ஆகஸ்ட் 25, 2010

வானம் வசப்படும்?


தொட்டுணர முடியாத
தொலைதூர மாயை
உச்சரிக்கப்படுகிறது
உண்மைக்கு மாறாக...
வானம் வசப்படுமென்று.

“வானம் வசப்படும்”
நடக்காத ஒன்று இது
நம்பிக்கைக்கு உதாரணம்!
உண்மைக்கு புறம்பாய் இது
உருவாக யார்க்காரணம்?


வானம் வசப்படும் என்பது
மோனைக்கென சொல்லப்பட்ட...
முரண்.
முன்னேற்றத்திற்கு தேவைத்
தனித்திறன்.


வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?

.

67 கருத்துகள்:

Chitra சொன்னது…

வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?


......சரியான கேள்வி!
வானுயுற வளர வாழ்த்துகிற மாதிரி ....... வானமே எல்லையாய் இருக்கிற மாதிரி..... ம்ம்ம்ம்.....

Jerry Eshananda சொன்னது…

ஆஹா...

ராஜவம்சம் சொன்னது…

மேகம் வசப்படும் என்றால் சரியாக இருக்குமோ!

Katz சொன்னது…

Superu.....

vasu balaji சொன்னது…

வணக்கம் கருணாகரசு. ரொம்ப அருமையா இருக்கு.

தேவன் மாயம் சொன்னது…

கருணா! கவிதை வசப்பட்டுவிட்டேன்!

நாடோடி சொன்னது…

கேள்வியாய் க‌விதை.. ந‌ல்லா இருக்கு.

சீமான்கனி சொன்னது…

//வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?//

வானத்தை வம்பிழுக்காமல் வாழ்த்துகளுக்கு தெம்பூட்ட வைத்திருப்பார்களோ...அருமை கருணா அண்ணா வாழ்த்துகள்..

நட்புடன் ஜமால் சொன்னது…

வித்தியாச சிந்தனைகள் - நன்று

அரசூரான் சொன்னது…

முரணாயிருந்தும் நம்பிக்கை!

அதை நீங்கள் கவிதையாய் வசப்படுத்தி விட்டீர்கள்!!

ஹேமா சொன்னது…

அரசு...வானம் வசப்படும் என்பது....ஒரு சும்மா !

கலா சொன்னது…

வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?\\\\\\\

அதைத்தான் நானும் கேட்க்கின்றேன்....
அது யாரு தொல்லையும் வேண்டாமென்று
எட்டாத உயரத்தில் இருக்குபோது
கருணாகரசுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
நீங்களும் தானே அதை வம்புக்கு
இழுத்திருக்கிறீர்கள்!

ஓஓஓ “அவள்” வசம் இருந்த உங்களை..

தன் வசவெளி{வழி}யாய் இங்கு கொண்டு
வந்து பிரித்து வைத்திருப்பதற்கா??

பாவம் வானம் இரண்டு பக்கமும் அடி!!

Asiya Omar சொன்னது…

வானம் வசப்படும் தூரம் தான்..
என்று சொல்வதுண்டு,
அட உங்கள் சிந்தனையும் சரி தான்.

ஸ்ரீராம். சொன்னது…

வானம் வசப் படுமோ இல்லையோ அரசு, வரிகள் உங்கள் வசப் பட்டிருக்கின்றன. அருமையான கருத்தில் அழகான கவிதை.

Riyas சொன்னது…

இது போன்ற கவிதைகளால் மட்டுமே முடிகிறது வானத்தையும் தாண்டிச்செல்ல.. நல்ல கவிதை

Gayathri சொன்னது…

ஹாஹா நல்ல கேள்வி..வானத்தைத்தான் கேக்கமுடியும்..

இன்றைய கவிதை சொன்னது…

கருணாகரசு

அருமை, வசப்பட பல இருந்தும் வானத்தை வம்பிழுப்பது எதற்கு என வானளாவியிருக்கிறீர்கள், விண்ணுக்கு வினா , அழாகாயிருக்கிறது

நன்றி ஜேகே

வலசு - வேலணை சொன்னது…

உங்கள் கருத்துடன் நான் முரண்படுகின்றேன்.

