பிப்ரவரி 10, 2010

தாரத்தின்... தாய்மை !


தாயகம் திரும்பும் ...
உன்னை
கணவனாக வழியனுப்புகிறேன் .
*
நீ ...
விமானம் ஏறும் அந்த
கடைசி நிமிடத்தில்
கையசைக்கும் போது
*
முந்தானையை பிடித்தோடும்
குழந்தையாய் ...
எனக்குள் பீறிடுகிறது
தாய்மையின் ஏக்கம் !

49 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

நீண்ட நாள் கழித்த பதிவை பார்த்தவுடன் மகிழ்ந்தேன்
படித்தவுடன் .... :-(
பொறுத்திருங்கள் தோழரே. நாள் வரும் நலமுடன் சேர்ந்து வாழ

துபாய் ராஜா சொன்னது…

கல்லுக்குள் இருக்கும் ஈரம் உடைக்கும் உளிக்கு தெரியும். ஆணுக்குள் இருக்கும் தாய்மை பிரிவின் வலிக்கு தெரியும்.

வசந்தி சொன்னது…

கவலைபடாதீ்ங்க சேர்ந்து வாழும்நாள் வெகுதூரம் இல்லை உங்களுக்கும் எனது தோழிக்கும் அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
நீண்ட நாள் கழித்த பதிவை பார்த்தவுடன் மகிழ்ந்தேன்
படித்தவுடன் .... :-(
பொறுத்திருங்கள் தோழரே. நாள் வரும் நலமுடன் சேர்ந்து வாழ//
தோழரின் வருகைக்கும்.... வாழ்த்துக்கும் மிக்க நன்றி.... இனி முடிந்தவரை...தொடர்ந்து வருகிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
கல்லுக்குள் இருக்கும் ஈரம் உடைக்கும் உளிக்கு தெரியும். ஆணுக்குள் இருக்கும் தாய்மை பிரிவின் வலிக்கு தெரியும்.//

மறவாது என் தளம் வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
கவலைபடாதீ்ங்க சேர்ந்து வாழும்நாள் வெகுதூரம் இல்லை உங்களுக்கும் எனது தோழிக்கும் அட்வான்ஸ் திருமணநாள் வாழ்த்துக்கள்//

கருத்துக்கும் ....
வாழ்த்துக்கும் ... மிக்க நன்றி.... வசந்தி.

(தங்கை...வசந்தியை
அண்ணன் சத்திரியன் ரொம்ப நலம் விசாரித்தார்!)

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

கவிதை அருமை அருமை !

விஜய் சொன்னது…

கொடும்பிரிவு இது

கவிதை வலி

வாழ்த்துக்கள் சீக்கிரம் இணைய

விஜய்

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லது நல்ல படியா நடக்கும்

யாவும் நலவாய் அமையும்.

-----------------

நல்லபடியாக போய் வீடு புகுந்தாச்சா

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
கவிதை அருமை அருமை !//

மிக்க்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
கொடும்பிரிவு இது

கவிதை வலி

வாழ்த்துக்கள் சீக்கிரம் இணைய

விஜய்//

கருத்துக்கும்.... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க விஜய்!

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நல்லது நல்ல படியா நடக்கும்

யாவும் நலவாய் அமையும்.

-----------------

நல்லபடியாக போய் வீடு புகுந்தாச்சா//

வருகைக்கு மிக்க நன்றிங்க ஜமால்......
நல்லப்படியாக..... வீடு சேர்ந்துவிட்டார்....
தற்சமயம் மிக நலம்.

தமிழ் அமுதன் சொன்னது…

///முந்தானையை பிடித்தோடும்
குழந்தையாய் ...
எனக்குள் பீறிடுகிறது
தாய்மையின் ஏக்கம் !///


அருமை !

