ஜனவரி 28, 2011

காலபோக்கில்....


கண்ணுக்கு தெரியும்
திருவிழா பொம்மைகள்
கைக்கு எட்டாத
ஏமாற்றம்!


உயிர் கொதிக்கும் 
பசிநேரத்திற்கு பின்னே
உலை கொதிக்கும்
காலதாமதம்!


அடிப்பட்ட சுவடோடு
எழுந்து நின்றாலும்
தொடர்ந்து கைகுலுக்கும்
தோல்வியின் முகவரி!


இப்படியாகச் சில
எம்வாழ்வில் சுழன்றடிக்க...
சூராவெளியிலும் வலைவீசும்
சூட்சமம் கற்றுகொண்டோம்.!
துயரங்கள் எதுவந்தாலும்
துணிவோடு எதிர்த்து நின்றோம்!


இன்றோ....


கண்ணுக்கு எட்டாததுகூட
கைகளில் தவழுது!


கால் அரை பசியின்றி
காலமும் கழியுது!


வெண்பஞ்சு பாதையிலே
வென்றிட துடிப்பதனால்...


மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!
மனசுக்குள் காயமென்றால்
மரணத்தையே வளைக்குது!


தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!


காயங்களையும்.... 
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!


சென்ற ஆண்டு பதிவர் திரு சங்கவி எழுதிய ஒரு கட்டுரையின் பாதிப்பில் உருவானக் கவிதை.
நன்றி சங்கவி.

58 கருத்துகள்:

Chitra சொன்னது…

"காலப் போக்கில்...." ...... ரொம்ப சரி!

arasan சொன்னது…

மாமா முற்பாதி மனதை என்னமோ செய்கிறது ...
வார்த்தைகளில் அதை கூறிவிட முடியாது ....
அழகான வார்த்தைகளை கொண்டு வலியை
வலிக்காவண்ணம் கூறி இருக்கின்றீர்...

arasan சொன்னது…

தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!
//


மிகச்சரியான வரிகள் ....

இப்படிதான் நாளைய தூண்கள்

வாழும் முறையே இதுதான் என நினைத்து கொண்டு கடத்துகிறார்கள்...

arasan சொன்னது…

காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!
//


அற்புதமான வரிகள் ...

முழுதும் ரசித்து ரசித்து படித்தேன்

சசிகுமார் சொன்னது…

மிக அருமை நண்பரே

மாணவன் சொன்னது…

"காலபோக்கில்...." தலைப்பே அருமை அண்ணே,

வரிகள் சொல்லும் உணர்வுகளை... நம்ம அரசன் சொல்வதுபோல் வார்த்தைகளில் விவரிக்க முடியாதுதான் அந்தளவிற்கு வரிகளின் வீரியம் நம்மை ஏதோ செய்கிறது என்பது மட்டும் உண்மை...

மாணவன் சொன்னது…

//காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!//

இது ஒன்று போதுமே ...

ரொம்ப நன்றி அண்ணே இன்னும் பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.....

rvelkannan சொன்னது…

மிக அருமை தோழர் ..
சங்கவிக்கும் எனது நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

அடடடா அருமையா இருக்குப்பா......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை சித்ரா மேடத்துக்கே குடுத்துருங்க பாஸ்.....

சுந்தரா சொன்னது…

கடைசி நான்கு வரிகள், கடைப்பிடிக்கவேண்டிய வரிகள்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!
காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!//

ரொம்ப சரி.. இப்பல்லாம் சின்ன தோல்வியைக்கூட தாங்குற சக்தி பசங்களுக்கு இல்லாத்தாலதான் விபரீதமான முடிவுகளுக்கு கூட போறாங்க..

ஆயிஷா சொன்னது…

அற்புதமான வரிகள்.மிக அருமை.

சத்ரியன் சொன்னது…

////தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

அடடடா,

அருமை கவிஞரே.... வலி அறியாதவர்களுக்கு வலித்துவிடக் கூடாதென ... வலிமையைக் கற்பிக்கும் உங்கள் மென்ன்ன்ன்ன்மையான சொற்கள்... அட அட அட!

