டிசம்பர் 22, 2009

காமுக (ஆ)சாமி!!!

கடவுள் வாழும்
கருவறையில் ...
கற்பூரத்தைக்
கொளுத்தும் ... பூசாரி
கற்பை கொளுத்தியதாய்
காணோளிச் செய்தி !!!

இப்போதுதான்
இடம் மாறுகிறது
என் கோபம்
பூசாரி மீதிருந்து ...
கடவுளுக்கு !

( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை )

47 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அரசு,கடவுள் ன்னு ஒருத்தர் உண்மையாவே இருந்தாத்தானே
உங்க கோபம் பலிக்க !

நட்புடன் ஜமால் சொன்னது…

உள்ளேன் ஐயா!

---------

ஹேமா உங்களுக்காகவே (நீங்கள் துவக்கி வைத்த) தொடர் இடுக்கை விரைவில் உண்டு.

அரங்கப்பெருமாள் சொன்னது…

//இடம் மாறுகிறது
என் கோபம் //

கல்லிலே கடவுளைத் தேடாதீர்கள்.

“கடவுள் இல்லை என்பான் யாரடா
தில்லையில் வந்து பாரடா”

என்றக் கேள்விக்கு

“கடவுள் இல்லை என்பேன் நானடி
தில்லையில் இருப்பது கல்லடி”

என்று பதில் எழுதினார் பாரதிதாசன்.

புலவன் புலிகேசி சொன்னது…

கடவுளா??? யாரு அந்த கல்ல கடவுள்னு சொன்னது??? கல்லின் மீது கோபப் பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல தல..

//பிளாகர் ஹேமா கூறியது...

அரசு,கடவுள் ன்னு ஒருத்தர் உண்மையாவே இருந்தாத்தானே
உங்க கோபம் பலிக்க //

ஹேமா அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசாதீங்க..ஒவ்வொரு மனிதனின் நல்ல குணங்களை கடவுள் என்று சொல்ல வெண்டியவன் கல்லையும், கோவிலையும் கடவுள்னு சொல்லி மக்களை ஏமாத்தி வச்சிருக்காங்க...மனிதத்தில் தேடுங்கள் கடவுள் கிடைக்கும்

இப்ப சொல்லுங்க நான் நாத்திகனா? ஆத்திகனா?

priyamudanprabu சொன்னது…

அரசு,கடவுள் ன்னு ஒருத்தர் உண்மையாவே இருந்தாத்தானே
உங்க கோபம் பலிக்க !


ஹ ஹாஹ் ஆ

நாடோடி இலக்கியன் சொன்னது…

நச்.

பூங்குன்றன்.வே சொன்னது…

//என் கோபம்
பூசாரி மீதிருந்து ...
கடவுளுக்கு !//

நச் வரிகள் பாஸ். இச்சம்பவம் பற்றிய என்னோட கவிதையை(கலியுக பூசாரி !!!) விட உங்களின் இந்த கவிதை மிக அருமை !!!

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை. கோபத்தை வேறெங்கு காட்ட?

சத்ரியன் சொன்னது…

ஆ.......! சாமி..! அசத்திட்டேள் போங்கோ!

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு,கடவுள் ன்னு ஒருத்தர் உண்மையாவே இருந்தாத்தானே
உங்க கோபம் பலிக்க !//

வருகைக்கும்... கருத்துக்கும்... மிக்க நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
உள்ளேன் ஐயா!
//

நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
//இடம் மாறுகிறது
என் கோபம் //

கல்லிலே கடவுளைத் தேடாதீர்கள்.

“கடவுள் இல்லை என்பான் யாரடா
தில்லையில் வந்து பாரடா”

என்றக் கேள்விக்கு

“கடவுள் இல்லை என்பேன் நானடி
தில்லையில் இருப்பது கல்லடி”

என்று பதில் எழுதினார் பாரதிதாசன்.
//

கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு...ஆனா அசட்டுத்தனமான நம்பிக்கையை... நான் ஆதரிக்கவில்லை.

அன்புடன் நான் சொன்னது…

புலவன் புலிகேசி கூறியது...
கடவுளா??? யாரு அந்த கல்ல கடவுள்னு சொன்னது??? கல்லின் மீது கோபப் பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல தல..//

எதுவும் ஆகாது என்பது உங்க நம்பிக்கை.... ஏதாவது ஆகாதா என்பது என் நம்பிக்கை.... அவ்வளவுதான் புலவன்.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன் பிரபு கூறியது...
அரசு,கடவுள் ன்னு ஒருத்தர் உண்மையாவே இருந்தாத்தானே
உங்க கோபம் பலிக்க ! //

ஒரு நம்பிக்கைதான் பிரபு....

வருகைக்கு மிக்க நன்றி...தொடர்ந்து வாங்க.

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி இலக்கியன் கூறியது...
நச்.//

வருகைக்கு மிக்க நன்றிங்க இலக்கியன்.

