
கவிதைக்கு
பொய்தான் அழகு எனில்
இந்த கவிதை
அழகற்றதுதான்
எங்கள் துயரறிந்தால்
நெருப்புக்கும் கண்ணீர் சுரக்கும்
உலகத்த தலைவர்களை போல் – அதற்கு
மௌன மொழி தெரியாது
வாழ்விடங்களில்
குண்டுகளின் கொலைவீச்சால்
இரத்த பிசுபிசுப்பு
உயிர் அறுந்த
உடல்களை கடந்து
உயிர் இருந்த நாங்கள்
ஓடிவந்துவிட்டோம் காட்டிற்கு
தாகம் பசியைத் தவிர
தழுவிக்கொள்ள
ஏதுமில்லா நேரத்தில்
பேறுகால வலியால்
கதறி…. கதறி…. பின்
களைத்து உயிர் பிரிய
அவள்
பிணத்தை கிழித்து
பிள்ளையை எடுத்துவிட்டோம்
ஈர தொப்புள் கொடியும்
வறண்ட உதடுமாய்
சன்னமாய் அழுகிறது குழந்தை
ஏதுமில்லா காட்டில்
எங்களுக்கு சுரந்திருக்கலாம்
கண்ணீருக்கு பதில் ”பால்”
( இந்த கவிதை 5 மாதங்களுக்கு முன் எழுதியது . கவிதையின் கரு முற்றிலும் உண்மை ... திரு புலமைப்பித்தன்னின் ஊடக நேர்காணலில் கிடைத்த தகவலின்படி எழுதி வாசித்தேன் )
பொய்தான் அழகு எனில்
இந்த கவிதை
அழகற்றதுதான்
எங்கள் துயரறிந்தால்
நெருப்புக்கும் கண்ணீர் சுரக்கும்
உலகத்த தலைவர்களை போல் – அதற்கு
மௌன மொழி தெரியாது
வாழ்விடங்களில்
குண்டுகளின் கொலைவீச்சால்
இரத்த பிசுபிசுப்பு
உயிர் அறுந்த
உடல்களை கடந்து
உயிர் இருந்த நாங்கள்
ஓடிவந்துவிட்டோம் காட்டிற்கு
தாகம் பசியைத் தவிர
தழுவிக்கொள்ள
ஏதுமில்லா நேரத்தில்
பேறுகால வலியால்
கதறி…. கதறி…. பின்
களைத்து உயிர் பிரிய
அவள்
பிணத்தை கிழித்து
பிள்ளையை எடுத்துவிட்டோம்
ஈர தொப்புள் கொடியும்
வறண்ட உதடுமாய்
சன்னமாய் அழுகிறது குழந்தை
ஏதுமில்லா காட்டில்
எங்களுக்கு சுரந்திருக்கலாம்
கண்ணீருக்கு பதில் ”பால்”
( இந்த கவிதை 5 மாதங்களுக்கு முன் எழுதியது . கவிதையின் கரு முற்றிலும் உண்மை ... திரு புலமைப்பித்தன்னின் ஊடக நேர்காணலில் கிடைத்த தகவலின்படி எழுதி வாசித்தேன் )
Tweet |
15 கருத்துகள்:
கருணாகரசு,நீங்கள் எழுதிய நேரத்தின்படி தப்பித்துக்கொண்ட உயிர்களெல்லாம் மீண்டும் கருவறைவிட்டு கம்பிச்சிறைக்குள் அல்லவா அகப்பட்டுக் கிடக்க்கிறது.இதைவிட தாயோடு சேயாய் மறைந்திருக்கலாமோ !
nice
என்ன செய்ய தோழா
இன்றளவும் விடிவு இல்லையே
இங்கே
63 வது சுதந்திரம் தினம் கொண்டாடுகிறது நாடு.
கொடியேற்றி இனிப்பு வழங்கி கலைந்து போகும் கூட்டம்
அங்கே
நம் மக்களுக்கு வழி நடத்தி வாழ விடுமா
எப்படி வாழுகிறது எங்கே சுவாசிக்கிறது
நினைத்து பார்க்கவே முடியவில்லை
அடுத்த வரிகளுக்கு போக முடியாமல்
அழுகை தடுக்கிறது
என்ன செய்ய வேண்டும் தோழா?
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஞானசேகரன்.
ஹேமா நீங்க சொல்வதும் சரிதான்...
வலியையும் காயத்தையும் தேக்கிவைப்போம்_ பின்
வஞ்சத்தை என்றேனும் தாக்கிவைப்போம்.
தோழர் கண்ணனுக்கு,
எழுதியதை படிக்கவே உங்களுக்கு இதயம் கணக்கிறது...உணர்வுள்ளவர்களுக்கு அப்படிதான் தோழரே, காலம் கனியாமலா போகும்
கண்ணீர் விட வைத்த வரிகள்.
கருணாகரசு கவிதைக்கு பொய் அழகுதான்.....ஆனல்
இக் கவிதையில் பொய்யில்லையே அத்தனையும்
உண்மை.கவிதையையே படிக்க முடியவில்லை
இதை அனுபவித்தவர்களின் அனுபவம் எப்படி இருக்கும்?
இரணத்தில் வேல் பாச்சுவது இப்போது சர்வசாதாரணம்
நீங்கள் கடைந்த கவியில் ..உருகியது மனசு.
உணர்வுள்ளத் தமிழனுக்கு கண்ணீர் இயல்பானதுதான் துபாய் ராசா.
கலா,
இந்த இரணங்களை ...
பார்க்கவும் கேட்கவுமே வலிக்கிறதென்றால்
பட்டுணரும் அவர்களுக்கு...???
karunakarasuvukku irukkum intha unarvu karunanithikku illamal poivittathe... ayaho!
பெயர் தவிர்த்து எழுதியிருக்கும்...பெருமகனாரின் கருத்துரைக்கு நன்றி.
கவிதை மிக அருமை
மிக்க நன்றிங்க சிவரஞ்சனிகருணாகரசு.
கருத்துரையிடுக