சக்தி கல்வி மையம் சொன்னது…

Thanks for your visit and comments

செல்வா சொன்னது…

வறுமை நிலையில் இருந்து வருவோரின் வாழ்க்கையை இயல்பா சொல்லி இருக்கீங்க அண்ணா ..

thendralsaravanan சொன்னது…

வறுமையை உணர்ந்தவன்
வலிமையைப் பெறுகிறான்!
வசதியைப் பெற்றவன்
வாழ்க்கையை இழக்கிறான்!
சரிதானே!

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

வெண்பஞ்சு பாதையிலே
வென்றிட துடிப்பதனால்...
மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
superb karunaagarasu

கா.வீரா சொன்னது…

//அடிப்பட்ட சுவடோடு
எழுந்து நின்றாலும்
தொடர்ந்து கைகுலுக்கும்
தோல்வியின் முகவரி!//

உண்மைவரிகள் ..
மிகவும் ரசித்த வரிகள்..!


நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
www.kavithaipoonka.blogspot.com

இன்றைய கவிதை சொன்னது…

வலியின் வரிகள் அழகாய் கவிதையாய் வடித்து இருக்கிறீர்கள்,

நன்றி கருணாகரசு

மதுரை சரவணன் சொன்னது…

//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

//காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!//

ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

அருமையான தன்னம்பிக்கை கவிதை.
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான வரிகள்.

அன்புடன் நான் சொன்னது…

...

ba.Thiru சொன்னது…

thazhunpilla thalirkale " saththamillamal araium intha vaarthai somperikalai... karunake nna summava

Unknown சொன்னது…

நல்ல கவிதை.நல்ல கருத்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
"காலப் போக்கில்...." ...... ரொம்ப சரி!//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
மாமா முற்பாதி மனதை என்னமோ செய்கிறது ...
வார்த்தைகளில் அதை கூறிவிட முடியாது ....
அழகான வார்த்தைகளை கொண்டு வலியை
வலிக்காவண்ணம் கூறி இருக்கின்றீர்...
//

மிக்க நன்றிங்க ராசா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!
//


மிகச்சரியான வரிகள் ....

இப்படிதான் நாளைய தூண்கள்

வாழும் முறையே இதுதான் என நினைத்து கொண்டு கடத்துகிறார்கள்...
//

குறைகள் அவர்கள் மீது மட்டுமல்ல.... சூழலின் மீதும் உள்ளது.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!
//


அற்புதமான வரிகள் ...

முழுதும் ரசித்து ரசித்து படித்தேன்//

என் நன்றிகள்,

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...
மிக அருமை நண்பரே//

மிக்க நன்றிங்க நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
"காலபோக்கில்...." தலைப்பே அருமை அண்ணே,

வரிகள் சொல்லும் உணர்வுகளை... நம்ம அரசன் சொல்வதுபோல் வார்த்தைகளில் விவரிக்க முடியாதுதான் அந்தளவிற்கு வரிகளின் வீரியம் நம்மை ஏதோ செய்கிறது என்பது மட்டும் உண்மை...//

தங்களின் வருகைக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
//காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!//

இது ஒன்று போதுமே ...

ரொம்ப நன்றி அண்ணே இன்னும் பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.....//

நிச்சயமாக... முடிந்தவரை கொடுக்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

Vel Kannan கூறியது...
மிக அருமை தோழர் ..
சங்கவிக்கும் எனது நன்றி//

மிக்க நன்றிங்க தோழர். (சங்கவி சார்பாகவும்)

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

அடடடா அருமையா இருக்குப்பா......//

மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
வடை சித்ரா மேடத்துக்கே குடுத்துருங்க பாஸ்....//

அப்படியே ஆகட்டுங்க.

