்.
சத்ரியன் கூறியது...
நெஞ்சம் கனக்க வைக்கும் வரிகள்.
(“பலதிசையில் சலடமாச்சி”
இதில் சடலமாச்சி-ன்னு மாத்திடுங்க மாமா.)//
வருகைக்கும் சுட்டியமைக்கும் பன்றிமாமா............. மன்னிக்க நன்றி மாமா.
எமது கண்ணீர் அஞ்சலிகள்....!
dheva கூறியது...
எமது கண்ணீர் அஞ்சலிகள்.//
வருகைக்கு நன்றிங்க.
படமும் அதையொட்டிய கவிதைவரிகளும் அருமை. கவிதை என்ற பெயரில் நிறைய படிக்கிறேன் அதில் உங்கள் கவிதை அந்நியப்பட்டு வைரமாக ஜொலிக்கிறது.
கவிதையும் படங்களும் கண்களை குளமாகவும் மனதை ரணமாகவும் செய்தது. எனது அஞ்சலிகள்!
கருத்து சொல்லும் கவிதையா உணரமுடியலை கருணா..முதல் வரியும் படமும் அடுத்த வரிக்கும் படத்துக்கு செல்லும் தைரியத்தை செயலிக்க வைத்துவிட்டது...
ஆழந்த அனுதாபங்களும் அஞ்சலியும் மட்டுமே இயன்றதாய்..
அருமை.
இனியவன் சொன்னது…
படமும் அதையொட்டிய கவிதைவரிகளும் அருமை. கவிதை என்ற பெயரில் நிறைய படிக்கிறேன் அதில் உங்கள் கவிதை அந்நியப்பட்டு வைரமாக ஜொலிக்கிறது.
26 டிசம்பர், 2010 11:05 pm //
இனிய பாராட்டுக்கு நன்றிங்க இனியவன்
பாரதி வைதேகி கூறியது...
கவிதையும் படங்களும் கண்களை குளமாகவும் மனதை ரணமாகவும் செய்தது. எனது அஞ்சலிகள்!//
உங்க வருகைக்கு மிக்க நன்றிங்க.
தமிழரசி கூறியது...
கருத்து சொல்லும் கவிதையா உணரமுடியலை கருணா..முதல் வரியும் படமும் அடுத்த வரிக்கும் படத்துக்கு செல்லும் தைரியத்தை செயலிக்க வைத்துவிட்டது...
ஆழந்த அனுதாபங்களும் அஞ்சலியும் மட்டுமே இயன்றதாய்..//
வலியை உணர்ந்த அஞ்சலிக்கு நன்றிங்க தமிழ்.
ஸ்ரீராம். கூறியது...
அருமை.
27 டிசம்பர், 2010 12:00 p//
வருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்.
//அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?//
வலிகளை சுமந்த வரிகள் மாமா ...
படிக்கும் போதே மனம் கலங்கி கண்கள் குளமாகிறது .....
இழந்த நெஞ்சங்களுக்கு எதை சொல்லி தேற்றுவது ....
இன்றைய நினைவு நாளில் மட்டுமல்ல..எந்த நிமிடத்தில் நினைத்தாலும் மனதைக் கலக்கும் சம்பவம் அது.
ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள் !
படிக்கும்போதே கஷ்டமா இருக்குங்க..அவ்வளவு உருக்கம்...
அரசன் கூறியது...
//அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?//
வலிகளை சுமந்த வரிகள் மாமா ...
படிக்கும் போதே மனம் கலங்கி கண்கள் குளமாகிறது .....
இழந்த நெஞ்சங்களுக்கு எதை சொல்லி தேற்றுவது ....
27 டிசம்பர், 2010 8:08 pm//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராசா.
ஹேமா கூறியது...
இன்றைய நினைவு நாளில் மட்டுமல்ல..எந்த நிமிடத்தில் நினைத்தாலும் மனதைக் கலக்கும் சம்பவம் அது.
ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள் !
27 டிசம்பர், 2010 9:07 pm//
மிக்க நன்றிங்க ஹேமா.
ஆனந்தி.. கூறியது...
படிக்கும்போதே கஷ்டமா இருக்குங்க..அவ்வளவு உருக்கம்...//
உங்க உணர்வுக்கு நன்றிங்க ஆனந்தி.
வலியை வேதனையை வடித்திருக்கிறீர்கள் வரிகளில். உறவுகளை இழந்து தவிப்பவருக்கு ஆறுதல் கிடைக்க பிரார்த்தனைகளும்,
மறைந்தவருக்கு அஞ்சலிகளும்.
