ஜூலை 21, 2009

சோதிடம்


இது ,
நம்பிக்கையின் ...
அடர்த்தியை கெடுத்துவிடும் !
*
இதை ,
நம்பியோர் ...
முயற்சிகள் படுத்துவிடும் !!

6 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது…

தாங்கள் ஜோதிடம் குறித்த தவறான புரிதலோடு இந்த கவிதையை எழுதியுள்ளீர்கள்.

ஜோதிடம் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி. (மேலும் கிரகங்களுக்கு பார்வதி தேவியின் சாபம் ஒன்றுள்ளதாம். எவனொருவன் "பசி நோக்கார்,கண் துஞ்சார்"னிட்டு கருமமே கண்ணாயிருக்கானோ அவன் விஷயத்துல கிரகம் வேலை செய்யாதாம்)

ஜோதிடம் குறித்த அறிவியல் பூர்வமான அணுகலுக்கு என் வலைப்பூவினை பாருங்கள்

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

சி.கருணாகரசு சொன்னது…

என்னுடைய தள‌த்தை த‌ங்களின் தளத்தில் அமைத்த செய்தி விடயத்திற்கு மிக்க நன்றி
அன்புடன் நான்.
சி.கருணாகரசு.

சி.கருணாகரசு சொன்னது…

சித்தூர் முருகேசனுக்கு,
நான் ஒரு நல்ல இந்து. கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால் சாதகம்,சோதிடம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவன். காரணம் கடவுளிடம் "கடவுளே எனக்கு நல்ல ஆயுளைக் கொடு, நல்ல உடல் நலத்தைக் கொடு என்று வேண்டியப்பின்...சோதிடம் பார்ப்பது எதற்கு? கடவுள் காப்பார் என்ற நம்பிக்கை இல்லையா?...தன்னை கடவுளிடம் ஒப்படைத்தப்பின் சாதகம் எதற்கு? இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... எதுவாயினும் கருத்துரைக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

வணக்கம் கருணாகரசு.சோதிடம் பற்றிய மூடநம்பிக்கைக்கு ஒரு அறை கொடுத்திருக்கிறீர்கள்.என்னைப் பொறுத்தமட்டில் சோதிடத்தைப் பார்த்தாலும் அதையே நம்பிவிடுவதுதான் ஆபத்தானது.

சி.கருணாகரசு சொன்னது…

வண‌க்கம் ஹேமா, சோதிடம் மனிதனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். தனிட்பட்ட மனிதனின் வெற்றியோ தோல்வியோ அவனவன் திறனைப் பொறுத்தது என்பது என் கருத்து. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails