உடலின் எதனுள் மறைந்து வசிக்கிறாய்
உன்னை அறியத் துடித்தேன் !
இடமா, வலமா இருப்பது எங்கே ?
என்றுநான் தேடிக் களைத்தேன்
இதயமா, மூளையா நீயெது என்றே
எனக்குள் குழம்பித் தவித்தேன் !
அதிசய முத்தாய் அகமெனும் சிப்பியில்
ஆனதைக் கண்டு பிடித்தேன்
மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
உன்னை அறியத் துடித்தேன் !
இடமா, வலமா இருப்பது எங்கே ?
என்றுநான் தேடிக் களைத்தேன்
இதயமா, மூளையா நீயெது என்றே
எனக்குள் குழம்பித் தவித்தேன் !
அதிசய முத்தாய் அகமெனும் சிப்பியில்
ஆனதைக் கண்டு பிடித்தேன்
மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
( இக்கவிதை 2003 மார்ச்சில் கவிமாலையில் பரிசு பெற்றது .... எனது "தேடலைச் சுவாசி " நூலிலும் இடம்பெற்றது ,
கவிதை சமநிலைச் சிந்து என்னும் மரபில் இயற்றப்பட்டது .... குறையிருப்பின் சுட்டவும் )
Tweet |
70 கருத்துகள்:
நல்ல கவிதை...
இடும் கட்டளையை ஏற்றுக்கொண்டால்தான் மனம் கடவுள் நிலைக்கு திரும்பிவிடுமே...பாழாப்போனது அடங்கத்தான மாட்டேங்கிறது.
அருமையான கவிதை...
சமநிலைச் சிந்து எனக்கு புதிது...
பகிர்வுக்கு நன்றி தோழரே...
நல்லாருக்கு கருணாகரசு.
அண்ணே கல்லாய் இருப்பது கடவுள்தான்.. மனிதன் இல்லை..
கவிதை நல்லா இருக்கு அரசு....
கவிதை அருமையா இருக்கிறது தோழரே..
நீங்கள் வானொலியில் பேசியதை இப்போதுதான் கேட்டேன்.
அருமையான வாய்ஸ்...போட்டோல பார்க்கும் போது ஆர்மி கமாண்டோ மாதிரி இருக்கீங்க...ஆனால் யாரையும் கரைந்து போக வைக்கும் குரல். அருமை அருமை. வாழ்த்துக்கள்.
கவிதை நல்லாயிருக்கு அரசு.ஆனா போயும் போயும் கேக்கிற விஷயமும் கேக்கிற ஆளும் பிழை !ரெண்டுமே சரி வராது !
எல்லா காலத்துக்கும் பொருந்தும் அருமையான கவிதை...
கவிதை நல்லா இறுக்கு சார்.
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
வேணாங்க சதையும் இளகியமனமும் கொண்டமனிதனாக மாறினாளே போதும்.
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு ///
!!குழப்பமான வரிகளா தோன்றியது. பிறகு புரிந்தது.
கருணா!! அருமை!!!
//மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!//
மனத்தின் மகா இரண்டு பக்கமும் வரிகளில்...வாழ்த்துகள் கருணா அண்ணா...
நல்ல கவிதை...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
..... எத்தனை தெளிவான கருத்து! கவிதை அருமையாக இருக்கிறது..... இப்போதான் follow பண்றேன். தொடர்ந்து அசத்துங்க. வாழ்த்துக்கள்!
மனம் லயிக்கும் கவிதை. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
மூளையே! நீதான் எங்கள் உடல் எனும் கணினியின், மதர் போர்டா,அல்லது இல்லாமல் இயங்காது என்ற கீ போர்டா?
தங்களின் பொத்தகத்தில் படித்து வியந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. அருமையான வரிகள்.
வாழ்த்துகள்
உங்களின் புதிய கவிதைகளை
அடுத்த பொத்தகத்தில் தான் படிக்க முடியுமா :)))
நல்ல இருக்கு தோழர் கவிதை
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
அருமையானதொரு கவிதை..
manathai patri manam pesiyathu suvaipada irunthadhu karuna....
அருமை நண்பரே..!
ரொம்ப நல்லாருக்குங்க :)
அருமை நண்பரே!
அருமையான கவிதை...
நண்பரே .... அருமையான கவிதை, எனக்கு சமநிலை சிந்து என்றால் என்ன என்று தெரியாது.
மற்றபடி கவிதை அருமை. மனிதர்களின் மனதை பொறுத்தது.
கடவுள் - இது ரொம்ப குழப்பும் கருத்து இயல்.
நீங்கள் உயர்வான நிலை என்கிற சிந்தனையில் இதை எடுத்துகொண்டு உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
மனம்...
மிக அழகான அதிசயமான விசயம்!
உலகத்தின் இயக்கமே அதில் தான் !
