செப்டம்பர் 15, 2009

காஞ்சித் தலைவன் (அண்ணா)

வெண்பா

தறியோசை விஞ்சித் தமியோசைத் தந்த
அறிஞர் இவர்நமக்கு அண்ணன் -செறிவான

வாஞ்சையோடு சீர்த்தமிழை வார்த்தெடுத்த அண்ணாவை
காஞ்சித் தலைவனெனக் காண்.

புதுக் கவிதை

சிறியோரை தம்பியென
சீராட்டும் சீத்தலை .

பெரியாரின் பாசறையை
பிரிந்து வந்த பல்கலை .

இருமொழி வல்லமையில்
இவர் பெற்றார் முதுகலை .

எழில்கொஞ்சும் இவர்பேச்சு
எப்போதும் இளங்கலை .

பலநூறு நூல்படித்த
பைந்தமிழின் நுண்கலை .

இன்றைக்கும் காஞ்சிக்கு
இவரால்தான் உயர்நிலை .

21 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

தமிழர்க்கு தந்தார்
தமிழ்நாடெனும் எழுநிலை.

ஹேமா சொன்னது…

இவர்கள்தான் அரசியலுக்கு உண்மையானவர்கள்.வணங்குவோம்.

அன்புடன் நான் சொன்னது…

// துபாய் ராஜா கூறியது...
தமிழர்க்கு தந்தார்
தமிழ்நாடெனும் எழுநிலை.//

தங்களின் கருத்துரையால்
நெகிழ்ந்தது என் மன நிலை.

அன்புடன் நான் சொன்னது…

//ஹேமா கூறியது...
இவர்கள்தான் அரசியலுக்கு உண்மையானவர்கள்.வணங்குவோம்//

நீங்க சொன்னா சரிதான் ஹேமா.

அரங்கப்பெருமாள் சொன்னது…

இவரைப் போன்ற பேச்சாளர் அரிது.

'Because" மூன்றுமுறை தொடர்ந்து வரும் வாக்கியம் Sentence never ends with because because because is conjunction சொன்னபோதும் மட்டுமல்ல, A பயன்படுத்தாத 100 சொற்கள் கேட்டபோது one,two,three.... ninety-nine என்று சொல்ல சொல்லி Stop என நூறாவது வார்த்தையும் சொன்ன போது இவரின் அறிவுத்திறம் தெரிகிறது. "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்தது, சீர்திருத்த திருமணத்தை சட்டப் பூர்வமாக்கியதும் இவரின் சாதனைகள். மேலும் சாதனை புரிய நமக்கு கொடுப்பினை இல்லை.

அன்புடன் நான் சொன்னது…

//அரங்கப்பெருமாள் கூறியது...
இவரைப் போன்ற பேச்சாளர் அரிது.//

// மேலும் சாதனை புரிய நமக்கு கொடுப்பினை இல்லை//ஆமாம் நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மைத்தான். என்னசெய்ய ... நமக்குதான் வாய்க்கவில்லை.

நல்லவர்கள் வாய்ப்பதில்லை. ஆனால்...
கெட்டவர்கள் வாய்த்துவிடுகிறார்கள்!.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

இயைபுடன் அமைந்த புதுகவிதை அருமை.

அன்புடன் நான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் நான் சொன்னது…

//சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
இயைபுடன் அமைந்த புதுகவிதை அருமை.//


ம்ம்ம்ம்ம் அப்புறம்?!

ஹேமா சொன்னது…

//சி. கருணாகரசு கூறியது...
//ஹேமா கூறியது...
இவர்கள்தான் அரசியலுக்கு உண்மையானவர்கள்.வணங்குவோம்//

நீங்க சொன்னா சரிதான் ஹேமா.//

எனக்கு அண்ணா பற்றி முழுசாகத் தெரியாது.அங்கங்கே புத்தகங்களில் படித்திருக்கிறேன்.அதுக்கு எனக்கு நக்கல் மாதிரி இருக்கு.

//சி. கருணாகரசு கூறியது...
//சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
இயைபுடன் அமைந்த புதுகவிதை அருமை.//

ம்ம்ம்ம்ம் அப்புறம்?!//

ம்ம்ம்...அண்ணா நினைவலைக்குள் மெல்லிய காதல் இழையும் ஓடுதே...!தொடரட்டும்.சந்தோஷம்.

எங்கே குழந்தைநிலாப் பக்கம் காணல.வாங்க.

கண்ணன் சொன்னது…

நல்லது தோழரே ..
இனி பெறுவோமா இப்படியானவர்களை......

அரங்கப்பெருமாள் சொன்னது…

காலம் யாரையும் காப்பியடிப்பதில்லை.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமாவிற்கு...

//எனக்கு அண்ணா பற்றி முழுசாகத் தெரியாது.அங்கங்கே புத்தகங்களில் படித்திருக்கிறேன்.அதுக்கு எனக்கு நக்கல் மாதிரி இருக்கு.//

அண்ணா நல்ல பண்புகளை கொண்டவர் ஹேமா. ...

//இவர்கள்தான் அரசியலுக்கு உண்மையானவர்கள்.வணங்குவோம்//

நீங்கள் சொன்னது மிக சரியானகருத்து. அதைத்தான் கொஞ்சம் உரிமையோடு "நீங்க சொன்னா சரித்தான்" என்றேன்.

//மெல்லிய காதல் இழையும் ஓடுதே...!தொடரட்டும்.சந்தோஷம்.//

மிக்க‌ ந‌ன்றி ஹேமா.

//எங்கே குழந்தைநிலாப் பக்கம் காணல.//


மிக அதிக வேலை பளு.... இதோ வருகிறேன்.

நன்றி. ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கண்ணன் கூறியது...
நல்லது தோழரே ..
இனி பெறுவோமா இப்படியானவர்களை......//

கால‌ம்தான் தோழ‌ரே ப‌தில் சொல்ல‌னும்...

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
காலம் யாரையும் காப்பியடிப்பதில்லை.


ஆமாம்... முழு உண்மைங்க.

கவிக்கிழவன் சொன்னது…

அர்த்தமுள்ள கவிதை! அழகான வார்த்தைகள்!

அன்புடன் நான் சொன்னது…

கவிக்கிழவன் கூறியது...
அர்த்தமுள்ள கவிதை! அழகான வார்த்தைகள்!

மிக்க நன்றிங்க கவிக்கிழவன்.

க.பாலாசி சொன்னது…

//எழில்கொஞ்சும் இவர்பேச்சு
எப்போதும் இளங்கலை .
பலநூறு நூல்படித்த
பைந்தமிழின் நுண்கலை .//

சரியான வார்த்தைகள்...அவருக்கே பொருந்தக்கூடியது...

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாஜி கூறியது...
//எழில்கொஞ்சும் இவர்பேச்சு
எப்போதும் இளங்கலை .
பலநூறு நூல்படித்த
பைந்தமிழின் நுண்கலை .//

சரியான வார்த்தைகள்...அவருக்கே பொருந்தக்கூடியது...//

மிக்க‌ ந‌ன்றி ... த‌ங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும்.

பனசை நடராஜன்.. சொன்னது…

நீங்கள் வாசிக்கும்போதே கேட்டிருந்தாலும் “ரிப்பீட்டாக” இங்கேதான் திரும்ப திரும்ப படித்து மகிழ்ந்தேன். அண்ணாவைப் பற்றிய உங்கள் கவிதை ஒழுங்கான அழகு நடை.

அன்புடன் நான் சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க பனசை.

Related Posts with Thumbnails