தரகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 23, 2014

கிணற்றுத் தவளை

அன்றொரு நாள் 
விற்பனைப் பொருளுடன்
வீட்டிற்கு வந்திருந்தனர்
வியாபாரிகள் .


விருந்து உபசரிப்புக்கு பின்
விற்பனை பொருளின்
தரம் பேசப்பட்டு
தரத்திற்கு ஏற்றார்போல்
விலை பேசப்பட்டது.

கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில்
தரகனின் பேரம்
இருதரப்பினராலும்
ஏற்கப்பட்டது.

பேசப்பட்ட அளவில்
வாங்கியவர்
கொடுத்தனுப்பினார்
பணம்
பாத்திரம்
வாகனம்
நகை
இருபத்தொரு வயது மகள்.

'கிணற்றுத் தவளை' யாகிப்போனது
இருபத்தொரு ஆண்டுகள்
சிறகடித்த உயிர் ஒன்று.
Related Posts with Thumbnails