ஜூலை 27, 2009

மதிப்பீடு

வறுமைத் தின்ற பாரதிக்கு
வாய்க்கரிசி போடாத சமூகம்
அவனின் ...
கோபத்தை இன்று
கொண்டாடிக் கொண்டிருக்கிறது .
*
அலுமினியத்தில் இருக்கும்
அட்சயப் பாத்திரத்தை விட
தங்கத்தில் இருக்கும்
திருவோட்டைத்தான் மதிக்கிறது
*
மாலைக்கு ஏங்கும்
தினவெடுத்த தோள்கள்
பிணமாகவும் உடன்படுகிறது .
*
கர்ணன் வள்ளல் என்பதால்
கவச குண்டலங்களை
கவர்வது முறையா ?
*
கலைவடிவங்களுக்கு
கண்மை தீட்ட _ அதன்
கருவிழியை கேட்பது தகுமா ?
*
வாலாட்டத் தெரியாதவர்களே !
உங்களுக்கு ...
பாராட்டு என்பது
பகல் கனவே .
*
எச்சரிக்கையாய் இருங்கள்
இங்கே...
எல்லோரவிலும்
எச்சில் துப்புகின்றவர்களே
ஏகமாய் அலைகிறார்கள் .

8 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

/அலுமினியத்தில் இருக்கும்
அட்சயப் பாத்திரத்தை விட
தங்கத்தில் இருக்கும்
திருவோட்டைத்தான் மதிக்கிறது /

உண்மை படம் பிடித்துள்ளீர்கள்

அற்புதம்

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திகழ்மிளிர்.

ஹேமா சொன்னது…

//வறுமைத் தின்ற பாரதிக்கு
வாய்க்கரிசி போடாத சமூகம்
அவனின் ...
கோபத்தை இன்று
கொண்டாடிக் கொண்டிருக்கிறது.//

பாரதியின் கோபத்தைவிட உங்களுக்குள் உள்ளிருக்கும் சமூகத்தைப் பற்றின கோபத்தைக் கவிதை வரிகள் மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்.அருமை.

சகோதரன் ஜெகதீஸ்வரன் சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி...

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு நன்றிங்க ஹேமா, கோபம் மனித இயல்பு...ஆனால் நேர்மையான கோபத்தை ஒதுக்கிவிட கூடாது என்பதுதான் என் எண்னம்.

சி.கருணாகரசு சொன்னது…

வந்துவிட்டேன் ஜகதீஸ்வரன்... உங்களின் பட்டாம் பூச்சி தளம் பிரமாண்டம்.

Kala சொன்னது…

வெயிலில் போகும் போதுதான்
நிழலின் அருமை புரியும்
இல்லாத போது தேடுவதும்...
இருப்பதைப் பிடுங்குவதும்
மின்னும் போது ஒட்டுவதும்
சில மனிதர்களின் குணம்
என்ன! செய்ய...உணர்ச்சி
மிக்க கவிதை.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கலா.

Related Posts with Thumbnails