அன்புடன் நான் சொன்னது…

பூங்குன்றன்.வே கூறியது...
//என் கோபம்
பூசாரி மீதிருந்து ...
கடவுளுக்கு !//

நச் வரிகள் பாஸ். இச்சம்பவம் பற்றிய என்னோட கவிதையை(கலியுக பூசாரி !!!) விட உங்களின் இந்த கவிதை மிக அருமை !!!//

தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றிங்க பூங்குன்றன்...

உங்களின் கலியுக பூசாரி...ஒரு கோணம்... இது ஒரு கோணம். உங்களின் படைப்பும் நிறைவே.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
நல்ல கவிதை. கோபத்தை வேறெங்கு காட்ட?
//

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஆ.......! சாமி..! அசத்திட்டேள் போங்கோ!//

வருகைக்கு வணக்கம்.... எல்லாம் உங்களைப்போன்ற பெரியவர்களின்... ஆசி தான்.

ஸ்ரீராம். சொன்னது…

காமுகக் கயவனுக்கு கவிதையில் கண்டனம்.

தமிழ் சொன்னது…

வலிக்கிறது

அப்படி ஒரு வலி

தமிழ் சொன்னது…

( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை )

எப்பொழுது இறுதி தேதி

மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி

க‌விமாலைக்கு இட‌ம் விட்டு இட‌ம் என்னும் தலைப்பில் என்னுடைய கிறுக்க‌லையும் அனுப்பு விரும்புகின்றேன்

கூடுதல் தகவல் அறிய விரும்புகின்றேன்

அன்புடன்
திகழ்

க.பாலாசி சொன்னது…

மிக மிக...அருமையான ஆழ்ந்த கருத்துடைய கவிதை...

Kala சொன்னது…

காமுகர் என்றால் !!
அவர்கள் கண்களுக்கு காமத்தைத்
தவிர வேறெதுவும் தென்படாது..
அதனால் தான் தெய்வம் கூட
இருப்பது புலப்படவில்லை!!

அர்ச்சகரைகரை விட அந்தப்
பெண்கள் மேல்தான் எனக்கு
கோபம் அதிகம் புத்தியில்லாமல்
அவர் அழைத்தால்.....
தாய்மை,தெய்வம் என்றெல்லாம்
போற்றும் இவர்களா!!!??
பெண்களா?காமப்பிசாசுகளா??

நல்ல கொதிப்போட்டம் அரசு
பரிசு கிடைத்தால்...வந்துவிடுவேன்
பகிர்ந்து கொள்ள!!
கிடைக்க வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லா நங்குன்னு அடிச்சீங்க
கருணாகரசு...!

இதுக்கெல்லாம் காரணம் கடவுள் இல்லைன்ற ஒரு திமிர்தான் வேறென்ன?

இன்றைய கவிதை சொன்னது…

Super!

-Keyaar

விஜய் சொன்னது…

கருவறைக்காமம்
கண் மூடிய கடவுள்

வாழ்த்துக்கள் அரசு

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை )

எப்பொழுது இறுதி தேதி

மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி

க‌விமாலைக்கு இட‌ம் விட்டு இட‌ம் என்னும் தலைப்பில் என்னுடைய கிறுக்க‌லையும் அனுப்பு விரும்புகின்றேன்

கூடுதல் தகவல் அறிய விரும்புகின்றேன்

அன்புடன்
திகழ்//

அன்புடன் திகழ் அவர்களுக்கு..... கவிமாலை இறுதி தேதி முடிவடைந்து விட்டது (20-12-2009) ஆனால் இதே தலைப்பில் கவிதையை பகிர்ந்துக்கொள்ள் முடியும்.... கவிமாலைக்கென வலைத்தளம் உண்டு... www.kavimalai.wordpress.com
அங்கே சென்று விபரம் பெறலாம்.... போட்டி கவிதையை அனுப்ப ma.anbalagan@gmail.com
இல்லையேல் எனக்கு அனுப்பினாலும் நான் சேர்த்து விடுவேன்....
எனது முகவரி..... karunakarasu@gmail.com.
வருகைக்கு மிக்க நன்றி

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
காமுகக் கயவனுக்கு கவிதையில் கண்டனம்.//


அந்த நாயே நிக்கவச்சி சுடத்தான் ஆசை... என்னசெய்ய ஸ்ரீராம்... வருகைக்கு நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
மிக மிக...அருமையான ஆழ்ந்த கருத்துடைய கவிதை...//

வருகைக்கும் பாராட்டுக்கும்...மிக்க நன்றிங்க பாலாசி.
( ஈரோட்டில கலக்கிட்டிங்க போல வாழ்த்துக்கள்)

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
நல்லா நங்குன்னு அடிச்சீங்க
கருணாகரசு...!

இதுக்கெல்லாம் காரணம் கடவுள் இல்லைன்ற ஒரு திமிர்தான் வேறென்ன?//

அதுவும்... காரணம்.
மக்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுதியுள்ளான்... அந்த காமுகன்....

