ஜனவரி 15, 2010

வட்டிக் கடன்

தற்காலிகத் தீர்வென வந்து
தன்மானத்தை சிதைக்கும் !
எக்காலும் அவன் வாழ்வை
ஏறவிடாமல் வதைக்கும் !!

வளருமந்த வட்டிமட்டும்
வானளவு தழைக்கும் !_அதில்
வாங்கியவன் தினம்வாட
வாழ்க்கை எங்கே பிழைக்கும் ?

வட்டி ...
உணர்வை கொன்றுவிடும் !
சிலநேரம் ...
உயிரை கூட தின்றுவிடும் !!

இது ,
நிம்மதிக்கு பகை !
என்றும் ...
நெருடுகின்ற வகை !!

மனிதா ...
வட்டிகடன் வாங்காமல்
வாழ்க்கை நடத்த கற்கணும் !
இல்லையேல் ...
வாழ்வாதாரம் இழந்துபோய்
வாழ்வில் விளிம்பில் நிற்கணும் !!


36 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

very fact.... very good poem..

one has to follow...

சத்ரியன் சொன்னது…

நல்லாச் சொன்னீங்க.....

திகழ் சொன்னது…

அருமை

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது
இப்படி எல்லாம் கவிதை எழுத‌
அதிலும் வார்த்தைகள் அம்புகளாய்த் தொடுக்க‌

சிறிய ஐயம்

/கற்கணும்!/ //நிற்கணும்//


வாழ்த்துக‌ள்

நாய்க்குட்டி மனசு சொன்னது…

வட்டிக்கு கடன் வாங்கி தலைமுறை தலைமுறையாய் வெளியேற முடியாத சுழலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழி சொல்லத் தெரியவில்லை. பணக் கஷ்டம் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா?
என்று கேட்பவர்கள் முன் பதிலிழந்து நிற்க வேண்டி இருக்கிறது.

சி. கருணாகரசு சொன்னது…

பெயரில்லா கூறியது...
very fact.... very good poem..

one has to follow...//

தங்களின் வருகைக்கும்.... கருத்து தருகைக்கும் நன்றிங்க..... மறறும் பொங்கல் வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு சொன்னது…

சத்ரியன் கூறியது...
நல்லாச் சொன்னீங்க.....//

நல்லா சொன்னேனா????? எழுதிதானே இருக்கேன்!!!

எப்படீ????

நன்றிங்க சம்மந்தி.

சி. கருணாகரசு சொன்னது…

திகழ் கூறியது...
அருமை

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது
இப்படி எல்லாம் கவிதை எழுத‌
அதிலும் வார்த்தைகள் அம்புகளாய்த் தொடுக்க‌

சிறிய ஐயம்

/கற்கணும்!/ //நிற்கணும்//


வாழ்த்துக‌ள்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க. தவறை திருத்தி விட்டேன்.... சுட்டி காட்டலுக்கு... மிக்க நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
வட்டிக்கு கடன் வாங்கி தலைமுறை தலைமுறையாய் வெளியேற முடியாத சுழலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழி சொல்லத் தெரியவில்லை. பணக் கஷ்டம் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா?
என்று கேட்பவர்கள் முன் பதிலிழந்து நிற்க வேண்டி இருக்கிறது.//

வருகைக்கு நன்றிங்க....

முடிந்தவரை... வட்டிகடன் வாங்காமல் வாழ்க்கை வண்டியை ஓட்ட கற்றுகணும்... என்பதே எமது ஆசை. இது முயன்றால் முடியும் ஒன்றுதான்!

அரங்கப்பெருமாள் சொன்னது…

உண்மைதான்.கடன் வாங்காம என்ன பண்ணமுடியுது? முயற்சிப் பண்ணுவோம்.

இதுக்குத் தீர்வா, அநாவசியச் செலவைக் குறைத்தல்,சேமிப்பு(எறும்பு மாதிரி)அவசியத்தையும் சொல்லியிருக்கலாமோன்னு.... (ஒரு யோசனை)
கவிதை நன்றாக உள்ளது கருணா.

