இரும்பு பித்தளை ஈயம் என
எதை தின்று வாழ்வாய் ?
குயில் கிளிகள் குருவிகளை
எங்கே தேடி அலைவாய் ?
உடையை கல்லில் நெய்தா
உடுத்திக் கொள்ள முனைவாய்?
தண்ணீர் பாய்ந்த இடமெல்லாம்
தார்ச்சாலை புகுவது தகுமோ ?
விளைச்சல் குவித்த நிலத்தின்மீது
விண்தொடும் கட்டடம் முறையா ?
அழிவிற்கு பாதைப் போடும்
ஆடம்பர மனிதா ... உனக்கு
அவசர மற்றும்
அவசிய வேண்டுகோள் ஒன்று !
"விளை"நிலங்களை ...
"வீட்டு மனை" ...
"விலை" நிலங்கலாக்கும் ...
அது மட்டும் வேண்டாம் !
சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை ... கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை .
Tweet |
32 கருத்துகள்:
இந்த கவிதை பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
பரிசுகள் மட்டும் அல்ல விருதும் கொடுக்கவேண்டிய
கவிதை தான். தற்கால சுயநல அரசியல்வாதிகளுக்கும்
பண வெறி பிடித்த பிசாசுகளுக்கும் புரியவேண்டும்
தோழரே !
வாழ்த்துக்கள்.
அன்றைய தினத்தில் உங்கள் கவிதையை நானும் இரசித்தேன்
அனைவரோடும் மனநிலையும் கெட்டுப்போய் தான் உள்ளது.
யாரை குற்றம் சாட்டமுடியும்?
வணக்கம்.எங்கே கனநாட்களாய்க் காணோம்.சுகம்தானே! கவிதை மீண்டும் ஒரு சமூகச் சிந்தனை.
யாராவது ஒருவர் இருவர் காதிலாவது விழட்டும்.நாங்களும் கடைப்பிடிப்போம்.
தண்ணீர் பாய்ந்த இடமெல்லாம்
தார்ச்சாலை புகுவது தகுமோ ?
விளைச்சல் குவித்த நிலத்தின்மீது
விண்தொடும் கட்டடம் முறையா ?
நகரமைய மாதலால் நரகமய மாகும் கிராமத்தானின் வேதனைகள்
நியாயமான கேள்விகள்.
எல்லோருக்கும் இந்த அறச்சீற்றம் எழுந்தால் இந்த உலகம் உய்வடையும்.
வாழ்த்துகள் நண்பரே
வேல் கண்ணன் கூறியது...
இந்த கவிதை பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
பரிசுகள் மட்டும் அல்ல விருதும் கொடுக்கவேண்டிய
கவிதை தான். தற்கால சுயநல அரசியல்வாதிகளுக்கும்
பண வெறி பிடித்த பிசாசுகளுக்கும் புரியவேண்டும்
தோழரே !//
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க தோழரே.
வலசு - வேலணை கூறியது...
வாழ்த்துக்கள்.
அன்றைய தினத்தில் உங்கள் கவிதையை நானும் இரசித்தேன்//
வாருங்கள் வலசு _ வேலன்
மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்... அன்றைய நாள் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்கும்.
அப்பாவி முரு கூறியது...
அனைவரோடும் மனநிலையும் கெட்டுப்போய் தான் உள்ளது.
யாரை குற்றம் சாட்டமுடியும்?//
நாமும் கொஞ்சம் தவிர்கனும்...விளைநிலங்களை விற்பதையும்...வாங்குவதையும்.
கருத்துக்கு நன்றிங்க.
ஹேமா கூறியது...
வணக்கம்.எங்கே கனநாட்களாய்க் காணோம்.சுகம்தானே! கவிதை மீண்டும் ஒரு சமூகச் சிந்தனை.
யாராவது ஒருவர் இருவர் காதிலாவது விழட்டும்.நாங்களும் கடைப்பிடிப்போம்.//
மிக அதிக வேலை ஹேமா, அதான் அந்த வேலைக்குள் காணாமல் போயிட்டேன்.
கருத்துக்கு நன்றி... தொடர்ந்து சந்திப்போம்.
கவிக்கிழவன் கூறியது...
தண்ணீர் பாய்ந்த இடமெல்லாம்
தார்ச்சாலை புகுவது தகுமோ ?
விளைச்சல் குவித்த நிலத்தின்மீது
விண்தொடும் கட்டடம் முறையா ?
நகரமைய மாதலால் நரகமய மாகும் கிராமத்தானின் வேதனைகள்//
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கவிக்கிழவன்.
தங்களின்...
நகரமைய மாதலால் நரகமய மாகும் கிராமத்தானின் வேதனைகள்//
இந்த வரிகள் மிக அருமை... ரசனையோடும் வலிமையோடும் இருந்தது நானும் ரசித்தேன்.
துபாய் ராஜா கூறியது...
நியாயமான கேள்விகள்.
எல்லோருக்கும் இந்த அறச்சீற்றம் எழுந்தால் இந்த உலகம் உய்வடையும்.//
இல்லைன்னா மாத்திரையைத்தான் உணவாக சாப்பிட நேரிடும். கருத்துக்கு மிக்க நன்றிங்க துபாய் ராசா.
திகழ் கூறியது...
வாழ்த்துகள் நண்பரே//
மிக்க நன்றிங்க நண்பரே.
இடைவேளைக்கு பின் வருகைக்கு நன்றி.
