ஜூலை 24, 2013

புல்லாங்குழல்

நகர்ந்துகொண்டே இருப்பது
காலம் மட்டுமல்ல- அவர்
கால்களும் தான்.

அந்த வட்டாரத்தில்
எந்த திருவிழாவிலும்
அவரை பார்க்கலாம்.

ஒரு மரக்கழியிலேயே
தொங்குகின்றன- அவரின்
மொத்த மூலதனமும்.
அவை...
ஊசலாடியப்படியே இருக்கும்
அவர் வருனாமத்தை போல.
ஆனால்...
அறுந்து விழுவதே இல்லை
அவர் தன்மானத்தை போல.

ஒட்டிய கன்னம்
உட்குழி கண்கள்
வறண்ட உதடு
வற்றிய வயிறு
தேய்ந்த பாதம்
காய்ந்த கைகள்- என
வாழ்க்கை இவருக்குள்
வாசிப்பதென்னவோ...
சோகசுரம்தான்.
ஆனால்,
இவர் விற்பதென்னவோ
புல்லாங்குழல்கள்..

8 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இனிமையை விற்பவனுக்கு வாழ்கையில் இனிமை இல்லை இல்லையா ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு முரண்...!

சங்கவி சொன்னது…

விற்பவன் வாழ்வு ஏழ்மை என்பதை அற்புதமாக காட்டுகிறது உங்கள் வரிகள்..

Seeni சொன்னது…

vethanaithaan sako...

s suresh சொன்னது…

இனிமையை விற்பவனுக்கு கிடைத்தது கசப்பு வாழ்க்கை! அருமையான படைப்பு வாழ்த்துக்கள்!

சே. குமார் சொன்னது…

அருமையான கவிதை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html

படைப்பாளி சொன்னது…

அருமையான வரிகள்..இயல்பை இயல்பாய் சொல்லி இருக்கிறீர்கள்

Related Posts with Thumbnails