ஜூலை 10, 2009

மறுநடவு (திரு நங்கை)


எங்களை மதிக்க வேண்டாம்
உங்கள் கால்களை கொஞ்சம் ...
நகர்த்துங்கள் போதும் .
உங்கள் ...செருப்பின் கீழ்
மிதிப்பட்டு - உயிர்
அறுப்பட்டு கிடக்கின்றோம் .
*** ***
இந்த பிரபஞ்சத்தின்
எத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட ,
"உங்கள் அறிவு "
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கொண்டிருப்பதுதான்
புரியவில்லை !
*** ***
எங்கள் துயர்துடைக்க
எத்தனிக்காத நீங்கள் ...
எங்களை ...
அருவெறுத்து ஒதுக்க
அருகதை அற்றவர்கள் .
*** ***
எங்களை
உயிர் பிண்டமாக கூட
மதிக்காத
உங்கள் புத்திக்கு
எங்களை ,
கேவலமான அடைமொழிகளால்
கீறுவதுதான் இன்பம் !
*** ***
சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும் ...
பேனா பிடிக்கும்
பிதா மகன்களே !
நீங்களேனும்,
திருத்தி எழுதுங்களேன்
எங்களை ...
"திரு நங்கை " என்று .
*** ***
ஏனெனில் ,
மனிதர்களில்
"மறுநடவு " செய்யப்பட ...
எங்களுக்கு ,
அதுதான் ஓர்
அழகியல் அங்கிகாரம் .
************************

5 கருத்துகள்:

IKrishs சொன்னது…

Thirunangaigal palar thannambikkaiyodu munnera aarambichachu. kavaithai yengira peyaril parithaba unarchiyai thinithu avargali kevala padithi irikureergal..Kavithai karuporulaga Kaibengal,muthirkannigal padatha patta varisayil ivargalayum serka paarkum indha muyarichi veruppaye yerpaduthu kirathu...Krish

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கிரிஷ்....நீங்கள் கண்ட திருநங்கைகள் மேல்மட்டத்தில், நான் காணும் திருநங்கைகள் கீழ்மட்டத்தில். இன்று திருநங்கைகள் துயரத்தை முழுமையாக துடைத்தெரிந்து விட்டோமா? ஓரிரு திருநங்கைகளை விடுத்து நிறைய திருநங்கைகளின் பாடு மிகவும் பாழ்பட்டே கிடக்கிறது தெரியுமா?....குறைந்தபச்சம் ஒரு தனி கழிப்பறையாவது உண்டா??? இருப்பினும் ஒரு திருநங்கை, இந்த படைப்பை தவிர்க்க சொல்லட்டும்...உடனே இந்த இடுகையை எடுத்து விடுகிறேன்...நான் நல்ல நோக்கத்திற்காகவே எழுதினேன்....மீண்டும் உங்கள் கருத்துரையை எதிர்பார்க்கிறேன். நன்றி.

IKrishs சொன்னது…

Thangal bathilukku nanri..Neenghal sonnadhu pol thiru nangaigalin avala nilai thodarvadhu unmaiye..Avargalin parithaba nilai mattme pathivu seyya patuvadhu kandu aadhangathil ittadhe andha pinnottam..Melum neengal sonnadhu pol Thiru nangaigal ik kavidhai gali yeppadi paarkiraargal yenbathum mukkiyam..

Natpudan,
UM.Krish

IKrishs சொன்னது…

Thamathamana pathilukku mannikkavum..

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க கிரிஷ்...உண்மையில் இந்த கவிதையை திருநங்கைகள் எப்படி பார்க்கிறார்கள் எப்பதும் முக்கியமே! ஒரு படைப்பு என்பது பலகீனமானவர்களை கீறிப் பார்க்கும் ஆயுதமாக இருக்ககூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முடிந்தவரை நல்ல படைப்பாளியாக இருப்பேன்.......கருத்துரைக்கு மிக்க நன்றி.
அன்புடன் நான்....
சி.கருணாகரசு.

Related Posts with Thumbnails