எதை வானமாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

பூமியின் மேற்பரப்பினின்றும் விடுபட்டு நிற்கும் பெருவெளியினை வானம் எனலாமா? அப்படியானால் விமானப் பறப்புகள் மற்றும் செய்மதிகள் யாவுமே இந்த வானத்தில் தானே பறக்கின்றன? எனவே வானத்தின் ஒரு பகுதியாவது எங்கள் வசப்பட்டுவிட்டது என்று தானே பொருள்?

பெயரில்லா சொன்னது…

kavithai entha unarvil theettappattatho anal nalla unmaiya en vasapaduthiyadhu..etharku eduthalum udainthu pogum enaku konjam nimira seithadhu intha kavithai.....

Joelson சொன்னது…

அருமை அண்ணா கவிதை

rvelkannan சொன்னது…

தோழர் , வானம் பற்றிய கேள்விகள் வானம் தாண்டி செல்கிறது (ஹா ஹா ஹா )

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பரே வாழ்த்துக்கள்

க.பாலாசி சொன்னது…

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... நல்லாருக்குங்க கவிதையாய் வசப்பட்டது..

அன்புடன் நான் சொன்னது…

வலசு - வேலணை கூறியது...

உங்கள் கருத்துடன் நான் முரண்படுகின்றேன்.

எதை வானமாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

பூமியின் மேற்பரப்பினின்றும் விடுபட்டு நிற்கும் பெருவெளியினை வானம் எனலாமா? அப்படியானால் விமானப் பறப்புகள் மற்றும் செய்மதிகள் யாவுமே இந்த வானத்தில் தானே பறக்கின்றன? எனவே வானத்தின் ஒரு பகுதியாவது எங்கள் வசப்பட்டுவிட்டது என்று தானே பொருள்?//

உங்க கருத்தை நான்... வரவேற்கிறேன்..... ஆனா உங்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை.

வானம் என்பது தொட்டு உணர முடியாத ஒரு மாயை என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

விமான பறப்போ அல்லது... செய்மதி பறப்போ காற்று வெளியில் தான் சாத்தியம்.....

வானம் என்பது உணரமுடியாத மாயை இது எப்படி வசப்படும்.

யாருக்கெல்லாம் வசப்பட்டிருக்கிறது?

முயற்சியை தூண்டும் உதாரணமே பொய் ஆகலாமா?

எனக்கு உங்களுக்கு நமக்கு வசப்படிருப்பது காற்றுவெளிதான்.... வானம் அல்ல .

இப்படி சட்டையை பிடிச்சி கேள்வி கேட்பதைதான் ரசிக்கிறேன்....

கேள்வி உங்க உரிமை

பதில் ஒரு படைப்பாளியின் கடமை.

இதிலும் உடன்பாடு இல்லையென்றால் மீண்டும் வாங்க விவாதிப்போம்.
இதுதான் என் புரிதல்.

பெயரில்லா சொன்னது…

தன்னம்பிக்கை மிக்க எழுத்துக்கள்..தொடருங்கள் நண்பரே..

'பரிவை' சே.குமார் சொன்னது…

//வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?//


அதானே.

rvelkannan சொன்னது…

//முயற்சியை தூண்டும் உதாரணமே பொய் ஆகலாமா?//
மிகச்சரி தோழர் ....
பள்ளி பருவத்தில் சூரியன் கிழக்கில் உதிக்கும் மேற்கில் மறையும் என்றார்கள்
பின்பு தான் தெரிந்தது அது மிக பெரிய பொய் என்று. சூரியன் எங்கேயும் நகராது என்று.
உங்களின் விழிப்புணர்வு கவிதைகள் தொடரட்டும் ... வாழ்த்துகள்

DREAMER சொன்னது…

வசப்படுத்திய வரிகள்..! ரசித்து படித்தேன்.

-
DREAMER

சத்ரியன் சொன்னது…

சூப்பரப்பு!

சின்னபாரதி சொன்னது…

''வானம் ., மாயையென்று வாதிடேன்
ஏழை - அதைத்தான் கூரையெனக்கூறி
உறங்கிக்கொண்டிருக்கிறான் ., தினமும். '' நண்பா இது என் கவிதை

காற்றை கண்கள் பொய் சொல்கிறது ஆனால் மெய் உண்மை சொல்கிறது

வானவில் ,கானல்நீர் ,கடவுள் இன்னும் எத்தனையோ ! இருக்கிறது

முட்டுங்கள் கிட்டும் வானம் , எட்டுங்கள் வானம் திறந்து பிரபஞ்சம் அகப்படும் . பிரபஞ்சம் முடிய இரசவாதத்தை எட்டுவீர்கள்.... வாழ்த்துக்கள்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

வானம் வசப்படும்..படிப்பவர் தம் மனம் வசப்படும் உம் கவிதையில்...