அன்புடன் நான் சொன்னது…

ஜீவன் கூறியது...
///முந்தானையை பிடித்தோடும்
குழந்தையாய் ...
எனக்குள் பீறிடுகிறது
தாய்மையின் ஏக்கம் !///


அருமை !//

வருகைக்கு மிக்க நன்றிங்க ஜீவன்.

கலா சொன்னது…

\\\(தங்கை...வசந்தியை
அண்ணன் சத்திரியன்
ரொம்ப நலம் விசாரித்தார்!)\\\\

கண்ணனென்றாலே...ஒரு பயந்தான்!!
அதுதாய்யா...மாயக் கண்ணன் என்று
சொன்னேன்.

இதைப் படித்த நம்ம சாரல்குட்டி
விழுந்து விழுந்து சிரித்தாளாம்
கருணாகரசு.

கலா சொன்னது…

ஆமாமா..மனைவி,அக்கா பொண்ணு
தாய்மை எல்லாம் சேர்த்து ....சொல்லவா
வேண்டும்?அன்பின் அன்பை!!

பிரிவும்,ஏக்கமும்.பாசமும் உங்கள் தூய்யன்பில்
துளித்துளியாய்....

எனக்கும்..கனக்கிறது பாசத்தால்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பிரிவின் வலி தெரிகிறது.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
ஆமாமா..மனைவி,அக்கா பொண்ணு
தாய்மை எல்லாம் சேர்த்து ....சொல்லவா
வேண்டும்?அன்பின் அன்பை!!

பிரிவும்,ஏக்கமும்.பாசமும் உங்கள் தூய்யன்பில்
துளித்துளியாய்....

எனக்கும்..கனக்கிறது பாசத்தால்...//

கலாவின் வருகைக்கும்.... அசல் அன்பிற்கும் எங்கள் இருவரின் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பிரிவின் வலி தெரிகிறது.//

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.

Ashok D சொன்னது…

நச்... :)

அன்புடன் நான் சொன்னது…

D.R.Ashok கூறியது...
நச்... :)
//

மிக்க நன்றிங்க.

சத்ரியன் சொன்னது…

ஏக்கம்... புரிகிறது என் தங்கையின் கணவா.!


************
இப்படி புரியிற மாதிரி கவிதைகள் எழுதுங்க .... கவிஞர்களே. உங்களுக்கு புண்ணியமா போகும்.
*************

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஏக்கம்... புரிகிறது என் தங்கையின் கணவா.!


************
இப்படி புரியிற மாதிரி கவிதைகள் எழுதுங்க .... கவிஞர்களே. உங்களுக்கு புண்ணியமா போகும்.
*************//

வருகைக்கு மிக்க நன்றி!!
...........
.......... புண்ணியமா மட்டுமல்ல..... கொஞ்சம் "கண்ணிய"மாவும் போகும்!

கமலேஷ் சொன்னது…

மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...
மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்...தொடருங்கள்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையான குழந்தை மனசு உங்களவளுக்கு கருணாகரசு அதை நீங்கள் உண்ர்ந்த விதமின்னும் அருமை

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...
அருமையான குழந்தை மனசு உங்களவளுக்கு கருணாகரசு அதை நீங்கள் உண்ர்ந்த விதமின்னும் அருமை//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க.

ஹேமா சொன்னது…

அரசு என்ன சொல்லத் தெரியவேயில்லை.தற்சமயப் பிரிவுதானே.மறுபடியும் இதே சந்தோஷம் நிறையட்டும்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு என்ன சொல்லத் தெரியவேயில்லை.தற்சமயப் பிரிவுதானே.மறுபடியும் இதே சந்தோஷம் நிறையட்டும்.//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஹேமா.

அரங்கப்பெருமாள் சொன்னது…

விடுங்க... விடுங்க... இதுமாதிரி கவித எழுதத் தெரியாமத்தான் ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
விடுங்க... விடுங்க... இதுமாதிரி கவித எழுதத் தெரியாமத்தான் ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.//

வாங்க... வாங்க ஊருக்கு போயிட்டு வரும்போது இதுபோல எழுதவேண்டுயிருக்குமே?!

