நான் ,
உங்கள் வாழ்வின்
ஆதார அச்சாணி .
*
நான் இல்லையேல்
"சுழியம்" தான்
உங்கள் வாழ்வு .
*
என் ,
கணையம் , கல்லீரல்
இதயம் அத்தனையையும்
கனிம வளங்களென
சுரண்டி தின்கின்றீர்கள்
*
என் இரத்தத்தை
ஆழ்துளைக் குழாய்மூலம்
உறிஞ்சியப்பின் ...
நூரையீரலைப் பிடுங்கி
வாயுக் கலன்களில் அடைத்து
வசதியாய் வாழ்கின்றீர்கள்.
*
எலும்பைப் போர்த்திய தோலாய்
ஏதோ இருக்கிறேன் .
என்னை ,
உங்கள் வாரிசுகளுக்கு
"சொத்தையாய் " வைக்காமல்
"சொத்தாய் " வைத்துச்செல்லுங்கள்.
*
இன்னுமா புரியவில்லை ...
நீங்கள் உதைத்து விளையாடும்
இன்றைய ... "பூமி நான் ".
Tweet |
2 கருத்துகள்:
பூமித்தாயைப் போற்றியே ஆகவேணும்.சொந்தபந்தம் எம்மை வேண்டாம் என்று தள்ளி விட்டாலும் பூமித்தாய் எம்மை ஒரு போதும் தள்ளவோ ஒதுக்கவோ மாட்டாள்.
நன்றியோடு அவள் இயற்கை வளத்தைக் காப்போம் நாம்.
ஹேமா கூறியது...
பூமித்தாயைப் போற்றியே ஆகவேணும்.சொந்தபந்தம் எம்மை வேண்டாம் என்று தள்ளி விட்டாலும் பூமித்தாய் எம்மை ஒரு போதும் தள்ளவோ ஒதுக்கவோ மாட்டாள்.
நன்றியோடு அவள் இயற்கை வளத்தைக் காப்போம் நாம்.//
உங்களின் கருத்து 100 விழுக்காடு சரியே.கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஹேமா.
கருத்துரையிடுக