செப்டம்பர் 13, 2009

நட்புடன் ஜமால் அழைக்க...அன்புடன் நான் எழுதும்


= அம்மா... என்னைச் சுமந்த

உயிர்க் கடவுள்.

= ஆசை ... குழந்தை குங்குமப்பூ

= இந்தியா ... பகையோடு கூட்டு சேர்ந்து ,

சொந்தகாரர்களை கொன்ற நாடு.

= ஈகத்தில் வியந்தது ... நாட்டுக்காக

உயிராயுதமாய் மாறிய ஈழத்தமிழன் .

= உண்மையானது ... என் மனைவியின்

அன்பும் நட்பும் காதலும் .

= ஊரறிந்த ரகசியம் ... கலைஞர் ...

தாத்தாவின் உண்ணாவிரதம் .

= எதிர்ப்பது ... விளைநிலங்களை

விலைநிலங்களாக மாறுவதை .

= ஏற்பது ... தன்மானத்திற்கு

இழுக்கில்லா எதையும் .

= ஐந்தினையில் பிடித்தது ...

"முல்லை ".

= ஒலியில் சிறந்தது ... என்

கிராமத்து தாவணிச் சிட்டுகளின்

மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .

= ஓட்டு எனப்படுவது ... விரலிலும்

மக்கள் விடியலிலும் கறைப்படிந்த கருப்பு .

ஒள = ஒளவ்வபோது நினைவுக்குள் ...

கம்பிச் சிறைக்குள் கரையும் தமிழினம் .

=ஃ இன் வலிமை ... உயிர்மெய் உருவாக்கத்திற்கான

உயிர் "மெய் ".

அழைத்தவர்களுக்கு நட்புடன் ஜமால் , சத்ரியன்

நன்றி

நான் அழைப்பது : கண்ணன் , மற்றும் பா. ரா ,

மற்றவரெல்லாம் எழுதிவிட்டதால் ...

அடுத்தவர் தொடரலாம் .... நன்றி வணக்கம் ...

அன்புடன் நான் சி.கருணாகரசு .

17 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .//

ரசனையா இருக்குங்க.....

துபாய் ராஜா சொன்னது…

அன்பு,காதல்,பாசம்,எழுச்சி,ஏமாற்றம், ஏக்கம், துக்கம் அனைத்தும் கண்டேன் நண்பரே.....

நட்புடன் ஜமால் சொன்னது…

அடிபொலி ...

ஹேமா சொன்னது…

நக்கல் நளினம்
கொள்கை கோபம்
கிண்டல் கேலி
அன்பு பாசம்
அக்கறை ஆயுதம்
அத்தனையும் கலந்த கலவை நீங்களோ !

கண்ணன் சொன்னது…

நல்ல இருக்கு தோழரே.
அழைப்புக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.
ஒரு கேள்வி
//ஐ = ஐந்தினையில் பிடித்தது ...
"முல்லை "//
ஏன் முல்லை மட்டும் ?

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
//ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .//

ரசனையா இருக்குங்க.....//

மிக்க‌ ந‌ன்றிங்க‌ வ‌ச‌ந்த்... அந்த‌ ச‌ல்ச‌ல்லை கேட்டுபார்க்க‌ணும் ஒரு த‌னி இன்ப‌ அது.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
அன்பு,காதல்,பாசம்,எழுச்சி,ஏமாற்றம், ஏக்கம், துக்கம் அனைத்தும் கண்டேன் நண்பரே.....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
அடிபொலி ...//

என்னது... எதுன்னாலும் தெளிவா திட்டுங்க‌... ஒன்னும் புரிய‌ல‌.
எதுக்காக‌ திட்டுறிங்க‌ , என்னச்சொல்லி திட்டுறிங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் ஆறுதலா இருக்குமில்ல.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
நக்கல் நளினம்
கொள்கை கோபம்
கிண்டல் கேலி
அன்பு பாசம்
அக்கறை ஆயுதம்
அத்தனையும் கலந்த கலவை நீங்களோ //


நான் என்ன‌ ஆயுத‌ம் எடுக்க‌ வேண்டும் என்ப‌தை என் எதிரியே முடிவு செய்கிறான்... என்ப‌து ஒரு சொற்றொட‌ர்.. அதுபோல் தான் நான் எப்ப‌டி எதை எழுத‌வேண்டும் என்ப‌தையும் எந்த‌ ச‌முதாய‌ம் தான் முடிவு செய்கிற‌து.

நான் கோப‌க்கார‌ன் தான் ஆனால் என் கோப‌த்தில் நிச்ச‌ய‌ம் நேர்மையும் அர்த்த‌மும் இருக்கும்.

மிக்க‌ ந‌ன்றிங்க‌ ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

கண்ணன் கூறியது...
நல்ல இருக்கு தோழரே.
அழைப்புக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.
ஒரு கேள்வி
//ஐ = ஐந்தினையில் பிடித்தது ...
"முல்லை "//
ஏன் முல்லை மட்டும் ?//

"முல்லை" தான் பிடிக்கும்... அங்குதான் வீர‌ம் க‌டைசியாக‌ வாழ்ந்த‌து, என‌க்கு பித்த‌வ‌ர்க‌ளும் அங்குதான் வாழ்ந்தார்க‌ள். வாழ்வில் அவ்விட‌ம் ஒரு முறையாவ‌து சென்று வ‌ர‌வேண்டும் என்ப‌து என் க‌ன‌வு.

வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றி தோழ‌ரே.

vasanthi சொன்னது…

//அ = அம்மா... என்னைச் சுமந்த
உயிர்க் கடவுள்.

ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி //

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது

அன்புடன் நான் சொன்னது…

vasanthi கூறியது...
//அ = அம்மா... என்னைச் சுமந்த
உயிர்க் கடவுள்.

ஒ = ஒலியில் சிறந்தது ... என்
கிராமத்து தாவணிச் சிட்டுகளின்
மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி //

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது//

ந‌ன்றி வ‌ச‌ந்தி வ‌ருகைக்கும்... க‌ருத்துக்கும்.

சிவசஞ்சனிகருணாகரசு சொன்னது…

அ முதல் ஃ வரை அனைத்து உணர்வுகளையும் வெளிபடுத்தியது நல்லா இருக்கு.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நன்றி கருணா,என்னை அழைத்ததுக்கு!வசந்திற்கு பிடித்திருந்தது எனக்கும் பிடித்திருந்தது.யாருக்குத்தான் பிடிக்காது,கொலுசொலி. இல்லையா கருணா?..கருணா,இந்த தொடரை,நான் தொடர சற்று தாமதமாகும்.ரமதான் வேலை பளு.வேறொன்றுமில்லை.ஏற்கனவே ஹேமா வேறு கூப்பிட்டிருந்தார்கள்.கண்டிப்பாக தொடர்வேன்,சற்று தாமதமாக..நன்றி தோழா!
அப்புறம் ஜமால் சொன்ன //அடிபொலி!//அருமை என அர்த்தம்.மலையாள மக்கள் சாதாரணமாய் புழங்குவது.ஜமாலும்,என் போலவே மலையாளிகளுடன் புழங்குபவராக இருக்கலாம்,ஒருவேளை.

இரசிகை சொன்னது…

viththiyaasama irukku...

அன்புடன் நான் சொன்னது…

இரசிகை கூறியது...
viththiyaasama irukku...//
மிக்க‌ ந‌ன்றிங்க‌.

arasan சொன்னது…

மிகவும் வியந்து படித்தேன்...
மிக அருமை....

Related Posts with Thumbnails