மகிழ்ச்சியோடு சென்று வாருங்க!

ஸ்ரீராம். சொன்னது…

இது மீள்பதிவு அல்ல. மீள்சோகம்... சோகசுகம்.. நல்ல வெளிப்பாடு. கவிதைகள் காயங்களை ஆற்றட்டும்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
இது மீள்பதிவு அல்ல. மீள்சோகம்... சோகசுகம்.. நல்ல வெளிப்பாடு. கவிதைகள் காயங்களை ஆற்றட்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

பிரிவின் துயரம்
தாய்மையின் ஏக்கமாய்..
அருமையான வெளிப்பாடு.

வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
பிரிவின் துயரம்
தாய்மையின் ஏக்கமாய்..
அருமையான வெளிப்பாடு.

வாழ்த்துக்கள்!//

தங்களின் வருகைக்கு நன்றிங்க.

ஹேமா சொன்னது…

அரசு எங்கே என் பக்கம் வாறதைக் குறைச்சிட்டீங்க.தப்பு தவறு ஏதும்ன்னா சொல்லுங்க.
திருத்திக்கிறேன்.

க.பாலாசி சொன்னது…

மிக..மிக...நல்ல கவிதை...ஏக்கங்களும் சுகம்தானே...

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு எங்கே என் பக்கம் வாறதைக் குறைச்சிட்டீங்க.தப்பு தவறு ஏதும்ன்னா சொல்லுங்க.
திருத்திக்கிறேன்.//

மதிப்பிற்குரிய ஹேமா அவர்களுக்கு..... கருத்துரை எழுதவில்லையே தவிர... உங்க பக்கம் வராமல் இல்லை... வந்துக்கொண்டுதான்... இருக்கிறேன்....

தங்களின் கவிதை ”வார்த்தை”
களோடு என்னால் சமரசம் செய்துகொண்டு கருத்து கூற இயலவில்லை... மற்றப்படி தங்களின் பக்கம் வர தவறவில்லை!

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
மிக..மிக...நல்ல கவிதை...ஏக்கங்களும் சுகம்தானே...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க பாலாசி.

பெயரில்லா சொன்னது…

சில வரிகளில் ஆணின் மனதை சொல்லிட்டீங்க...அங்கும் தாய்மை உண்டென்று...

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நியமான வரிகள்
அழகான கவிதை
வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
சில வரிகளில் ஆணின் மனதை சொல்லிட்டீங்க...அங்கும் தாய்மை உண்டென்று...//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
நியமான வரிகள்
அழகான கவிதை
வாழ்த்துக்கள்//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

Jerry Eshananda சொன்னது…

கவிதை,நன்றாக இருக்கிறது.நீங்கள் நலமா?

அன்புடன் நான் சொன்னது…

ஜெரி ஈசானந்தா. கூறியது...
கவிதை,நன்றாக இருக்கிறது.நீங்கள் நலமா?//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க...... நான் மிக நலமே!

இன்றைய கவிதை சொன்னது…

எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க

இங்கே பல பேரின் வலி இது

நன்றி கருணாகரசு

ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க

இங்கே பல பேரின் வலி இது

நன்றி கருணாகரசு

ஜேகே//

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஜேகே.

Unknown சொன்னது…

ஒவ்வோரு முறை விமானம் ஏறும் போது தாயின் பிரிவு வலியை நானும் உணர்ந்து இருக்கிறேன்.அருமையான வரிகள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

மின்னல் கூறியது...
ஒவ்வோரு முறை விமானம் ஏறும் போது தாயின் பிரிவு வலியை நானும் உணர்ந்து இருக்கிறேன்.அருமையான வரிகள் நண்பரே.//

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...... திருமணமானவர்களுக்கு... தாரத்தின் பிரிவுகூட தாய்மையின் பிரிவாகவே....

Related Posts with Thumbnails