நல்ல வேண்டுகோள்தான்.. யாருக்கும் செவியில்லை இங்கு.
அருமையான கவி அநியாயங்கள் நடந்தால்
கவனிக்க வேண்டியவர்கள் கண்ணை மூடி
காதைப் பொத்தி மௌனவிரதமிருந்தால்
யாரிடம் நியாயம் கேட்பது?ஒவ்வொரு விதத்திலும்
உலகம் அழிந்துகொண்டே போகிறது.நமது கவிதைகளும்,
பேச்சுக்களும் கரைசேர்க்குமா?
//சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை ... கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை . //
வாழ்த்துகள் நண்பா...
////"விளை"நிலங்களை ...
"வீட்டு மனை" ...
"விலை" நிலங்கலாக்கும் ...
அது மட்டும் வேண்டாம் !////
ம்ம்ம்ம்ம்ம்ம்,,,,,,,,,,,
அரங்கப்பெருமாள் கூறியது...
நல்ல வேண்டுகோள்தான்.. யாருக்கும் செவியில்லை இங்கு.//
வருகைக்கு மிக்க நனறி.
என் கவிதை ஒரு தனி மனிதனையாவது பாதிக்காதா என்ற ஏக்கம்தான்.
Kala கூறியது...
அருமையான கவி அநியாயங்கள் நடந்தால்
கவனிக்க வேண்டியவர்கள் கண்ணை மூடி
காதைப் பொத்தி மௌனவிரதமிருந்தால்
யாரிடம் நியாயம் கேட்பது?ஒவ்வொரு விதத்திலும்
உலகம் அழிந்துகொண்டே போகிறது.நமது கவிதைகளும்,
பேச்சுக்களும் கரைசேர்க்குமா?
ஆ.ஞானசேகரன் கூறியது...
//சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை ... கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை . //
வாழ்த்துகள் நண்பா...//
மிக்க நன்றி நண்பா.
ஆ.ஞானசேகரன் கூறியது...
////"விளை"நிலங்களை ...
"வீட்டு மனை" ...
"விலை" நிலங்கலாக்கும் ...
அது மட்டும் வேண்டாம் !////
ம்ம்ம்ம்ம்ம்ம்,,,,,,,,,,,//
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆமாம் விடுமுறை நல்லபடி முடிந்ததா நண்பா?
சரியான நேரத்தில் சரியான கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்
கவிதை(கள்) கூறியது...
சரியான நேரத்தில் சரியான கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்//
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க தோழர்.
ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மக்களுக்கு இக்கவிதை ஒரு அறிவுரை
சிவரஞ்சனிகருணாகரசு கூறியது...
ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மக்களுக்கு இக்கவிதை ஒரு அறிவுரை//
ம்ம்ம்ம்ம்ம்ம்
தங்களுடைய கவிதையில் சமூக நலன் தெரிகிறது!
விளை நிலங்கள் மட்டுமா?
ஏரிகளைக் கூட விற்றுவிட்டார்கள் ஐயா!
பரிசைத் தாண்டிய கவிதை...
பரிசைத் தட்டிச்சென்றதில் ஆச்சரியமில்லை!
'காதல்'-ல் சிக்காமல் சமூக நலன் வந்துவிட்டீர்கள்...
மிக முக்கிய நிகழ்வு இது!
பி.கு
ஐயா! தங்களின் பொன்னான தருணங்களை
எங்களுக்காக ஒதுக்கியமைக்கு நன்றி!
அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்கள்!
இன்றைய கவிதை கூறியது...
தங்களுடைய கவிதையில் சமூக நலன் தெரிகிறது!
விளை நிலங்கள் மட்டுமா?
ஏரிகளைக் கூட விற்றுவிட்டார்கள் ஐயா!
பரிசைத் தாண்டிய கவிதை...
பரிசைத் தட்டிச்சென்றதில் ஆச்சரியமில்லை!
'காதல்'-ல் சிக்காமல் சமூக நலன் வந்துவிட்டீர்கள்...
மிக முக்கிய நிகழ்வு இது!
பி.கு
ஐயா! தங்களின் பொன்னான தருணங்களை
எங்களுக்காக ஒதுக்கியமைக்கு நன்றி!
அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்கள்!
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
நானும் காதலில் சிக்கியவன் தான்...
ஆதரவு எப்போதும் உண்டு. நன்றி.
அன்பு தம்பி
கவிதை மிக அருமை! நிகழ்வில் நானும் ரசித்தேன்! காந்தக் கவிக்கு வாழ்த்துக்கள்!
கலை அக்கா
அருமையான கவிதை
அன்பு தம்பி
கவிதை மிக அருமை! நிகழ்வில் நானும் ரசித்தேன்! காந்தக் கவிக்கு வாழ்த்துக்கள்!
கலை அக்கா//
அக்காவின் வருகைக்கும் ...கருத்து தருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படிங்க.
வசந்தி கூறியது...
அருமையான கவிதை//
மிக்க நன்றி வசந்தி. ஏன் இவ்வளவு காலதாமதம்?
தங்களின் தோழி சிவரஞ்சனி நலமா?
ஒரு சில சுயநலவாதிகளின் பணத்தாசைக்கு பலி ஆகப்போகிறோம்..
என்று எம்மக்கள் உணருவார்கள்... சும்மா செதுக்கயுள்ளிர்கள்...
கருத்துரையிடுக