கலங்கவைத்த நிகழ்ச்சியல்லவா அது..
பிரார்த்தனைகளும் அஞ்சலிகளும்.
ராமலக்ஷ்மி கூறியது...
வலியை வேதனையை வடித்திருக்கிறீர்கள் வரிகளில். உறவுகளை இழந்து தவிப்பவருக்கு ஆறுதல் கிடைக்க பிரார்த்தனைகளும்,
மறைந்தவருக்கு அஞ்சலிகளும்.
28 டிசம்பர், 2010 12:21 am//
கருத்துக்கும் அஞ்சலிக்கும் வருகைக்கும் நன்றிங்க.
அமைதிச்சாரல் கூறியது...
கலங்கவைத்த நிகழ்ச்சியல்லவா அது..
பிரார்த்தனைகளும் அஞ்சலிகளும்.//
தங்களின் வருகைக்கும் அஞ்சலிக்கும் என் நன்றிங்க.
ஐயோ பார்க்கவும் படிக்கவும் முடியலை கருணாகரசு..
தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
ஐயோ பார்க்கவும் படிக்கவும் முடியலை கருணாகரசு..//
வருகைக்கு நன்றிங்க.
சிறுதுளி பெரு வெள்ளம்.... உங்களின் சிலதுளிகள் பெரும் அலை ஏற்படுத்திய அழிவை மனகண் முன்நிறுத்தி கண்ணீரை வரவழைத்தது...
வரிகளின் வழியே உணர்வுகள் அற்புதமான வெளிபாடாய்...
கவிதை கதறல் நண்பரே...
It depicts the pain of the losers. Nice one !
தஞ்சை.வாசன் கூறியது...
சிறுதுளி பெரு வெள்ளம்.... உங்களின் சிலதுளிகள் பெரும் அலை ஏற்படுத்திய அழிவை மனகண் முன்நிறுத்தி கண்ணீரை வரவழைத்தது...
வரிகளின் வழியே உணர்வுகள் அற்புதமான வெளிபாடாய்...
30 டிசம்பர், 2010 3:19 am//
தஞ்சை வாசனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
யோவ் கூறியது...
கவிதை கதறல் நண்பரே...//
மிக்க நன்றிங்க.
கனாக்காதலன் கூறியது...
It depicts the pain of the losers. Nice one !//
உங்க பாராட்டுதலுக்கு என் நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கண்ணீர் அஞ்சலிகள்...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ரொம்பவும் நெகிழ்வான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...
வலி தரும் படங்கள்
நீங்கும் முன்
வரிகள் தந்தன வேதனைகள்.
மனசு வலிக்குது!
வார்த்தைகள் வரவில்லை...மௌனமே மொழியாக... என் அஞ்சலிகள் !!
கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
கண்ணீர் அஞ்சலிகள்...//
வருகைக்கு நன்றிங்க தோழர்.
THOPPITHOPPI கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க.
மாணவன் கூறியது...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////
மிக்க நன்றிங்க மாணவன்.
இனியவன் கூறியது...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க இனியவன்.
யோவ் கூறியது...
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றிங்க....
தஞ்சை.வாசன் கூறியது...
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
//
மிக்க நன்றிங்க தஞ்சை வாசன்.
Raja கூறியது...
ரொம்பவும் நெகிழ்வான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...//
வருகைக்கு நன்றிங்க ராசா.
thendralsaravanan கூறியது...
வலி தரும் படங்கள்
நீங்கும் முன்
வரிகள் தந்தன வேதனைகள்.
மனசு வலிக்குது!//
தங்களின் வருகைக்கு நன்றிங்க.
Kousalya கூறியது...
வார்த்தைகள் வரவில்லை...மௌனமே மொழியாக... என் அஞ்சலிகள் !!//
தங்களின் அஞ்சலிக்கும் வருகைக்கும் நன்றிங்க
உங்கள் கவிதை வைரமாக ஜொலிக்கிறது.
புதிய வருகையாளன் நான் வார்த்தைகளில் அவசரம் கூடாது என்பது புரிந்தது நன்றி ,
தாகம் தீர்ந்ததா தண்ணீரே!?
உன்னால்...
தரணி சிந்துதே கண்ணீரே!.
தாகம் தீர்க்கும் தண்ணீருக்கு வந்த பேராசையின் விளைவோ..யாராலும் தாங்கிகொள்ளமுடியது..
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
மாரிமுத்து.
www.oruthulithen.blogspot.com
கருத்துரையிடுக