எதிர்பார்போடு வந்திருப்பான்
என்றெண்ணி...
அவசரமாய் விடைபெரும்போதும்.
இவனால் நமக்கேதும்
இல்லையே ஆதாயம்
என்றே விலகும்போது...
அவனால் முடியும் என்று
அன்பொழுக காய் நகர்த்தி
அரவணைப்பாய் நெருங்கும்போது...
இப்படி,
பலரால்
பலமுறை - நான்
பார்த்திட்டதெல்லாம்
உணர்வு வற்றிய
தன்னல சிரிப்புதான்.
எத்தனை வளர்ந்த பின்னும்
என்னை கண்டு பூரித்து
பூத்திட்ட சிரிபோன்று
ஆறு ஆண்டுகளாய்
தேங்கியே கிடக்கிறது.
என்...
நெஞ்சிலும்
நிழற்படத்திலும்
அந்த...
அழகின் சிரிப்பு - என்
அம்மாவின் சிரிப்பு.
Tweet |
2 கருத்துகள்:
அருமையான எண்ணலைகள்
//கவிமாலையில்
களம்
கண்ட
கவிதையா//
//
ஏனெனில் ஒருமுறை கவிமாலையின்
தலைப்பாய் அழகின் சிரிப்பு என்று கேள்வி பட்டமையால்/
ஆமாம் திகழ், கவிமாலையில் களம் புகுந்த கவிதைத்தான். கருத்துரைக்கு நன்றி.
கருத்துரையிடுக