அன்புடன் நான் சொன்னது…

சுந்தரா கூறியது...
கடைசி நான்கு வரிகள், கடைப்பிடிக்கவேண்டிய வரிகள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அமைதிச்சாரல் கூறியது...
//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!
காயங்களையும்....
கற்றுகொள்ளுங்கள்!//

ரொம்ப சரி.. இப்பல்லாம் சின்ன தோல்வியைக்கூட தாங்குற சக்தி பசங்களுக்கு இல்லாத்தாலதான் விபரீதமான முடிவுகளுக்கு கூட போறாங்க.//

இது உண்மையின் அடிப்படையில் எழுதியதுங்க.....
கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஆயிஷா கூறியது...
அற்புதமான வரிகள்.மிக அருமை.//

தங்களின் பாராட்டுதலுக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
////தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

அடடடா,

அருமை கவிஞரே.... வலி அறியாதவர்களுக்கு வலித்துவிடக் கூடாதென ... வலிமையைக் கற்பிக்கும் உங்கள் மென்ன்ன்ன்ன்மையான சொற்கள்... அட அட அட!//

நீகூட பாராட்டுறன்னா...இது நல்லகவிதைதான்.

அன்புடன் நான் சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...
வறுமை நிலையில் இருந்து வருவோரின் வாழ்க்கையை இயல்பா சொல்லி இருக்கீங்க அண்ணா ..//

மிக்க நன்றிங்க செல்வா தம்பி.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
வறுமையை உணர்ந்தவன்
வலிமையைப் பெறுகிறான்!
வசதியைப் பெற்றவன்
வாழ்க்கையை இழக்கிறான்!
சரிதானே!//

மிக சரி..... உங்க கருத்துரையே கவிதையா இருக்குங்க... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
வெண்பஞ்சு பாதையிலே
வென்றிட துடிப்பதனால்...
மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
superb karunaagarasu//

வருகைக்கு வணக்கமும் நன்றியும்.

அன்புடன் நான் சொன்னது…

கா.வீரா கூறியது...
//அடிப்பட்ட சுவடோடு
எழுந்து நின்றாலும்
தொடர்ந்து கைகுலுக்கும்
தோல்வியின் முகவரி!//

உண்மைவரிகள் ..
மிகவும் ரசித்த வரிகள்..!


நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
www.kavithaipoonka.blogspot.com//

வருகைக்கு மிக்க நன்றிங்க வீரா.... கண்டிப்பாக வருகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
வலியின் வரிகள் அழகாய் கவிதையாய் வடித்து இருக்கிறீர்கள்,

நன்றி கருணாகரசு//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...
:(//

கருத்துரைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...
//தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க ஆசிரியரே.

அன்புடன் நான் சொன்னது…

கோமதி அரசு கூறியது...
//காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!//

ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

அருமையான தன்னம்பிக்கை கவிதை.
வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கௌம் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
அருமையான வரிகள்.//

மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

ba.Thiru கூறியது...
thazhunpilla thalirkale " saththamillamal araium intha vaarthai somperikalai... karunake nna summava//
மிக்க நன்றிங்க திருமுருகன்.... நீங்க உங்க வலைப்பூ வழியாக வரவும்...அப்போதுதான் உங்க வலைப்பூ மற்றவருக்கு தெரியும்.

அன்புடன் நான் சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
நல்ல கவிதை.நல்ல கருத்துக்கள்.//

மிக்க நன்றிங்க விஜயன்.

Unknown சொன்னது…

nam manak kumuralgal...inge kotti kidakkindarana.adharkku ungal blog oru nalla eduthukkattu.arumayana blog.happy to follow u

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
Must Remember!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
Must Remember!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
Must Remember!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
Must Remember!!

அன்புடன் நான் சொன்னது…

savitha ramesh கூறியது...
nam manak kumuralgal...inge kotti kidakkindarana.adharkku ungal blog oru nalla eduthukkattu.arumayana blog.happy to follow u//

உங்க வருகைக்கு என் வணக்கம்.... நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!//
Must Remember!!//

உங்க புரிதலுக்கு என் நன்றிகள்.

Related Posts with Thumbnails