ஜனவரி 31, 2010

நீ ...


நிலவுக்கு...நீ
நிகரானவள் அல்ல !
நிலா ...
பார்க்கத்தான் ...
நெஞ்சையள்ளும்!
பக்கம்சென்றால் ...
மேடுப்பள்ளம் !!
எனவே...
நிலவுக்கு ...நீ
நிகரானவள் அல்ல!!!
(மீள் பதிவு )

ஜனவரி 26, 2010

கவிதாஞ்சலி (முத்துக்குமார்)


உலகத் தமிழினத்தின்
உறவாகிப்போன _ இன
உணர்வாளனே !
*
ஒற்றைத் தீக்குச்சியினால்
உலகின் மௌனத்தை எரித்த
மாவீரனே !
*
உனக்குள் எரிந்த
உணர்வலைகளை
உலகிற்கும் உணர்த்த
உயிர் ஈகம் செய்தவனே !
*
வல்லுறுகள் கொத்தித் தின்னும்
நம் ,
உறவின் துயரை ...
பார்க்க இயலாது
திணித்துக் கொண்டாயா
தீக்குள் உயிரை ?
*
நாங்கள் ,
வாழ்ந்து இறப்பவர்கள் .
நீ ,
இறந்தும் வாழ்பவன் !
*
இந்த இனமும்
இந்த மொழியும்
இருக்கும் வரை ...
நீ ,
கம்பீரத்தின்
அடையாளமாவாய் .
*
முத்துக் குமரா ,
அந்த தீவின்
அநீதிகளை...
எரிந்து எதிர்த்த உனக்கு ...
இந்த தீவின்
உன் ,
உறவான எங்களின்
வீர வணக்கமும்
அக அஞ்சலியும்
காணிக்கையாக
*
இந்த
கவிதையின் வாயிலாக _உன்
காலடிக்கு .
*
*
(முத்துக்குமார் அஞ்சலி நிகழ்வுகளில் கலத்துகொண்ட காட்சியும்
கடற்கரையில் மலரஞ்சலி நிகழ்வில் நான் வாசித்த கவிதையும் )
(..... இது ஒரு மீள் பதிவுங்க )

ஜனவரி 15, 2010

வட்டிக் கடன்

தற்காலிகத் தீர்வென வந்து
தன்மானத்தை சிதைக்கும் !
எக்காலும் அவன் வாழ்வை
ஏறவிடாமல் வதைக்கும் !!

வளருமந்த வட்டிமட்டும்
வானளவு தழைக்கும் !_அதில்
வாங்கியவன் தினம்வாட
வாழ்க்கை எங்கே பிழைக்கும் ?

வட்டி ...
உணர்வை கொன்றுவிடும் !
சிலநேரம் ...
உயிரை கூட தின்றுவிடும் !!

இது ,
நிம்மதிக்கு பகை !
என்றும் ...
நெருடுகின்ற வகை !!

மனிதா ...
வட்டிகடன் வாங்காமல்
வாழ்க்கை நடத்த கற்கணும் !
இல்லையேல் ...
வாழ்வாதாரம் இழந்துபோய்
வாழ்வில் விளிம்பில் நிற்கணும் !!


ஜனவரி 13, 2010

உழவர்



கலப்பை சுமந்து

உலகின் ...

களைப்பை போக்கும்

கழனிக் கடவுள் .

ஜனவரி 09, 2010

மரம்

மரம் ஒரு
பச்சையக் கடவுள்...
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் ...
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .

மரம் ...
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா ...
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ ... "தா"வரம் .

மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!

மனிதா ...
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் ... புது
கொள்கைத் தரி !!
Related Posts with Thumbnails