வருகைக்கு மிக்க நன்றிங்க வசந்த்.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை(கள்) கூறியது...
கருவறைக்காமம்
கண் மூடிய கடவுள்

வாழ்த்துக்கள் அரசு

விஜய்//

நன்றிங்க.... விஜய்

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
Super!

-Keyaar//

நன்றிங்க கேயார்

அன்புடன் நான் சொன்னது…

Kala கூறியது...
காமுகர் என்றால் !!
அவர்கள் கண்களுக்கு காமத்தைத்
தவிர வேறெதுவும் தென்படாது..
அதனால் தான் தெய்வம் கூட
இருப்பது புலப்படவில்லை!!

அர்ச்சகரைகரை விட அந்தப்
பெண்கள் மேல்தான் எனக்கு
கோபம் அதிகம் புத்தியில்லாமல்
அவர் அழைத்தால்.....
தாய்மை,தெய்வம் என்றெல்லாம்
போற்றும் இவர்களா!!!??
பெண்களா?காமப்பிசாசுகளா??

நல்ல கொதிப்போட்டம் அரசு
பரிசு கிடைத்தால்...வந்துவிடுவேன்
பகிர்ந்து கொள்ள!!
கிடைக்க வாழ்த்துகள்.//

மக்களின் அறியாமையை தவறாக பயன் படுத்தியுள்ளான் அந்த காமுகன்... அதிக தவறு அந்த காமுகன் மீதுதான் என்பது என் கருத்து...தங்கள் கருத்தையும் ஏற்கிறேன்..... வருகைக்கு மிக்க நன்றிங்க கலா.

thiyaa சொன்னது…

காலம் கெட்டுப்போச்சு

rvelkannan சொன்னது…

தோழர், நான் தெய்வ நம்பிக்கை அற்றவன்.
ஆனாலும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களையும் நேசிப்பவன்.
நம்பிக்கை எது, மூட நம்பிக்கை எது என்று பிரித்துக்காட்டும்
பகுத்தறிவு சிந்தனைகள் இங்கு ஏராளம். கண்டிப்பாக ஒவ்வொரு
மனிதனும் பகுத்தறிவு சிந்தனை வளர்த்து கொள்ளவேண்டும்.
(ஆண், பெண்). இது நடக்காத வரை இம்மாதிரியான நிகழ்வுகள்
தொடரும் என்பதை உறுதி பட கூறுகிறேன்.

துபாய் ராஜா சொன்னது…

நியாயமான அறச்சீற்றம்.

//கோயில் கூடாது என்று கூறவில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.// பராசக்தி பட வசனத்தை உண்மைப்படுத்திய மனம் புழுங்க வைக்கும் நிகழ்ச்சி.

(பணிப்பளு அதிகம் என்பதே தாமத வருகைக்கு காரணம் தோழர்.)

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற இத்துணை தெளிவான படத்தை பார்க்கும் பக் என்று இருக்கிறது. மொத்த உங்கள் சிந்தனைகளும் சிறப்பு.

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
காலம் கெட்டுப்போச்சு//

வருகைக்கு நன்றி

அன்புடன் நான் சொன்னது…

தோழர்...வேல்கண்ணனுக்கு..... நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்... ஆனால் மனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற ஆசையும்....எண்ணமும் உள்ளவன்....

வருகைக்கு மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
நியாயமான அறச்சீற்றம்.

//கோயில் கூடாது என்று கூறவில்லை. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.// பராசக்தி பட வசனத்தை உண்மைப்படுத்திய மனம் புழுங்க வைக்கும் நிகழ்ச்சி.

(பணிப்பளு அதிகம் என்பதே தாமத வருகைக்கு காரணம் தோழர்.)//

தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.... துபாய்ராசா.

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...
இது போன்ற இத்துணை தெளிவான படத்தை பார்க்கும் பக் என்று இருக்கிறது. மொத்த உங்கள் சிந்தனைகளும் சிறப்பு.
//

தங்களின் முதல் வருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஜோதிஜி.

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

கவிவரிகள் அழகு .
மதத்தின் பெயரால்
தப்பு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்

வசந்தி சொன்னது…

கவிதை அருமை... தோழி நலமா?

அன்புடன் நான் சொன்னது…

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
கவிவரிகள் அழகு .
மதத்தின் பெயரால்
தப்பு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்//

உங்க கூற்று ஏற்புடையதே.... வருகைக்கு மிக்க நன்றிங்க நிகே.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
கவிதை அருமை... தோழி நலமா?//

கருத்துக்கு நன்றி வசந்தி.... தோழி மிக்க நலம்.

அம்பிகா சொன்னது…

அருவெறுப்பான ஜந்துக்கள்.....

அன்புடன் நான் சொன்னது…

அம்பிகா கூறியது...
அருவெறுப்பான ஜந்துக்கள்.....//

அம்பிகாவின் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து வாங்க.

Related Posts with Thumbnails