சி. கருணாகரசு சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
உண்மைதான்.கடன் வாங்காம என்ன பண்ணமுடியுது? முயற்சிப் பண்ணுவோம்.

இதுக்குத் தீர்வா, அநாவசியச் செலவைக் குறைத்தல்,சேமிப்பு(எறும்பு மாதிரி)அவசியத்தையும் சொல்லியிருக்கலாமோன்னு.... (ஒரு யோசனை)
கவிதை நன்றாக உள்ளது கருணா.//

வருகைக்கு நன்றிங்க..... யோசனையும் அருமை....

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆசைகளால் ஏற்படும் அதீத தேவைகளே இதற்கு முதற்காரணம்.

நல்ல சொல்லியிருக்கீங்க


வழங்கியவன் கொண்டாட
வாங்கியவன் திண்டாட ...

சி. கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
ஆசைகளால் ஏற்படும் அதீத தேவைகளே இதற்கு முதற்காரணம்.

நல்ல சொல்லியிருக்கீங்க


வழங்கியவன் கொண்டாட
வாங்கியவன் திண்டாட ...//

மிக்க நன்றிங்க ஜமால்!
வருகைதந்ததுக்கும்.... இந்த கவிதை எழுத தூண்டியதற்கும்.

விஜய் சொன்னது…

வட்டி

கொடுப்பவனின்
வயிறு சுறுக்கி வாங்குபவனின்
வயிறு வளர்க்கும்
ஓர் அநியாய ஹார்மோன்

வாழ்த்துக்கள்

விஜய்

Toto சொன்னது…

ரொம்ப‌ ந‌ய‌மான க‌விதை.. அழ‌கா சொல்ல்லியிருக்கீங்க‌.


-Toto
roughnot.blogspot.com

susi சொன்னது…

நல்ல கருத்து.

கவிதை வடிவில அருமையா சொல்லி இருக்கீங்க.

சி. கருணாகரசு சொன்னது…

விஜய் கூறியது...
வட்டி

கொடுப்பவனின்
வயிறு சுறுக்கி வாங்குபவனின்
வயிறு வளர்க்கும்
ஓர் அநியாய ஹார்மோன்

வாழ்த்துக்கள்

விஜய்//

கருத்தை கூட கவிதையாய் சொன்னன் தங்களுக்கு மிக்க நன்றிங்க விஜய்.

சி. கருணாகரசு சொன்னது…

Toto கூறியது...
ரொம்ப‌ ந‌ய‌மான க‌விதை.. அழ‌கா சொல்ல்லியிருக்கீங்க‌.//

தங்களின்.... முதல் வருகைக்கும் கருத்துக்கும்... மிக நன்றிங்க.... தொடர்ந்து வாங்க.

சி. கருணாகரசு சொன்னது…

susi கூறியது...
நல்ல கருத்து.

கவிதை வடிவில அருமையா சொல்லி இருக்கீங்க.//

தங்களின் வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றிங்க.... சுசி...தொடர்ந்து வாங்க.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//மனிதா ...
வட்டிகடன் வாங்காமல்
வாழ்க்கை நடத்த கற்கணும் !
இல்லையேல் ...
வாழ்வாதாரம் இழந்துபோய்
வாழ்வில் விளிம்பில் நிற்கணும் !!//


நல்ல வரிகள் ப்ராட்டுகள் நண்பா

சி. கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
//மனிதா ...
வட்டிகடன் வாங்காமல்
வாழ்க்கை நடத்த கற்கணும் !
இல்லையேல் ...
வாழ்வாதாரம் இழந்துபோய்
வாழ்வில் விளிம்பில் நிற்கணும் !!//


நல்ல வரிகள் ப்ராட்டுகள் நண்பா//

வருகைக்கும்... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.... ஞானசேகரன்.

துபாய் ராஜா சொன்னது…

நிதர்சனமான வரிகள்.

