செப்டம்பர் 19, 2009

ஏக்கம்

பெற்றவர்களுக்கு
மணநாள் இன்று .
முத்தம் பரிசளிக்க ஆசை !

அப்பா தனிவீட்டில் ...
புது அம்மாவுடன் !.

அம்மா வேறொரு ஊரில்
புதுக் கணவருடன் !.

மணவிலக்கு பெற்றவர்களின்
மகள் நான் ...

தாத்தா வீட்டில்
தனியாக ...

(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

29 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

யதார்த்த வலி,பிரிவைத் தேடும் பெற்றவர்கள் நடுவில் நிற்கும் குழந்தையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.அந்தக் குழ்ந்தைக்கு வாழ்வு முழுதுமே வலிதான்.சுயநலக்கூட்டம்.

Jerry Eshananda சொன்னது…

கவிதை அருமை,அவரவர்களுக்கான உலகம்,அதில்,அவரவர்களுக்கான பயணம்.
மாய உலகம் கவிஞரே

க.பாலாசி சொன்னது…

//மணவிலக்கு பெற்றவர்களின்
மகள் நான் ...
தாத்தா வீட்டில்
தனியாக ...//

வலிகளின் வரிகள். பெற்றவர்களை பிரிந்த குழந்தையின் வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்...அருமை...வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏக்கம் - தாக்கம்.

கவிக்கிழவன் சொன்னது…

நானும் சிறைப் பட்டேன்

வேல் கண்ணன் சொன்னது…

//யதார்த்த வலி,பிரிவைத் தேடும் பெற்றவர்கள் நடுவில் நிற்கும் குழந்தையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.அந்தக் குழ்ந்தைக்கு வாழ்வு முழுதுமே வலிதான்.சுயநலக்கூட்டம்.//
நானும் வழிமொழிகிறேன் தோழா..
இதை பற்றிய சமிபத்தில் திரு. மாதவராஜ் அவர்கள் பதிவில் கூறியிருக்கிறார்
அது இங்கே ...
http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_31.html

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:(

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வலிகள்...

ஆனால் இப்போ இதுமாதிரியெல்லாம் நடக்குறதில்லைன்னு நினைக்குறேன்...

அன்புடன் நான் சொன்னது…

ஆம் ஹேமா "அவைகள்" சுயனலக் கூட்டமே!

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா ... நீங்க சொன்னது 100 விழுக்காடு உண்மையே.

அன்புடன் நான் சொன்னது…

வலிகளின் வரிகள். பெற்றவர்களை பிரிந்த குழந்தையின் வலியை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்...அருமை...வாழ்த்துக்கள்//

தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க பாலாஜி.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
ஏக்கம் - தாக்கம்.//


சில‌ரையேனும்... தாக்கும்?

அன்புடன் நான் சொன்னது…

கவிக்கிழவன் கூறியது...
நானும் சிறைப் பட்டேன்//


புரிந்துக் கொண்டேன்... க‌ம்பீர‌மாய் வ‌ல‌ம் வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

அன்புடன் நான் சொன்னது…

கமலஹாசன்கள் இதை யோசிப்பார்களா? //


ப‌டித்தேன் தேழ‌ரே.

இது 2004‍ல் வெளியிட்ட‌ க‌விதை.


க‌ருத்துக்கு ந‌ன‌றி

அன்புடன் நான் சொன்னது…

அத்திவெட்டி ஜோதிபாரதி கூறியது...
:(

///////

வ‌ருகைக்கும் வார்த்தையில்லாக் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஜோதி பார‌தி.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
வலிகள்...

ஆனால் இப்போ இதுமாதிரியெல்லாம் நடக்குறதில்லைன்னு நினைக்குறேன்...//

இப்போதும் நடக்கிறது தோழரே... ஆனால் அதெல்லாம் பெரிதாக பார்க்கப்படுவதில்லை அவ்வளவுதான்.

அரங்கப்பெருமாள் சொன்னது…

அமெரிக்காவில் "Thanks Giving Day" என்று ஒரு நாள் உள்ளது.இது போன்ற உறவுகளைக் கண்டு வான்கோழி சமைத்து உண்பார்கள்.
குழந்தைக்காக சேர்ந்து வாழ்கிறோம் என்ற போர்வையில் அடிதடி,ஒருவரை பேசாமல் வாழ்வதைவிட இது மேல் என்றார் என்னுடன் வேலை செய்யும் ஒரு அமெரிக்க நண்பன்.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

அவர்கள் பெற்றவர்கள் அல்ல சுயநலமுற்றவர்கள்

ரம்யா சொன்னது…

அவர்களுக்கு பரிசளிக்க வேண்டியது முத்தமல்ல உறவுகளின் யதார்த்தம்

வசந்தி சொன்னது…

தங்கள் வாழ்க்கையை மட்டும் பார்க்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பல குழந்தைகளின் நிலமை இதுதான்

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
அமெரிக்காவில் "Thanks Giving Day" என்று ஒரு நாள் உள்ளது.இது போன்ற உறவுகளைக் கண்டு வான்கோழி சமைத்து உண்பார்கள்.
குழந்தைக்காக சேர்ந்து வாழ்கிறோம் என்ற போர்வையில் அடிதடி,ஒருவரை பேசாமல் வாழ்வதைவிட இது மேல் என்றார் என்னுடன் வேலை செய்யும் ஒரு அமெரிக்க நண்பன்.//


நீங்க சொல்வது அமெரிக்கர்களுக்கு வேண்டுமானால் சரி. தமிழினத்துக்கு ஒத்துவராது, என்னைருந்தாலும் ஒன்றாக வாழ்வதே சிறப்பு. இல்லையேல் வாழ்வில் ஏது பிடிப்பு? நம் பண்பாட்டை பின்பற்றியே வாழ்வோம்.

அன்புடன் நான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…

சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
அவர்கள் பெற்றவர்கள் அல்ல சுயநலமுற்றவர்கள்//

ச‌ரியாத்தான் இருக்கு க‌ருத்து.

அன்புடன் நான் சொன்னது…

ரம்யா கூறியது...
அவர்களுக்கு பரிசளிக்க வேண்டியது முத்தமல்ல உறவுகளின் யதார்த்தம்//

உங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ ர‌ம்யா.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
தங்கள் வாழ்க்கையை மட்டும் பார்க்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை பல குழந்தைகளின் நிலமை இதுதான்//

என்ன‌செய்ய‌ வ‌ச‌ந்தி... ம‌ன‌ம்தான் எல்லாத்துக்கும் கார‌ண‌ம்.

பா.ராஜாராம் சொன்னது…

வலிக்குது கருணா..புகை படமும்.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...
வலிக்குது கருணா..புகை படமும்.//
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க பா.ரா.

துபாய் ராஜா சொன்னது…

வலி மிகுந்த வரிகள்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
வலி மிகுந்த வரிகள்.//

க‌ருத்துக்கு ந‌ன்றிங்க‌ துபாய் ராசா.

Related Posts with Thumbnails