போருக்குப்பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போருக்குப்பின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூலை 11, 2009

போருக்குப்பின்...

அந்த இடிந்த வீட்டை
சுற்றிச் சுற்றி வந்தது .
*
முறிந்து கிடந்த கட்டிலை
முகர்ந்து பார்த்தது .
*
பின்
வாசலில் நின்று
உள்ளே பார்த்து குறைத்தது .
*
இப்போது ,
வீட்டோரமாய்
படுத்துக் கிடக்கிறது .
*
தன்னைப் போல்
அவர்களும் ...
திரும்புவார்கள் என்று !
*
அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.
Related Posts with Thumbnails