கடன் என்றும் நாட்டிற்கும்,வீட்டிற்கும், நட்பிற்கும் பகை தான்.

அண்ணாமலையான் சொன்னது…

உண்மைதான்.. நல்லா சொன்னீங்க..

கமலேஷ் சொன்னது…

சத்தியமான வரி இதை வாழ்க்கைல ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சிக்கிட்டேன்...

ஹேமா சொன்னது…

கடன்.....வட்டி...அச்சோ
....ஓடிப்போயிடறேன்.
அடுத்த கவிதை வரைக்கும்
வரல இந்தப் பக்கம்.
அரசு எங்க பொங்கல் ?

சி. கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
நிதர்சனமான வரிகள்.

கடன் என்றும் நாட்டிற்கும்,வீட்டிற்கும், நட்பிற்கும் பகை தான்.//

வருகைக்கு நன்றிங்க துபாய் ராசா.

சி. கருணாகரசு சொன்னது…

அண்ணாமலையான் கூறியது...
உண்மைதான்.. நல்லா சொன்னீங்க..//

வணக்கமுங்க... வருகைக்கு நன்றிங்க தொடர்ந்து வாங்க.

சி. கருணாகரசு சொன்னது…

கமலேஷ் கூறியது...
சத்தியமான வரி இதை வாழ்க்கைல ரொம்ப லேட்டாதான் தெரிஞ்சிக்கிட்டேன்...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
கடன்.....வட்டி...அச்சோ
....ஓடிப்போயிடறேன்.
அடுத்த கவிதை வரைக்கும்
வரல இந்தப் பக்கம்.
அரசு எங்க பொங்கல் ?//

மிக்க நன்றிங்க ஹேமா.... பொங்கல்.... வாழ்த்தா அனுப்பினேன்... கிடைத்ததுதானே?

ஸ்ரீராம். சொன்னது…

நல்லாச் சொன்னீங்க..

ஆனா என்ன பண்ண? அரசாங்கமே கடன்லதான் வாழ்க்கை ஓட்டுது.. மன்னன் எவ்வழி..

சி. கருணாகரசு சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
நல்லாச் சொன்னீங்க..

ஆனா என்ன பண்ண? அரசாங்கமே கடன்லதான் வாழ்க்கை ஓட்டுது.. மன்னன் எவ்வழி..//

வருகைக்கு மிக்க நன்றிங்க்ச் ஸ்ரீராம்.

velkannan சொன்னது…

தவிர்க்க முடியாத காலதமதமாகிவிட்டது தோழர், அதற்குள் நான் சொல்ல நினைத்த அனைத்தையும் நமது நண்பர்கள் சொல்லிவிட்டார்கள் தோழர். மகிழ்ச்சி தான்.

vasanthi சொன்னது…

kavithai arumai...... aparam pongal eppadi irunthathu.

சி. கருணாகரசு சொன்னது…

velkannan கூறியது...
தவிர்க்க முடியாத காலதமதமாகிவிட்டது தோழர், அதற்குள் நான் சொல்ல நினைத்த அனைத்தையும் நமது நண்பர்கள் சொல்லிவிட்டார்கள் தோழர். மகிழ்ச்சி தான்.//

வருகைக்கு மிக்க மகிழ்ச்சினக தோழர்......

சி. கருணாகரசு சொன்னது…

vasanthi கூறியது...
kavithai arumai...... aparam pongal eppadi irunthathu.//

வருகைக்கு மிக்க நன்றி வசந்தி.... பொங்கல் சிறப்பாக இருந்தது.

சி. கருணாகரசு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜோதிஜி சொன்னது…

நிம்மதிக்கு பகை என்பது வாழ்நாள் முழுக்க நெருடுகின்றதாக தொடர்ந்தாலும் அணைவரையும் விடாது துரத்தும் கருப்பாகத்தான் இருக்கிறது. வாழ்ந்த குடும்பத்தை விட அழிந்தவர்கள் தான் அதிகம். மிகவும் சிறப்பு நண்பரே.

Related Posts with Thumbnails