வயது உடம்பை வளைக்கிறது!
வயிறு மரணத்தை இழுக்கிறது .
*
உறவெல்லாம் ...
எங்கேன்னு புரியலையே,
என் உயிர் எப்போ
போகுமுன்னும் தெரியலையே .
*
பட்டுன்னு செத்துப்போனா
ஒற்றை மரணம் !- நான்
பட்டினியால் சாவதுதான்
இரட்டை மரணம் !!
******
(போர் காலத்தில் வெளியான இந்த படத்திற்கு .... சிங்கப்பூர் நாளிதழ்க்கு நான் எழுதிய கவிதை )
Tweet |
6 கருத்துகள்:
அருமையான வரிகள்
தங்களின் இந்தக்கவிதையை தமிழ் முரசில் நானும் படித்துள்ளேன்
வாழ்த்துகள்
மதிப்பிற்குறிய தகழ்மிளிர் அவர்களுக்கு, நீங்கள் படித்த "இரட்டை மரணம்" கவிதையை இதே படத்துடன் தமிழ் முரசுக்கு அனுப்பினேன். ஆனால் வெறும் வரிகள்தான் வெளிவந்தன...அது படத்துடன் வந்திருந்தால் நிறைய உணர்வாளர்களை தொட்டிருக்கும்...என்ன செய்ய... அதனால்தான், இப்போது எனது வலைப்பக்கதில் பதிவு செய்துள்ளேன். ஆமா..நீங்க இங்கே இருந்துக்கொண்டு ஏன் இங்கு நடைபெரும் கவிதை நிகழ்வுக்கு வருவதில்லை? வருவதற்கு முயற்சிக்கவும். உங்கள் வருகையை எதிர் பர்க்கிறேன்......... கருத்துரைக்கு மிக்க நன்றி.
அன்புடன் நான்....
சி.கருணாகரசு.
/, நீங்கள் படித்த "இரட்டை மரணம்" கவிதையை இதே படத்துடன் தமிழ் முரசுக்கு அனுப்பினேன். ஆனால் வெறும் வரிகள்தான் வெளிவந்தன...அது படத்துடன் வந்திருந்தால் நிறைய உணர்வாளர்களை தொட்டிருக்கும்...என்ன செய்ய... அதனால்தான், இப்போது எனது வலைப்பக்கதில் பதிவு செய்துள்ளேன்./
உண்மை தான்
முரசில் வெறும் வரிகளை மட்டும் தான் கண்டேன்.
படத்துடன் பார்க்கும் இன்னும்
மனத்தில் மறக்க முடியாத வலியை
உண்டாகிறது
/ஆமா..நீங்க இங்கே இருந்துக்கொண்டு ஏன் இங்கு நடைபெரும் கவிதை நிகழ்வுக்கு வருவதில்லை? வருவதற்கு முயற்சிக்கவும். உங்கள் வருகையை எதிர் பர்க்கிறேன்......../
எனக்கு கவிதையைவிட அகராதி, சொல்லாராய்ச்சி, சொல்லாக்கம் இவற்றில் தான் அதிக நாட்டம்
மற்றப்படி ஒன்றுமில்லை
தாங்களின் மிக்க நன்றிங்க
அன்புடன்
திகழ்
உங்களின் மடலுக்கு மிக்க நன்றிங்க திகழ்.
அருமை.பூங்கொத்து ..!
பூங்கொத்துக்கு மிக்க நன்றிங்க அருணா.
கருத்துரையிடுக