ஏழெட்டு திங்களுக்கு
பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை.
உன் வரவு
உறுதியானதிலிருத்து,
உலகம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட.
உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் திளைக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.
பத்தாம் மாதம்
என் வானமாகமல்,
பத்து வார
வானவில் ஆனதேன்?
வந்துக்கொண்டே இருக்கும் _உன்
வரவுக்கான ...
வாழ்த்துக்களை என்னச்செய்ய?
இப்போதும்,
உலகம் பெரிதாய் இல்லை...
என் வலியை விட.
கொட்டிக் கிடக்கிறது...
குங்குமப்பூ.
சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர் முன்.
Tweet |
4 கருத்துகள்:
ம்ம்ம்...படித்தவுடன் மனதுக்குக் கஷ்டமாயிருந்தது.....புனைவுதானே????நிஜமல்லவே???
புனைவுதான் என்றால்.......அது பொய்.
இப்போது புரிகிறது வலி...
பின்னூட்டத்தில் கூடத் தெரிகிறது.
அரங்கப்பெருமாள் கூறியது...
இப்போது புரிகிறது வலி...
பின்னூட்டத்தில் கூடத் தெரிகிறது.//
தங்களின் வருகைக்கு என் வணக்கம்.
கருத்துரையிடுக