வாழ்த்துக்களுடன்..

ஆர்.ஆர்.ஆர்.

ராமலக்ஷ்மி சொன்னது…

//நடக்காத ஒன்று இது
நம்பிக்கைக்கு உதாரணம்!//

அதேதான்:)! வானம் பார்த்து காணும் கனவுகள் யாவும் வசப்படுமோ, கனவோடு நின்றிடாமல் முயன்றபடி இருந்தால்?

கவிதை அருமை.

ஜெயந்தி சொன்னது…

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு

அந்தப் பொய்யை உங்கள் கவிதையிலேயே சாடுகிறீர்களே?

எட்டக்கூடிய குறிக்கோளை வைத்துக்கொள்ளச் சொல்வது சரியான பார்வைதான்.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் Chitra கூறியது...

வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?


......சரியான கேள்வி!
வானுயுற வளர வாழ்த்துகிற மாதிரி ....... வானமே எல்லையாய் இருக்கிற மாதிரி..... ம்ம்ம்ம்.....//

உடனடியான முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தன். கூறியது...

ஆஹா...//
நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

மேகம் வசப்படும் என்றால் சரியாக இருக்குமோ!//

இது பொருந்தும்... மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வழிப்போக்கன் கூறியது...

Superu.....//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

வணக்கம் கருணாகரசு. ரொம்ப அருமையா இருக்கு.//

ரொம்ப நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

தேவன் மாயம் கூறியது...

கருணா! கவிதை வசப்பட்டுவிட்டேன்!//

மருத்துவருக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் நாடோடி கூறியது...

கேள்வியாய் க‌விதை.. ந‌ல்லா இருக்கு.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சீமான்கனி கூறியது...

//வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?//

வானத்தை வம்பிழுக்காமல் வாழ்த்துகளுக்கு தெம்பூட்ட வைத்திருப்பார்களோ...அருமை கருணா அண்ணா வாழ்த்துகள்..//

நன்றிங்க... சீமாங்கனி.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

வித்தியாச சிந்தனைகள் - நன்று///

ஏற்கிறேன்... நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் அரசூரான் கூறியது...

முரணாயிருந்தும் நம்பிக்கை!

அதை நீங்கள் கவிதையாய் வசப்படுத்தி விட்டீர்கள்!!//

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

அரசு...வானம் வசப்படும் என்பது....ஒரு சும்மா !//

நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...

வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?\\\\\\\

அதைத்தான் நானும் கேட்க்கின்றேன்....
அது யாரு தொல்லையும் வேண்டாமென்று
எட்டாத உயரத்தில் இருக்குபோது
கருணாகரசுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
நீங்களும் தானே அதை வம்புக்கு
இழுத்திருக்கிறீர்கள்!

ஓஓஓ “அவள்” வசம் இருந்த உங்களை..

தன் வசவெளி{வழி}யாய் இங்கு கொண்டு
வந்து பிரித்து வைத்திருப்பதற்கா??

பாவம் வானம் இரண்டு பக்கமும் அடி!!//

வருகைக்கு நன்றிங்க கலா.

அன்புடன் நான் சொன்னது…

asiya omar கூறியது...

வானம் வசப்படும் தூரம் தான்..
என்று சொல்வதுண்டு,
அட உங்கள் சிந்தனையும் சரி தான்.//
புரிதலுக்கு நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் ஸ்ரீராம். கூறியது...

வானம் வசப் படுமோ இல்லையோ அரசு, வரிகள் உங்கள் வசப் பட்டிருக்கின்றன. அருமையான கருத்தில் அழகான கவிதை.//

அப்படியா .. நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Riyas கூறியது...

இது போன்ற கவிதைகளால் மட்டுமே முடிகிறது வானத்தையும் தாண்டிச்செல்ல.. நல்ல கவிதை//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Gayathri கூறியது...

ஹாஹா நல்ல கேள்வி..வானத்தைத்தான் கேக்கமுடியும்..//

வானத்த எப்படி கேட்கிறதுங்க?
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் இன்றைய கவிதை கூறியது...