ஆம் இந்த மனதினால் மட்டுமே மனிதன் தெய்வீக நிலை அடைகிறான்!
கவிதையின் கரு நன்றாக இருக்கு கவிதையும்...
கவிதை அருமை அண்ணா ..!!
நல்லா இருக்கு ..!!
//கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!//
அருமை.... நல்லாயிருக்கு நண்பா
கவிதை மிக அருமையாக செதுக்கியிருக்கீங்க..! அருமையாக உள்ளது ஆழமான சிந்தனைகளுடன்....
க.பாலாசி கூறியது...
நல்ல கவிதை...
இடும் கட்டளையை ஏற்றுக்கொண்டால்தான் மனம் கடவுள் நிலைக்கு திரும்பிவிடுமே...பாழாப்போனது அடங்கத்தான மாட்டேங்கிறது.//
கருத்துக்கு நன்றிங்க க.பாலாசி.
அகல்விளக்கு கூறியது...
அருமையான கவிதை...
சமநிலைச் சிந்து எனக்கு புதிது...
பகிர்வுக்கு நன்றி தோழரே...//
வருகைக்கு நன்றிங்க அகல்விளக்கு.
வானம்பாடிகள் கூறியது...
நல்லாருக்கு கருணாகரசு.//
அய்யா வணக்கம், நன்றி.
கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
அண்ணே கல்லாய் இருப்பது கடவுள்தான்.. மனிதன் இல்லை..//
நம்பிக்கைத்தான் கடவுள்....
தங்களின் கருத்தையும் மறுக்க முடியவில்லை ... தோழரின் வருகைக்கு மிக்க நன்றி.
ஸ்ரீராம். கூறியது...
கவிதை நல்லா இருக்கு அரசு....//
மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.
அன்புடன் அருணா கூறியது...
பூங்கொத்து!//
மிக்க மகிழ்ச்சி.... நன்றியும்.
கமலேஷ் கூறியது...
கவிதை அருமையா இருக்கிறது தோழரே..
நீங்கள் வானொலியில் பேசியதை இப்போதுதான் கேட்டேன்.
அருமையான வாய்ஸ்...போட்டோல பார்க்கும் போது ஆர்மி கமாண்டோ மாதிரி இருக்கீங்க...ஆனால் யாரையும் கரைந்து போக வைக்கும் குரல். அருமை அருமை. வாழ்த்துக்கள்//
தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க தோழரே.( கருத்துரையை படிக்கையில் எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது)
ஹேமா கூறியது...
கவிதை நல்லாயிருக்கு அரசு.ஆனா போயும் போயும் கேக்கிற விஷயமும் கேக்கிற ஆளும் பிழை !ரெண்டுமே சரி வராது //
நீங்க சொல்லுறதும் சரித்தான்.... ஹேமா.
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
எல்லா காலத்துக்கும் பொருந்தும் அருமையான கவிதை...//
வருகைக்கு மிக்க நன்றிங்க.
ராஜவம்சம் கூறியது...
கவிதை நல்லா இறுக்கு சார்.
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
வேணாங்க சதையும் இளகியமனமும் கொண்டமனிதனாக மாறினாளே போதும்.//
அப்படியாவது ஆகட்டும் எனக்கு மகிழ்ச்சித்தான் வருகைக்கு மிக்க நன்றிங்க.
தமிழ் உதயம் கூறியது...
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு ///
!!குழப்பமான வரிகளா தோன்றியது. பிறகு புரிந்தது.//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க
தேவன் மாயம் கூறியது...
கருணா!! அருமை!!!//
நன்றிங்க மருத்துவரே.
சீமான்கனி கூறியது...
//மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!//
மனத்தின் மகா இரண்டு பக்கமும் வரிகளில்...வாழ்த்துகள் கருணா அண்ணா...//
வருகைக்கு மிக்க நன்றிங்க சீமாங்கனி.
கலாநேசன் கூறியது...
நல்ல கவிதை...//
மிக்க நன்றிங்க.
சே.குமார் கூறியது...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு//
மிக்க நன்றிங்க குமார்.
Chitra கூறியது...
மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
..... எத்தனை தெளிவான கருத்து! கவிதை அருமையாக இருக்கிறது..... இப்போதான் follow பண்றேன். தொடர்ந்து அசத்துங்க. வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.... நன்றிங்க.
நிலாமதி கூறியது...
மனம் லயிக்கும் கவிதை. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.
goma கூறியது...
மூளையே! நீதான் எங்கள் உடல் எனும் கணினியின், மதர் போர்டா,அல்லது இல்லாமல் இயங்காது என்ற கீ போர்டா?//
ம்ம்ம்ம்ம்ம் தூள்.
வருகைக்கு நன்றிங்க.
திகழ் கூறியது...
தங்களின் பொத்தகத்தில் படித்து வியந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. அருமையான வரிகள்.
