ஆகஸ்ட் 01, 2011

நன்கொடை

அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.


வெகுசன ஊடகமாம்
தமிழ்த்திரை உலகில்
பல்லி விழுந்த
பாலைப் போல
பாடல்கள் பல.

வீரியத் தமிழில்
கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும்
கவி மேதாவிகளே!

உங்களின்
கலப்படத்தால்

காயப்படப் போவது
மொழி மட்டுமல்ல - நம்

இனமும்தான்.
ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.

மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!

கலப்படம் தவிர்த்தலே
மொழிக்குச் செய்யும் நன்கொடை!!

18 கருத்துகள்:

ரியாஸ் அஹமது சொன்னது…

//அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.//
சாட்டை ...
தமிழ் வாழ்வாங்கு வாழ இன்னும் எழுதுங்கள்

சே.குமார் சொன்னது…

மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!
கலப்படம் தவிர்த்தலே
மொழிக்குச் செய்யும் நன்கொடை!!

ரியாஸ் அஹமது சொன்னது…

உங்கள் ஒய்வு நேரத்தில் கொஞ்சம் அழுது விட்டு போங்கோ

இன்று எனக்கு மரணம் தற்கொலை

என் வலை பக்கத்தில்

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

கண்டிப்பாக தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை ரசிக்க வேண்டும்...

அரசன் சொன்னது…

இன்றைய மேதாவிகள் உளரும் வார்த்தைகளை தமிழ் என்று நம்பும் இளைய தலைமுறைகள் அதிகம் மாமா...
சரியான சாட்டையடி தான் .. வலிக்கின்றதா என்று பார்ப்போம் மாமா ...

சத்ரியன் சொன்னது…

க(வி)சையடி!

thendralsaravanan சொன்னது…

தமிழுக்கு /அது பட்ட காயத்துக்கு அருமருந்தாய் தங்கள் கவிதை...வாழ்த்துக்கள்!

nilaamaghal சொன்னது…

இக் க‌விதையும் மொழிக்குச் செய்யுமோர் ந‌ன்கொடையாயிற்று ந‌ண்ப‌ரே... பாராட்டுகிறேன்.

கலா சொன்னது…

குடைந்து வந்த கோபத்தில்...
தமிழ்
உடைந்து விடாமல்...காப்பதில்
தமிழில் நனைந்து
அது நனையாமல்...
குடை பிடித்து
தடைவராமல்...
காக்க நினைக்கும் தமிழரே!
நன்றிகள் பல.....

மாணவன் சொன்னது…

சரியான சாட்டையடி வரிகள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

நன்கொடை செய்ய நல்ல பணம் மட்டுமல்ல நல்ல மனமும் வேண்டும்

நன்கொடை செய்வோம் (மொழிக்கு)

மாணவன் சொன்னது…

வணக்கம்ணே,

'மூன்று விஷயங்கள்' தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் நன்றி!

Ramani சொன்னது…

தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்

சந்திரகௌரி சொன்னது…

பிற மொழி கற்போர்க்குத் தமிழ்மொழியைப் போதிக்கும் சிறப்பைத் தவிர்த்து தமது தமிழ்மொழியையே கொலைசெய்பவர்கள் தானே இப்போது அதிகம். உங்கள் கவிதையாவது பிறருக்குப் பாடமாக இருக்கட்டும்

vidivelli சொன்னது…

மொழியைப்பற்றியதான நல்ல கவிதை..
அன்புடன் பாராட்டுக்கள்..

கார்த்தி சொன்னது…

ஆம் தமிழ் மொழியை பாதுகாப்போம்! வளர்ப்போம் எம் தாயைப்போல்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//வெகுசன ஊடகமாம்//

வெகு - தமிழ்
ஜனம் - சனம் - வடமொழித் திரிபு

அதற்கு மாற்றாக

வெகுமக்கள், பெருமக்கள் ஊடகம் என்றும் போடலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.
/

அருமை. மொழி இனத்தின் ஆடையும் கூட. இழந்தவர்கள் மற்றோர் இடையே அம்மணம் ஆகிறார்கள்

Related Posts with Thumbnails