துளிகலெல்லாம் ஒன்றாகி
நீரோட்டமாய் உருபெற்று
உலக வெப்பம் தணித்து
உழவர் ஏக்கம் போக்கி
பாதையெல்லாம் ஈரமாக்கி
பயிரையெல்லாம் இதமாக்கி
தாகம் தீர்த்து,
தரணிச்செழிக்க... ... ...
வளைந்து...
நெளிந்து...
சலசலத்து...
பாய்ந்து...
தேங்கி...
நிரப்பி...
விழுந்து...
வழிந்து...
நகர்ந்து...
தன் பாதை முழுதும்
வசந்தத்தை
விதைத்து செல்லுமதில்...
உனக்கும் பாடமிருக்கு
உற்றுக்கவனி மனிதா.
அந்த
மெல்லிய நீரோட்டத்தின்
மெய்சிலிர்க்கும் பயனணத்தை!
Tweet |
4 கருத்துகள்:
நல்ல பயணம்
மிக்க நன்றி...ஞானசேகரன்.
பாடஞ்சொல்லும் பயணம் அருமை
மிக்க நன்றிங்க...இன்பா
கருத்துரையிடுக