ஆகஸ்ட் 26, 2009

திணை வினை

தனித்து நிற்கும் மரங்கள்
கைகுலுக்குகின்றன ...
கிளைகளை விரித்து !

நெருக்கமாய் மனிதன்
தனித்து வாழ்கிறான் ...
மனமதைச் சுருக்கி !!

( எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

14 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

//மனதை// சரியா

கவிதை நல்ல சவுக்கடி

Jerry Eshananda சொன்னது…

அசத்தல்.

தமிழ் சொன்னது…

அற்புதமான வரிகள்
படித்தவற்றை அசை போடுவது இன்னும் ஒரு அற்புதம் தான்

ஹேமா சொன்னது…

ஏய் மனிதா...இனி உன்னை மரம் என்று திட்டிக்கொள்ளாதே.மரங்கள் வாய் திறந்தால்....!

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி தோழரே!

//மனதை// சரியா .....
மனம்+அதை= மனமதை. அச்சம் தெரிவித்தம்மைக்கும் நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஜெரி...

சி.கருணாகரசு சொன்னது…

திகழின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

ஆமாம் ஹேமா,
இனி மரம் தான்... தங்களுக்குள் "மனிதா" என்று திட்டிக்கொள்ளும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//நெருக்கமாய் மனிதன்
தனித்து வாழ்கிறான் ...
மனமதைச் சுருக்கி !!//

நல்ல சரவெடிகளாய் இருக்கு நண்பா

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல இருக்கு கருணா..

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க பா.ராசாராம். முதல் வருகைக்கும்... கருத்துக்கும்.

திரு. பா.ராசாராம் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... என்னை வெறும் "கருணா" என்றழைக்க வேண்டாம், சிரமம் பாராது என் முழு பெயரையும் எழுதவும். இல்லையேல் "நல்ல கருணா" என்றாவது எழுதவும். வெறுமனே கருணா எண்றால் குமட்டாலாக இருக்கிறது

(தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தொடர்ந்து என் தளம் வாருங்கோ)

துபாய் ராஜா சொன்னது…

கவிதைக்கேற்ற படமும் அழகு.

சி.கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
கவிதைக்கேற்ற படமும் அழகு.//


மிக்க‌ ந‌ன்றிங்க‌.

Related Posts with Thumbnails