வாழ்த்துகள்
உங்களின் புதிய கவிதைகளை
அடுத்த பொத்தகத்தில் தான் படிக்க முடியுமா :)))//
தங்களின் வருகைக்கு நன்றிங்க.... என்னேட அத்தனை படைப்பையும் இணையத்தில் சேர்த்துவிட ஆசைப்படுகிறேன்..... நேரம் கிடைக்காத போதும்.... என் மூளை சிந்திக்க மறுக்கும் போதும் பயை கவிதையை பதிவேற்றுகிறேன்.... பொறுத்தருள்க.
velkannan கூறியது...
நல்ல இருக்கு தோழர் கவிதை//
நன்றிங்க தோழரே.
sakthi கூறியது...
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!
அருமையானதொரு கவிதை..//
மிக்க நன்றிங்க சக்தி.
தமிழரசி கூறியது...
manathai patri manam pesiyathu suvaipada irunthadhu karuna....//
வருகைக்கு மிக்க நன்றிங்க... நீங்க ஏன் அடிக்கடி காணா போறீங்க ?
தமிழ் அமுதன் கூறியது...
அருமை நண்பரே..!//
மிக்க நன்றிங்க அமுதன்.(ஜீவன்)
இராமசாமி கண்ணண் கூறியது...
ரொம்ப நல்லாருக்குங்க :)//
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.
- இரவீ - கூறியது...
அருமை நண்பரே!//
நன்றிங்க இரவீ.
வெறும்பய கூறியது...
அருமையான கவிதை...//
நன்றிங்க நண்பரே.
Karthick Chidambaram கூறியது...
நண்பரே .... அருமையான கவிதை, எனக்கு சமநிலை சிந்து என்றால் என்ன என்று தெரியாது.
மற்றபடி கவிதை அருமை. மனிதர்களின் மனதை பொறுத்தது.
கடவுள் - இது ரொம்ப குழப்பும் கருத்து இயல்.
நீங்கள் உயர்வான நிலை என்கிற சிந்தனையில் இதை எடுத்துகொண்டு உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.//
சமநிலைச் சிந்து என்பது... மரபுகவிதையில் ஒரு வகை.
தங்கலின் கருத்து ஏற்புடையதே! வருகைக்கு மிக்க நன்றிங்க
pinkyrose கூறியது...
மனம்...
மிக அழகான அதிசயமான விசயம்!
உலகத்தின் இயக்கமே அதில் தான் !
ஆம் இந்த மனதினால் மட்டுமே மனிதன் தெய்வீக நிலை அடைகிறான்!
கவிதையின் கரு நன்றாக இருக்கு கவிதையும்...//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க.
ஆ.ஞானசேகரன் கூறியது...
//கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!//
அருமை.... நல்லாயிருக்கு நண்பா//
வாங்க நண்பா எப்படி இருக்கிங்க?
கருத்துக்கு மிக்க நன்றிங்க.
ப.செல்வக்குமார் கூறியது...
கவிதை அருமை அண்ணா ..!!
நல்லா இருக்கு ..!//
வருகைக்கு மிக்க நன்றிங்க தம்பி.
அப்பாவி தங்கமணி கூறியது...
நல்லா இருக்குங்க//
மிக நன்றிங்க.
பிரவின்குமார் கூறியது...
கவிதை மிக அருமையாக செதுக்கியிருக்கீங்க..! அருமையாக உள்ளது ஆழமான சிந்தனைகளுடன்....//
வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க.
மிக அருமை.....
Kousalya கூறியது...
மிக அருமை.....//
மிக்க நன்றிங்க.
மனதைப் படிப்பதே கடினம்
அதை வைத்து சம நிலை சிந்து பாடியிருக்கிறீர்கள்... அருமை
மிக நிறைவான கவிதைங்க!
கண்டுபிடிச்சுட்டீங்களா..?
மனம் எங்கேயிருக்கு?
பிளாகர் அரசூரான் கூறியது...
மனதைப் படிப்பதே கடினம்
அதை வைத்து சம நிலை சிந்து பாடியிருக்கிறீர்கள்... அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
பிளாகர் அண்ணாமலை..!! கூறியது...
மிக நிறைவான கவிதைங்க!
கண்டுபிடிச்சுட்டீங்களா..?
மனம் எங்கேயிருக்கு?//
வருகைக்கு நன்றிங்க ..... மனதை தேடிதான் கவிதை எழுதி திரியுறன்.
//மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!//
மிக அருமை.
இரண்டு வாரங்கள் ஊரில் இல்லாததால் வலைப்பக்கம் வர இயலவில்லை:)!
ராமலக்ஷ்மி கூறியது...
//மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!
எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!//
மிக அருமை.
இரண்டு வாரங்கள் ஊரில் இல்லாததால் வலைப்பக்கம் வர இயலவில்லை:)!//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.
கருத்துரையிடுக