கருணாகரசு

அருமை, வசப்பட பல இருந்தும் வானத்தை வம்பிழுப்பது எதற்கு என வானளாவியிருக்கிறீர்கள், விண்ணுக்கு வினா , அழாகாயிருக்கிறது

நன்றி ஜேகே//

வருகைக்கு நன்றிங்க ஜேகே.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...

kavithai entha unarvil theettappattatho anal nalla unmaiya en vasapaduthiyadhu..etharku eduthalum udainthu pogum enaku konjam nimira seithadhu intha kavithai.....//

பெருமைப்படுகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

ஜோயல்சன் கூறியது...

அருமை அண்ணா கவிதை/

தம்பிக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

kannan கூறியது...

தோழர் , வானம் பற்றிய கேள்விகள் வானம் தாண்டி செல்கிறது (ஹா ஹா ஹா )//

தோழருக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...

அருமை நண்பரே வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றிங்க நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... நல்லாருக்குங்க கவிதையாய் வசப்பட்டது..//

பாலாசிக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

OpenID padaipali கூறியது...

தன்னம்பிக்கை மிக்க எழுத்துக்கள்..தொடருங்கள் நண்பரே..//

நன்றி படைப்பாளி அவர்களே.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் சே.குமார் கூறியது...

//வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?//


அதானே.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

kannan கூறியது...

//முயற்சியை தூண்டும் உதாரணமே பொய் ஆகலாமா?//
மிகச்சரி தோழர் ....
பள்ளி பருவத்தில் சூரியன் கிழக்கில் உதிக்கும் மேற்கில் மறையும் என்றார்கள்
பின்பு தான் தெரிந்தது அது மிக பெரிய பொய் என்று. சூரியன் எங்கேயும் நகராது என்று.
உங்களின் விழிப்புணர்வு கவிதைகள் தொடரட்டும் ... வாழ்த்துகள்//

ஆதரவுக்கு நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் DREAMER கூறியது...

வசப்படுத்திய வரிகள்..! ரசித்து படித்தேன்.

-
DREAMER//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...

சூப்பரப்பு!//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சின்னபாரதி கூறியது...

''வானம் ., மாயையென்று வாதிடேன்
ஏழை - அதைத்தான் கூரையெனக்கூறி
உறங்கிக்கொண்டிருக்கிறான் ., தினமும். '' நண்பா இது என் கவிதை

காற்றை கண்கள் பொய் சொல்கிறது ஆனால் மெய் உண்மை சொல்கிறது

வானவில் ,கானல்நீர் ,கடவுள் இன்னும் எத்தனையோ ! இருக்கிறது

முட்டுங்கள் கிட்டும் வானம் , எட்டுங்கள் வானம் திறந்து பிரபஞ்சம் அகப்படும் . பிரபஞ்சம் முடிய இரசவாதத்தை எட்டுவீர்கள்.... வாழ்த்துக்கள்....//

வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி கூறியது...

வானம் வசப்படும்..படிப்பவர் தம் மனம் வசப்படும் உம் கவிதையில்...


வாழ்த்துக்களுடன்..

ஆர்.ஆர்.ஆர்.//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...

//நடக்காத ஒன்று இது
நம்பிக்கைக்கு உதாரணம்!//

அதேதான்:)! வானம் பார்த்து காணும் கனவுகள் யாவும் வசப்படுமோ, கனவோடு நின்றிடாமல் முயன்றபடி இருந்தால்?

கவிதை அருமை.//
கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் ஜெயந்தி கூறியது...

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு

அந்தப் பொய்யை உங்கள் கவிதையிலேயே சாடுகிறீர்களே?

எட்டக்கூடிய குறிக்கோளை வைத்துக்கொள்ளச் சொல்வது சரியான பார்வைதான்//

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க.

இடைவெளிகள் சொன்னது…

கவிதையின் வரிகள் எதுவும் எங்கும்
முரண்படாமல் சிந்திக்க தூண்டும் வரிகளாக வந்து விழுந்திருக்கிறது,பாராட்டுக்கள்

Thanglish Payan சொன்னது…

http://thanglishpayan.blogspot.com

Thanglish Payan சொன்னது…

Superb ....

Related Posts with Thumbnails