அந்த இடிந்த வீட்டை
சுற்றிச் சுற்றி வந்தது .
*
முறிந்து கிடந்த கட்டிலை
முகர்ந்து பார்த்தது .
*
பின்
வாசலில் நின்று
உள்ளே பார்த்து குறைத்தது .
*
இப்போது ,
வீட்டோரமாய்
படுத்துக் கிடக்கிறது .
*
தன்னைப் போல்
அவர்களும் ...
திரும்புவார்கள் என்று !
*
அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.
Tweet |
5 கருத்துகள்:
//அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.//
ஆகா.....அருமை நண்பா
உங்களைப் போன்றோர்களின் கருத்துரைத்தான்...இதுபோன்ற வலிகளை பதிவுச் செய்ய உந்து சக்தியாக இருக்கிறது. கருத்துரைக்கு மிக்க நன்றி... திரு ஆ.ஞானசேகரன்.
//அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.//
சொல்லாமல் விட்டுவிடுங்க.
நாய்க்குட்டி நிம்மதியாக இருக்கட்டும்.
அந்த நாய் குட்டிக்கு நிச்சயம்மாக சொல்லமாட்டேன் அருணா. கருத்துரைக்கு மிக்க நன்றி
மாமா உங்களின் வரிகள்... மிக அருமை...
வலிகொண்ட இதயத்தின் வலியை இதயமே இல்லாதவன் எப்படி அறிவான்...
கருத்துரையிடுக